• Call Us : 90030 35559 , 98424 50963
T.V. ரமேஷ் - ன் பேட்டிக்கு ஆப்ரேட்டர்களின் கருத்து...

டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் செய்தி எதிரொலி... கடந்த 2017 ஜனவரி மாத பதிப்பில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழில் 50ம் பக்கத்தில் மதுரை கேபிள் டிவி ஆப்பரேட்டர் திரு. TV ரமேஷ் அவர்களின் பேட்டி வெளியிடப்பட்டது. பெட்டியை முழுதாக படிக்க ஜனவரி மாத இதழில் படிக்கலாம் அந்த கட்டுரைக்கு தமிழகத்தின் பல்வேறு தரப்பில் பதில் கருத்துக்கள் எங்களுக்கு வந்தது. பலரும் WHATS APP ல் இந்த கட்டுரைக்கு அவர்கள் கருத்தை தெரிவித்தனர். கன்னியாகுமரி மாவட்டம் பணகுடி என்ற பகுதியை சேர்ந்த திரு. ஜோசப் என்ற ஆப்பரேட்டர் அவரது கருத்தை கடிதம் மூலமாக நமக்கு அனுப்பி இருந்தார். அந்த கடிதத்தில் அவர் கூறியதாவது: ஆப்ரேட்டர்கள் அனைவரும் ஒரு இலக்கை நோக்கி துரிதமாக பயணித்து கொண்டிருக்கும் போது, “டிஜிட்டல் கேபிள் அமலாக்கம் செய்ய இன்னும் 10 ஆண்டுகள் ஆகும்” என்ற வார்த்தை எதிர்மறையாக உள்ளது எனவும். அது போன்ற வார்த்தைகள் தவிர்க்க பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இது போன்ற கருத்துக்களை தவிர்க்கலாம் எனவும் இது ஆக்கபூர்வமானது இல்லை எனவும் அவர் கருத்தை தெரிவித்திருக்கிறார். இதே போன்று தூத்துக்குடி, தென்காசி பகுதிகளை சேர்ந்த பல ஆப்ரேட்டர்கள் தங்களது எதிர்ப்பு கருத்தை வாய்மொழியாக தெரிவித்துள்ளனர். பல்வேறு ஆப்ரேட்டர்கள் தாங்கள் குழப்பத்தில் இருப்பதாகவும் பரவலாக தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர் இந்நிலையில் திருப்பூரை சேர்ந்த பிரபல ஆப்பரேட்டர் ஒருவர் T.V. ரமேஷ் அவர்களின் இந்த கருத்து சரி தான் என்று கூறும் வண்ணம் அவரது கருத்தை தொலைபேசி மூலம் நமக்கு தெரிவித்து உள்ளார். இது போன்ற முரண்பட்ட கருத்துக்களுக்கு திரு. TV ரமேஷ் பதில் தருவாரா...!! ஆப்பரேட்டர் பிரதிநிதியாக "டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர்" தனது கடமையை செய்யும்...!! கருத்துக்களை பிரசுரம் செய்வதன் மூலம் தெளிவு பிறக்கும் என்று நம்புகிறோம். காத்திருப்போம் விளக்கத்திற்காக...!