• Call Us : 90030 35559 , 98424 50963
காரைக்கால் டிஜிட்டல் ஒளிபரப்புகள்.... ஆப்ரேட்டர்களுக்குள் கருத்து வேறுபாடு... விரிவான விளக்க கட்டுரை.

VK டிஜிட்டல் நிறுவனம் காரைக்கால் பகுதியில் KL டிஜிட்டல் என்ற நிறுவனத்துடன் சிக்னல் விநியோக ஒப்பந்தம் செய்து செயல்படுகிறது. இதன் இடையில் முரண்பாடான கருத்துக்கள் காரைக்காலை மையபடுத்தி எழுந்துள்ளது. டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழுக்கு வந்த செய்தியும் அதற்கு VK DIGITAL நிறுவனத்தின் சார்பில் திரு. சுந்தர் கூறிய விளக்கமும் பின்வருவன. டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் குழுவிற்கு வந்த செய்தி: காரைக்காலில் புறநகர் பகுதி ஆப்பரேட்டர்கள் சிலர் தற்போதைய நிறுவனத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் VK டிஜிட்டலில் சேர முடிவெடுத்து அதற்கான ஒப்பந்தம் செய்து சிக்னல் ஒளிபரப்புக்கான ஆயத்த வேலைகளில் ஈடுபட்டனர். ஆனால், இதில் சில Non Operator எனப்படும் தொழிலுக்கு புதிதானோர் தங்கள் செல்வாக்கை உயர்த்தி வந்ததாகவும், இதனால் ஆப்பரேட்டர்கள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது Non Operatorகள் என குறிப்பிடப்படும் திரு. சதாத், திரு. வெற்றி, திரு. டொமினிக், திரு. பாலாஜி மற்றும் சிலர் நேரடியாக பாலிமரின் VK டிஜிட்டலில் தாங்கள் தான் காரைக்காலில் நடத்தப்போவதாக வெளிப்படையாக கூறி வருவதால் முக்கிய ஆப்பரேட்டர்கள் சிலரும் விலக இருப்பதாக வட்டார தகவல்... இது குறித்து VK DIGITAL சார்பில் ஈரோடு திரு. சுந்தர் அவர்கள் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் அனுப்பிய வாட்ஸ் ஆப் செய்தி பின் வருமாறு: காரைக்காலில் ஆப்பரேட்டர்கள் இணைந்து உருவாக்கிய KL DIGITAL நிறுவனம் VK DIGITAL நிறுவனத்துடன் இணைந்து டிஜிட்டல் தொழில் செய்ய ஒப்பந்தம் செய்து அதற்கான ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இன்று வரை ஆப்பரேட்டர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் சிக்னல் கொடுக்கப்பட வில்லை. அப்படி இருக்கும் பட்சத்தில் எந்த ஆதாரமும் இல்லாமல் எங்களது நிறுவனம் ஆபரேட்டர் அல்லாத நபருக்கு சிக்னல் கொடுத்திருப்பதாக தங்களது இணைய தளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. ஒரு செய்தியை வெளியிடும் முன் அதன் உண்மை தன்மை அறியாமல் வெளியிடுவது பத்திரிக்கை தர்மமா என்று யோசிக்க வேண்டும். இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது ஏதோ உள்நோக்கத்துடன் யாருடைய தூண்டுதலின் பேரிலோ ஒரு வதந்தியை பரப்ப தாங்கள் முயல்வதாக தோன்றுகிறது. ஒருவேளை நீங்கள் சொன்னது போல் அங்கு நடந்திருந்தால் அதற்கான ஆதாரத்தை வெளியிடவும். அவ்வாறு ஆதாரமற்ற செய்தியை வெளியிட்டதற்கு உடனே வருத்தம் தெரிவித்து மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டும். என்று ஆதங்கத்துடன் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டருக்கு செய்தி அனுப்பியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், மேலே, NON OPERATORS என கூறப்படும் நபர்கள் ஈடுபட்டது உண்மை தான். ஆனால் அவர்கள் தொழில் ஒருங்கிணைப்பு மட்டுமே செய்வார்கள். பின்னர், அது தொழில் செய்து வரும் ஆப்பரேட்டர்களிடமே ஒப்படைப்பு செய்யப்படும் என அவர்கள் கூறினார்கள். இது குறித்து காரைக்காலில் கூட்டம் நடத்தி ஆப்பரேட்டர்களுக்கு தெளிவுபடுத்தி விட்டோம் எனவும் திரு. சதாத் மற்றும் திரு. வெற்றி தரப்பிலும் இது எங்கள் வேலை இல்லை எனவும் ஆப்பரேட்டர்களே தொடர்ந்து தொழில் செய்வார்கள் எனவும் உறுதி செய்யப்பட்டுள்ளது எனவும் கூறுகிறார். ஆப்பரேட்டர் அல்லாதோர் தொழிலில் ஈடுபட கூடாது என்பதுவே எங்கள் கொள்கை என்பதால் நாங்கள் எந்த வகையிலும் இத்தகைய செயலை ஆதரிக்க மாட்டோம் என்பது திரு. சுந்தர் தரப்பு வாதமாக உள்ளது. அரசு கேபிள் இல்லாத காரைக்கால் சந்தையிலும் இது போன்ற கருத்து வேறுபாடுகள் நிலவ தான் செய்கிறது. ஆப்பரேட்டர்கள் ஒற்றுமையுடன் தொழில் செய்தால் தொழில் சிறக்கும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. இவ்வாறு ஒரு புறம் விவாதங்கள் தொடர, DIAMOND TV என்ற காரைக்கால் டிஜிட்டல் MSO, KL DIGITAL நிறுவனத்தின் மீது ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கின் தீர்ப்பாக KL DIGITAL நிறுவனம் செயல்பட இடைக்கால தடையினை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த தீர்ப்பு காரைக்காலில் KL டிஜிட்டல் நிறுவனத்திற்க்கே, இது எந்த வகையிலும் VK டிஜிட்டல் நிறுவனத்தை சேராது. இதன் தெளிவான புரிதல் இல்லாமல் தவறான செய்திகளை வாட்ஸ் ஆப் மூலமாகவோ இதர சமூக வலைதள ஊடகங்கள் மூலமாகவோ பரப்ப வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். மேலே குறிப்பிடப்பட்டுள்ள வழக்கு பற்றியும் அதன் தீர்ப்பு பற்றியும் விரிவான கட்டுரை விரைவில் வெளியிடப்படும். மேலும், இந்த கருத்து வேறுபாட்டினால் திரு. சு. சந்தானம் மற்றும் திரு. சுந்தர் அவர்கள் அறியாமையில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் கேபிள் டிவி ஊடகத்தை சாடியது குறிப்பிடத்தக்கது. இதனால் இவர்கள் இருவரின் உழைப்பும் அதன் ஆதங்கமும் புலப்படுகிறது. கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு பயனுள்ள மற்றும் நடுநிலை தகவல்களை தரும் ஊடகமாக இந்த டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் செயல்படும் என்பதை மட்டும் பதிவு செய்ய விரும்புகிறோம். அப்படியே வெளியிடும் செய்திகள் "முட்டாள்" தனத்துடன் இருப்பதாக கருதினால் "அறிவாளிகள்" அதை திருத்தவும் இடம் கொடுக்கிறது இந்த டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர். மேலும், கேபிள் டிவி செய்திகளை தெரிந்து கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள். #DigitalMediaReporter