• Call Us : 90030 35559 , 98424 50963
TCOA மாவட்ட மாநாடுகள்...

தமிழக பொது நல சங்கத்தின் மாவட்ட மாநாடுகள் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. விழுப்புரம், மதுரை மற்றும் சேலம் போன்ற இடங்களில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்தந்த மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அந்த பகுதி ஆப்பரேட்டர்கள் பங்கேற்றனர். டிஜிட்டல் பற்றிய கலந்தாய்வு கூட்டமும். அந்த பகுதியில் நிலுவும் ஆபரேட்டர்கள் பிரச்சனைகள் குறித்தும் கலந்தாய்வு செய்யப்பட்டது. விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட மாநாடு ஜனவரி 10 ம் தேதி விழுப்புரத்தில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு. கந்தன் மற்றும் இதர மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். கடலூர், சேலம், திருவண்ணாமலை, பாண்டிச்சேரி போன்ற மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். திரு. சகிலன் மற்றும் திரு. ஆறுமுகம் கலந்து கொண்டு ஆப்ரேட்டர்களுக்கு டிஜிட்டல் தொழில் பற்றிய தெளிவான விளக்கமும். சங்கத்தின் செயல்பாடுகள் குறித்தும் விளக்கினார்கள். மாநில பொதுச்செயலர் திரு. தாமோதரன் மற்றும் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள். விழுப்புரம் மாவட்ட TCOA சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தின் போது கருத்து கேட்ட பின்னர் அறிமுகம் செய்யப்பட்டனர். மதுரை: மதுரை மாவட்ட மாநாடு உசிலம்பட்டியில் ஜனவரி 19 ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டிலும் திரு. சகிலன் மற்றும் திரு. ஆறுமுகம் கலந்து கொண்டனர். TCCL டிஜிட்டல் சிக்னல் உசிலம்பட்டியில் நிறுவப்படுவது பற்றி பேசப்பட்டது. டிஜிட்டல் கட்டுப்பாட்டு அறையினை மேற்கொண்டு நடத்த திரு. குமரேசன் ரூபாய் 5 லட்சம்மதிப்பிலான வரையோலையினை TCCL நிறுவனர் திரு. சகிலன் அவர்களிடம்கொடுத்தார். தலைவர் திரு. ஆறுமுகம் பேசுகையில்., ஆப்ரேட்டர்களின் வாழ்வாதாரம் சிறக்கவும், தொழில் பாதுகாப்பு செய்து தரவும் TCOA எப்போதும் விடாமல் வேலை செய்யும் என்று கூறினார். பின்னர், உள்ளூர் MSO க்கள் மூலம் ஆப்ரேட்டர்களுக்கு வரும் நெருக்கடிகளை சங்கம் சட்ட ரீதியாகவும், சமூகமாகவும் சரி செய்து தரும் என்றும் அவர் தெரிவித்தார். நாட்டில் நடைபெறும் நிகழ்வுகளை எல்லா ஊடகமும் பேசினாலும், அந்த ஊடகத்தை எல்லா மக்களும் எடுத்து செல்வது கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தான் என்றும் அவர் பெருமிதம் கொண்டார். திரு. சகிலன் பேசுகையில் TCCL நிறுவனத்தின் DIGITAL செயல்பாடுகள் பற்றியும் அதன் சிறப்புகள் பற்றியும் விளக்கினார். தமிழக கேபிள் டிவி வரலாற்றில் ஆப்ரேட்டர்களுக்கு இது வரை நிலவிய இடர்பாடுகள் பற்றியும் அதற்கு TCOA சங்கம் எடுத்த நடவடிக்கை மூலம் பெறப்பட்ட தீர்வுகள் பற்றியும் பேசினார். மதுரை மாவட்ட TCOA சங்கத்தின் புதிய நிர்வாகிகள் இந்த கூட்டத்தின் போது கருத்து கேட்ட பின்னர் அறிமுகம் செய்யப்பட்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திரு. M.G.M கண்ணன் மற்றும் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாவட்ட மாநாடுகள்: தமிழக கேபிள் டிவி ஆப்பரேட்டர்கள் பொது நலச்சங்கத்தின் மாநில 16 வது பொதுக்குழு பிப்ரவரி மாதம் 28 தேதி திருப்பூரில் நடைபெற உள்ளது. முன்னதாக பல்வேறு இடங்களில் மாவட்ட மாநாடுகள் ஏற்பாடு செய்யப்பட்டு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளால் நடத்த பட்டு வருகிறது. மேலும், தமிழகத்தின் பல இடங்களில் TCCL சிக்னல் கொண்டு செல்லும் பணியும் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதன் தொகுப்பு பின் வருமாறு... வேலூரில் பிப்ரவரி 12, கடலூரில் பிப்ரவரி 14, திருச்சி மற்றும் பட்டுக்கோட்டையில் 15, திருவாரூர்ல் பிப்ரவரி 16, சேலம் மற்றும் நாமக்கல்லில் பிப்ரவரி 17 ஆகிய திதிகளிலும் நடைபெறும் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அந்தந்த பகுதியை சேர்ந்த ஆப்ரேட்டர்களும் இதில் திரளாக கலந்த கொள்ள இருப்பதாக தெரிகிறது. பொதுவாக எல்லா மாவட்ட மாநாடுகளிலும் வேகமா பரவி வரும் டிஜிட்டல் கேபிள் பற்றியும் சங்க செயல்பாடுகள் பற்றியும், தொழில் மேம்பாடு பற்றியும் விரிவாக கலந்தாய்வு செய்யப்படுகிறது.