• Call Us : 90030 35559 , 98424 50963
அரசு கேபிள் MSO மீது காவல்துறையில் புகார்.

பாரத் டிஜிட்டல் விஷன் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு சொந்தமான OPTICAL FIBER CABLE களை ஈரோட்டில் அரசு கேபிள் MSO ரமேஷ் திருடியதாக SP அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரத் டிஜிட்டல் விஷன் எனும் Digital MSO நிறுவனம் திருச்சியை தலைமை இடமாக கொண்டு திருச்சி, புதுக்கோட்டை மற்றும் ஈரோடு மாவட்டத்தின் பல இடங்களுக்கு தனது பங்குதாரர்கள் மூலம் டிஜிட்டல் சிக்னல் கொண்டு சென்றுள்ளது. இந்நிலையில் ஈரோட்டை சேர்ந்த திரு. அன்புதம்பி என்ற பங்குதாரர் ஈரோடு பஸ் நிலையம் முதல் பல இடங்களுக்கு சிக்னல் கொண்டு செல்ல சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் Optical Fiber கேபிள் பதித்து வைத்துள்ளார். இது மர்மான முறையில் துண்டிக்கப்பட்டும்,திருடப்பட்டும் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த திரு. அன்புதம்பி பலரிடம் விசாரித்த போது அரசு கேபிளை சேர்ந்த பொறுப்பாளர் இத்தகைய செயலில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பெயரில் ஈரோடு காவல்துறை எஸ்.பி. திரு. சிவக்குமார் அவர்களிடம் புகார் மனு ஒன்றினை அளித்துள்ளார். இதனை விசாரிக்க டவுண் டி.எஸ்.பி க்கு ஈரோடு எஸ்.பி. பரிந்துரை செய்திருப்பதாக தகவல். இதனை தொடர்ந்து, இந்த சம்பவத்திற்கு பல கேபிள் சங்கங்கள் மூலம் எதிர்ப்புகள் வலுத்து வருகிறது. அரசு கேபிள் டிவி பிரதிநிதியே இது போன்ற செயலில் ஈடுபட்டது பற்றி அரசு தரப்பு நிலைப்பாடு என்ன? #DigitalMediaReporter