• Call Us : 90030 35559 , 98424 50963
Editor's Page

ஆசிரியரிடமிருந்து.

பட்ஜெட் -ல் அல்வா கிண்டுவது தெரியுமா...

டிஜிட்டல் இந்தியா திட்டத்தை அறிமுகம் செய்து, திரு. நரேந்திர மோடி தலைமையில் செயல்படும் பா.. அரசு இந்த ஆண்டிற்கான பட்ஜெட்யினை வெளியிட்டுள்ளது...!

பட்ஜெட்-ல் அல்வா கிண்டுவது தெரியுமா...? என்ற தலைப்பை பார்த்தவுடன், தமிழக அரசியல் வாதிகள் போலவே தேசிய கட்சியின் செயல்பாட்டினை விமர்சிக்க போகிறோம் என நீங்கள் நினைக்கலாம். அவ்வாறு விமர்சித்தாலும், பட்ஜெட் தாக்கல் செய்யும் போது அல்வா கிண்டுவது ஒரு சுவாரசியமான விஷயம். ஒவ்வொரு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் என அனைவரும் கோதுமை ஆல்வா செய்து சாப்பிட்ட பின்னரே பட்ஜெட் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது பல ஆண்டுகளாக நிலவி வரும் ஒரு அரசு சம்பிரதாயம். இதற்கென தனியாக பாத்திரங்கள், அல்வா செய்பவர்கள் என ஒரு செட் அப் இருக்கிறது. இது எதற்காக என்பது குறித்து பார்க்கலாம்.

நாட்டின் வரவு செலவு என்பது மிக முக்கியமானது மட்டுமின்றி ரகசியமானதும் கூட. பட்ஜெட் தயாரிப்பில் நிதி துரையின் அமைச்சர் மட்டுமின்றி கடை நிலை ஊழியர் வரை தொடர்பு உடையவர். அதனால், பட்ஜெட் தயாரிக்கும் போது மிகவும் கவனமாக இறுக்கப்படுகிறது. பட்ஜெட் ஆவணங்களை அச்சிடுவதற்கு தனியாக ஒரு அச்சகம் உள்ளது.

என்ன தான் நிதி அமைச்சர் அலுங்காமல் அம்சமாய் பட்ஜெட் அறிக்கை தாக்கல் செய்து அதை நாம் எல்லோரும் விமர்சித்தாலும், இதை தயாரிக்க இந்த அமைச்சகத்தில் பல ஊழியர்கள் இரவு பகலாக வேலை செய்கிறார்கள். இந்த வேலையின் போது ஊழியர்கள் போன் பயன்படுத்தவோ, பேசவோ கூடாது, குடும்பத்துடன் தொடர்பு வைத்துக்கொள்ள கூடாது, அலுவலகத்தில் தான் தங்க வேண்டும் என்ற சட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பட்ஜெட் அறிக்கை பக்கங்கள் ஆயிர கணக்கில் இருக்குமாம். அதிலும் இந்த முறை ரயில்வே பட்ஜெட், பொது பட்ஜெட் உடன் இணைக்கப்பட்டதால் அது பல மடங்கு அதிகமானது என அமைச்சக ஊழியர் வட்டாரம் கூறுகிறது.

சரி, இந்த அல்வா விஷயத்திற்கு வருவோம்... இந்திய பாரம்பரிய படி எந்த ஒரு நல்ல காரியத்தை செய்வதற்கும் முன்பாக இனிப்பு சமைத்து பரிமாறுவது வழக்கம். அதே போல் நாட்டின் பட்ஜெட் தாக்கல் செய்யும் போதும் இந்த அல்வா சமைத்து அமைச்சக ஊழியர்கள், நிர்வாகிகள் என அனைவருக்கும் அளிக்கப்படுகிறது. “பட்ஜெட் ரகசியங்களை நான் காப்பேன், அதை வெளியிட மாட்டேன்”, என ஒவ்வொரு ஊழியரும் ஏற்கும் உறுதி மொழியாக இந்த அல்வா பார்ட்டி(HALWA CEREMONY) கருதப்படுகிறது. இது பல ஆண்டுகளாக நிலுவையில் இருக்கும் வழக்கம்...

அடுத்தாக வழக்கம் போலான நமது விமரிசனங்களை முன்வைப்போம்... நமது விமர்சனங்கள் எப்போதாவது பரிசீலனை செய்யப்படாத என்று நாட்டின் முக்கிய அரசியல்வாதிகள் கூட காத்திருக்கும் நிலை இன்றைய ஆட்சி முறையில் உள்ளது என்றால் அது மிகையாகாது...!! ஏன் என்றால்…, பிரதமர் நாட்டில் இருக்கிறார் என கண்டுபிடித்து விமர்சனத்தை கொண்டு சேர்பதற்குள் போதும் போதும் என ஆகிவிடும்...!!

இந்த பட்ஜெட்-ல் நமது துறை சார்ந்த விஷயங்கள் இரண்டு உள்ளது. நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இலவச  சேவை வழங்க திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மேலும், ஸ்மார்ட் சிட்டி உருவாக்கும் திட்டமும் பட்ஜெட் வரைவில் சேர்க்கப்பட்டுள்ளது.

குறிப்பாக டிஜிட்டல் இந்தியா திட்டத்திலோ, கேபிள் டிவி மற்றும் சேனல்கள் பற்றியோ பட்ஜெட்-ல் குறிப்பிடப்பட்டதாக தெரியவில்லை. அந்நிய நேரடி முதலீட்டிற்கான மறைமுக வழி தான் இது என பல்வேறு துறை சார்ந்த பொருளாதார வல்லுநர்கள் கூறிவருகிறார்கள்..!!

