• Call Us : 90030 35559 , 98424 50963
செட் டாப் பாக்ஸ் ஏலத்தை அறிவித்தது TACTV

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மத்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் 17.4.2017 அன்று டிஜிட்டல் DAS உரிமம் வழங்கி ஆணையிட்டது. அதனை தொடர்ந்து தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்திடம் ஏற்கனவே பதிவு செய்து LCO எண் பெற்றுள்ள உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள், இந்நிறுவனத்தின் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலைப் பெற்று தொடர்ந்து தொழில் செய்வதற்கு பதிவு செய்து வருகின்றனர். டிஜிட்டல் கேபிள் டிவி சேவையை தமிழகத்தில் விரைந்து செயல்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, செட்டாப் பாக்ஸ் கொள்முதல் செய்வதற்காக 6.5.2017 அன்று உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் சென்னையில் உள்ள இந்நிறுவனத்தின் கட்டுப்பாட்டு அறையிலிருந்து வழங்கப்படும் என தெரிகிறது. இதற்காக இக்கட்டுப்பாட்டு அறையின் MPEG2 தொழில்நுட்பம் MPEG4 ஆக உயர்த்தப்படலாம். இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னல் ரெயில்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களின் ஃபைபர் வாயிலாக வழங்கப்படும் எனவும்,. இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சிக்னலை உள்ளுர் கேபிள் ஆபரேட்டர்கள் ரெயில்டெல் மற்றும் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களின் எக்ஸ்சேஞ்-லிருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் கூறப்படுகிறது. செட் டாப் பாக்ஸ் இலவசமா? மானிய விலையா?? எத்தனை சேனல்கள்?? என்ன பேக்கேஜ்?? இந்த கேள்விகளுக்கு பல கருத்துக்கள் நிலவினாலும் யுகத்தின் அடிப்படையில் பதில் பெறாமல் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம். #DigitalMediaReporter