• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஏன் இன்டெர்நெட் ஆப்பரேட்டர்களாகவும் மாற வேண்டும்?கோவை ரவீந்தரன் அவர்களின் கட்டுரை தொகுப்பு

கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் ஏன் இன்டெர்நெட் ஆப்பரேட்டர்களாகவும் மாற வேண்டும்? நண்பர்களே! ’வாட்ஸ்- ஆப்’ எனப்படும் அருமையான தொடர்பு சாதனம் வழியாக பயனுறும் பலவேறு நிகழ்வுகள் நடந்தேறி வருகின்றன. நமது தொழிலை பொருத்தவரை தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் நண்பர்களை தொடர்பு கொள்ளும் எளிமையான சாதனம் ‘வாட்ஸ்- ஆப்’ என்றால் மிகையாகாது. நான் கடந்த 10 ஆண்டுகளாக பல்வேறு இடர்பாடுகளை கடந்து தற்போது வெற்றிகரமாக வயர்லெஸ் தொழில் நுட்பத்தில் இன்டெர்நெட் சேவை வழங்கி வருகிறேன். ’வாட்ஸ்- ஆப்’ எனப்படும் இந்த அரிய சாதனத்தின் மூலம் எனது அனுபவங்களை முகம் தெரியாத கேபிள் ஆப்பரேட்டர்களுடன் பகிர்ந்து கொண்டேன். அதன் தொடர்ச்சியாக குடந்தை திரு.மனோகரன் மற்றும் கோவை திரு.டிஜிகான் ராஜா அவர்களின் உதவியோடு கடந்த ஜூலை 22 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 400 கேபிள் ஆப்பரேட்டர்கள் தன்னார்வத்துடன் கலந்து கொண்ட “ இன்டெர்நெட் பயிலரங்கம்” கோவையில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இந்த பயிலரங்கத்தின் மூலமாகத்தான் தற்போது நமது ‘அறிவோம்-புரிவோம் இணையம்’ தளத்தின் முதுகெலும்பாக விளங்கும் திருச்செந்தூர்.திரு.பொன்ராஜ், மற்றும் திருப்பூர்.திரு.தங்கராசு, சென்னை திரு.எல்.ஆர்.சீனிவாசன், திரு.தைரியநாதன், திரு.கே.கே.நகர் பாலு மற்றும் ஏராளமான தமிழகம் தழுவிய ஆப்பரேட்டர்களின் நட்பும் தொடர்பும் கிடைத்தது. கோவை பயிலரங்கத்தின் தொடர்ச்சியாக மதுரையில் ஆப்பரேட்டர்கள் கில்டு சார்பாக நடைபெற்ற எக்ஸ்போவில் கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி எனது “வயர்லெஸ் தொழில் நுட்ப கருத்தரங்கு” நடைபெற்றது. சரி, இனி விசயத்திற்கு வருவோம். பாகம் - 2 நண்பர்களே! வரும் 2020 ஆம் ஆண்டு (இன்னமும் 4 ஆண்டுகள்) நம்மில் பெரும்பான்மையோர் கேபிள் டிவி தொழிலில் நீடித்திருப்போமா என்பது கேள்விக்குறி!!? ஏனெனில் அந்த தருணத்தில் யாரெல்லாம் கேபிள் டிவி தொழிலுடன் இணைந்து இன்டெர்நெட் டும் செய்வார்களோ அவர்களால் மட்டுமே கேபிள் தொழிலில் நீடித்திருக்க முடியும். அதற்கான காரணங்கள் என்னவாக இருக்கும் ??? அன்றைய சூழலில் கேபிள் டிவி தொழிலின் முக்கிய அங்கமாக இன்டெர்நெட் இருக்கும். அதாவது நீங்கள் இன்டெர்நெட் சர்வீஸும் கொடுத்தால் மட்டுமே கேபிள் டிவி ஆப்பரேட்டராக முடியும். அதே நேரத்தில் வெறுமனே இன்டெர்நெட் சர்வீஸ் மட்டும் வழங்கும் நபர்கள் அனைவரும் கேபிள் டிவி ஆப்பரேட்டராகவும் மாறியிருப்பார்கள்!!! அன்றைய சூழலில் சாதாரணமாக இன்று 1 – 2 Mbps ஸ்பீடில் இன்டெர்நெட் ப்ளான் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அன்று 50 – 100 Mbps ஸ்பீடு இன்டெர்நெட் ப்ளான் பயன்படுத்துவார்கள். இன்றைய சூழ்நிலையில் 1 – 2 Mbps பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் You Tube, Hot Star or any LIVE STREAM னை தற்போதுள்ள ஸ்பீடில் பார்க்க நினைத்தால் Buffer (விட்டு விட்டு) –ல் தான் பார்க்க இயலும். ஆனால் 2020 –ல் 50 -100 Mbps ஸ்பீடில் இணைப்பு வைத்திருப்பவர்கள் எந்த ஒரு சானலின் நிகழ்ச்சியையும் கொஞ்சம் கூட Buffer இல்லாமல் பார்க்க இயலும். இன்று நாம் டிஜிட்டல் கேபிள் டிவி யினில் நுழைந்திருக்க காத்திருக்கிறோம். டிஜிட்டல் கேபிள் டிவி வழியாக சுமார் 900 முதல் 1000 சானல்கள் வரை கூட காண இயலும். ஆனால் 2020 –ல் இந்திய அளவிலான சானல்கள் மட்டுமின்றி உலகளாவிய சானல்கள் இன்டெர்நெட் வழியாக PPV (Pay Per