• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு பொது அறிவிப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர் மறுப்பு வழங்க வேண்டும்

கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு பொது அறிவிப்பு விடுத்த மாவட்ட ஆட்சியர் மறுப்பு வழங்க வேண்டும். மத்திய அரசு விதிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் முரண்பட்டதாக தமிழக கேபிள் ஆப்பரேட்டர் பொது நலச்சங்க தலைவர் திரு. ஆறுமுகம் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய அறிவிப்பில் அவர் கூறியதாவது: கேபிள் தொழில் மத்திய அரசு கட்டுபாட்டிற்குள் உள்ளது எனவும் மாவட்ட ஆட்சியர் தான் அதற்கு நோடல் ஆபீசர் என்றும், அத்தகைய சூழலில் இன்டர்கனேக்சன் ஆக்ட் 4A படி 21 நாட்கள் முன்னதாக பொது அறிவிப்பு கொடுத்து பொது மக்களுக்கு (வாடிக்கையாளர்களுக்கு) பாதிப்பின்றி இதனை முன்னேடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதற்கு முரணாக, மாவட்ட ஆட்சியர் பெயரில் ஆப்பரேட்டர்களை மிரட்டும் வண்ணம் பகிரங்கமாக ஒரு அறிவிப்பினை(நோட்டீஸ்) அரசு கேபிள் டிவி பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது என்றும் அவர் அந்த அறிவிப்பில் கூறியுள்ளார். நிலுவையில் இருக்கும் பாக்கி தொகையை வசூலிக்க மாவட்ட ஆட்சியர் தன்னிச்சையாக பத்திரிக்கையில் அறிவிப்பு வெளியிட்டது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் அவர் கூறியுள்ளார். மத்திய அரசு பிரதிநிதியாக நீங்கள், மத்திய அமைச்சகத்திடம் இருந்து டிஜிட்டல் MSO உரிமம் பெற்றவர்களை ஆதரிப்பதை விடுத்து முரணாக அறிவிப்பு வெளியிட்டமைக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என திரு. ஆறுமுகம் கூறியுள்ளார். அல்லாத பட்சத்தில் வருகிற மே மாதம் 10 ம் தேதிக்கு பின்னர் மத்திய அரசின் பார்வைக்கு இந்த அறிவிப்பினை எடுத்து சென்று சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மாண்புமிகு திரு. கணேஷ் விளக்கம் தருவாறா? #DigitalMediaReporter