ஆக, இந்த பட்ஜெட் இந்த அரசின் கடைசி பட்ஜெட்... இனி இடைக்கால பட்ஜெட் மட்டுமே உள்ளது...!! இனி அடுத்த பாராளமன்ற தேர்தலுக்கு முன்னர் இந்த மத்திய அரசு என்னவெல்லாம் செய்யப்போகிறது என்று பொறுத்து இருந்து பார்க்கலாம்.

கடந்த தமிழ்நாடு மாநில பட்ஜெட்-ல் கூட இலவச செட் டாப் பாக்ஸ் தொடர்பான விஷயங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும், பொது மக்களுக்கு விலையில்லா செட் டாப் பாக்ஸ் வழங்கி வருகிறது அரசு கேபிள் டிவி(TACTV)... என்ன தான் சிலர் முரண்பட்டாலும், பல கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவியினால் ஆதாயம் அடைந்ததாக கூறுகிறார்கள்... கருத்துக்கள் எதுவாயினும் உள்ளதை உள்ளபடி டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் பதிவு செய்ய தயாராக உள்ளது.

கேபிள் டிவி டிஜிட்டல் மையம் என்ற மத்திய அரசின் அடுத்த திட்டம் தரை வழி ஒளிபரப்பின டிஜிட்டல் தொழில்நுட்பத்தை அமல்படுத்துவதே. தற்போது இது நிலுவையில் இருக்கும் தொழில்நுட்பம் தான். ஆனால், தூர்ஷார்ஷன் சேனல்கள் மட்டுமே உள்ள இந்த தளத்தில் தனியார் சேனல்களும் வருமா? கேள்விகளுடன் தொடர்வோம்... பயணத்தின் போதே ஆங்காங்கே பதில் கிடைக்கலாம்...!!

DIGITECH ONSITE 2018:

இந்த DIGITECH ONSITE எனும் முயற்சி மூலம் நான் எனது தொழில் சார்ந்த நண்பர்களை, உறவினர்களை ஒருங்கிணைத்து டில்லி அழைத்து செல்லலாம். அங்கு நடைபெறும் ஆசியாவின் மிக பெரிய கேபிள் கண்காட்சியாக CONVERGENCE, மேலும் செட் டாப் பாக்ஸ் மற்றும் இதர பொருட்கள் உற்பத்தி செய்யும் ஆலையினை நேரில் சென்று பார்வையிடுவது. உலக அதிசயத்தின் ஒன்றான தாஜ் மகால் சுற்றுலா, மேலும், டில்லியின் உள்ள சுற்றுலா தளங்கள், உணவு வகைகள், கலாச்சாரம் ஆகியவற்றை கண்டு கழிக்கும் வகையிலான ஒரு தொழில் சுற்றுலா ஏற்பாடு செய்திட வேண்டும் என்ற சிந்தையின் வெளிப்பாடு தான் இந்த DIGITECH ONSITE 2018. இதை பற்றி முதன் முதலில் பேசும் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழின் தொழில்நுட்ப ஆலோசகரும், கேபிள் கேர் சென்டரின் உரிமையாளரும், எனது நண்பருமான திரு. வடிவேலு  அவர்கள் மிக  ஈடுபாட்டுடன் இதை முன்னெடுக்கலாம் என்று கூறினார். அவரும் இதே போன்ற எண்ணங்களும், ஆசைகளும் கொண்டவர். மேலும், சர்வதேச அளவிலும் தேசிய அளவிலும் இந்த துறையில் மிக பெரிய நட்பு வட்டாரம் கொண்டவர். இது போன்ற கண்காட்சிகளுக்கு தவறாமல் அவர் சென்று வருவது குறிப்பிடத்தக்கது. அதனால் எமது டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழும், மதுரை கேபிள் கேர் சென்டர் நிறுவனமும் இணைந்து இந்த DIGITECH ONSITE 2018 முயற்சியை முன்னெடுக்கிறது.

இதற்கு SPEC, WILLETT, AIRCON, NSN ELECTRONICS போன்ற பல நிறுவனங்கள் பங்கேற்று தங்களது ஒத்துழைப்பை நல்கியுள்ளனர். மேலும், பல்வேறு நிறுவனங்களில் பங்குதாரர்களாகவும், பணி செய்தும் வரும் நண்பர்கள் பலர் இதற்காக தங்கள் ஆலோசனைகளையும், ஒத்துழைப்பையும் கொடுத்துள்ளனர். இது முழுக்க முழுக்க கேபிள் டிவி ஆப்ரேட்டர்களின் தொழில் மேம்பாடு கருதி எடுக்கப்பட்ட முயற்சி. இதை எந்த லாப நோக்கத்துடனும் நாங்கள் செய்யவில்லை என்பதை பதிவு செய்கிறேன்.

இந்த தொழில் சுற்றுலா பற்றிய முழு அட்டவணை & சிறப்பு அம்சங்கள் உள்ளே...

மேலும், பல விஷயங்களை இந்த இதழில் கொடுக்க முயற்சித்துள்ளோம்...

இனி வரும் பக்கங்கள் உங்களுக்காக...


- என்றும் அன்புடன்,


D அன்பழகன்


ஆசிரியர் / வெளியீட்டாளர்


டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்


+91 98421 50963


Subcribe
SUBSCRIBE