• Call Us : 90030 35559 , 98424 50963
நேரம் தருவாரா எடப்பாடி திரு. பழனிசாமி… தமிழக முதல்வருக்கு DGVP சேகர் கடிதம்

தமிழக முதல்வர் மாண்புமிகு திரு. பழனிசாமி அவர்களுக்கு கேபிள் சங்க கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. DGVP சேகர் ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறிய விஷயங்களின் தொகுப்பு பின் வருமாறு... தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்ததற்கு வாழ்த்துக்களை தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் மொத்தம் 38,000 கேபிள் டிவி உரிமையாளர்கள் உள்ளனர் எனவும். அதில் 26000 பேருக்கு மேற்பட்டோர் அரசு கேபிள் டிவி நிறுவனத்துடன் இணைந்து தொழில் செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 100 க்கும் மேற்பட்டோருக்கு டிஜிட்டல் MSO உரிமம் வழங்கியுள்ளது எனவும், அதை நம்பி அவர்களும் கோடி கணக்கில் முதலீடு செய்துள்ளார்கள் எனவும் அவர் சுட்டி காண்பித்துள்ளார். மேலும் அந்த கடிதத்தில், நம்மை விட்டு பிரிந்த முன்னாள் முதல்வர் செல்வி. ஜெ. ஜெயலலிதா அவர்களை குறிப்பிட்டு, அவர் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும் என்று அளித்த உறுதியினை முன்வைத்து. அதே போல் தங்களின் (தற்போதைய முதல்வர் திரு. பழனிச்சாமி அவர்கள்) தலைமையில் செயல்படும் அரசும் அந்த நிலையை காப்பாற்றும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து சங்க பிரதிநிதிகளும் இணைந்து கேபிள் ஆபரேட்டர்கள் நலன் பற்றிய கருத்துக்களை முன் வைக்க விரும்புவதாகவும். எனவே, முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கி தரும்படியும் அவர் கடிதம் எழுதியுள்ளார்.