View) அதாவது நாம் பார்க்கும் நிகழ்ச்சியின் ஒவ்வொரு வினாடிக்கும் கணக்கிட்டு செலுத்தி பார்க்கும் முறையில் 1000 சானல்கள் அல்ல அதன் பலமடங்கு சானல்கள் வரிசை கட்டி “என்னைப் பார்” என்று கை கட்டிக் காத்திருக்கும். PPV முறையில் பணம் நேரடியாக ஒளிபரப்பு நிறவனத்திற்கு வாடிக்கையாளர்களால் செலுத்தப்பட்டால் நம் கதி என்ன ??? அப்போது நாம் இன்டெர்நெட் வழங்குனராக இருந்தால் மட்டுமே நாம் இந்த தொழிலின் அடுத்த பரிமாணம் மூலம் சம்பாத்தியம் பெற இயலும். அதற்கு நீங்கள் இன்று இன்டெர்நெட் சேவையையும் தொடங்கி 2020 – ற்கான அஸ்திவாரம் போடவேண்டும் பாகம் - 3 நண்பர்களே! இன்டெர்நெட் என்னும் தொழிலை ஏன் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களும் செய்யவேண்டும் என எனது முதல் இரண்டு அத்தியாயங்களில் எழுதியிருந்தேன். சரி, அப்ப இன்டெர்நெட் பற்றி தெரியாத, புரிதல் இல்லாத யார் வேண்டுமானாலும் இதை இறங்கி செய்ய இயலுமா என்றால் முடியும் என்றுதான் சொல்வேன். இன்டெர்நெட் என்னும் வார்த்தையினை நான் இனி “இணையம்” என்றே எழுதுகிறேன். இணையம் தொழிலில் கடைக்கோடி ஆப்பரேட்டரும் இறங்கி செய்யமுடியும். கடந்த 25 வருடங்களுக்கு முன்னர் கேபிள் டிவி ஆரம்பிக்கப்படும் முன்னர் அத்தொழிலில் அதற்கு முன்னர் யாரும் ஈடுபட்டதில்லை. நாம் ஒவ்வொருவரும் நமக்கு நாமே ஆசானாக இருந்து கேபிள் டிவி தொழிலை கற்றும், தெரிந்தும், வளர்ந்தும் வந்துள்ளோம். ஆனால் இன்று இணையம் தொழிலானது ஒரு வளரும் தொழிலாக உள்ளது. இணையம் தொழிலில் இன்று ஈடுபட்டுள்ளவர்கள் பெரும் நிறுவனங்களும், இத்தொழிலின் மேல் ஆர்வம் கொண்டவர்களும், இத்தொழில், வளரும் தொழில்-வளம் தரும் தொழில் என்று தெரிந்து கொண்டவர்கள் மட்டும்தான். ஆனால், நண்பர்களே, இணையம் தொழிலானது வளரும் தொழிலாக இருந்தாலும் இன்னமும் பெரும்பான்மையான இடங்களைச் சென்று அடையாத தொழிலாகத்தான் இன்றும் உள்ளது. இந்த காலகட்டத்தில் தான் ஆப்பரேட்டர்களான நாம் அனைவரும் இருக்கிறோம். அதாவது அந்த பெரும்பான்மையான இடங்களை நிரப்பப் போவது நாம்தான். இதற்கு பெரும் உந்துசக்தியாக இருப்பது கேபிள் டிவி ஆப்பரேட்டர்களான நமது வாடிக்கையாளர்கள் தான். நீங்கள் அனைவருமே உங்கள் வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்திப்பாருங்கள். மாநகரில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 50 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். நகரில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 40 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். குறுநகரில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 30 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். சிற்றூர்களில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 20 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். கிராமங்களில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 10 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். குக்கிராமங்களில் உள்ள கேபிள் டிவி வாடிக்கையாளர்களில் 100 க்கு 5 பேர் ஏதாவது ஒரு நிறுவன இணைய வாடிக்கையாளராக இருப்பார்கள். ஆக, மாநகரிலிருந்து குக்கிராமம் வரை இணையப் பயனாளிகள் சதவிகித அடிப்படையில் நீங்கள் இணையத் தொழிலில் ஈடுபட்டாலும் உங்களின் வசம் வாடிக்கையாளராக மாறுவதற்கு அதிகவாய்ப்புகள் உள்ளது. இதற்கு உதவியாக இருப்பது நமது 25 வருட கேபிள் தொழிலில் நமது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வந்த சேவை என்றால் அது மிகையாகாது. அப்போது ஏற்கனவே இணைய இணைப்பு வைத்துள்ளவர்களை நமது வாடிக்கையாளராக மாற்ற முடியுமா என்றால் 70 முதல் 80 சதவிகித வாடிக்கையாளரை மாற்ற முடியும்.