• Call Us : 90030 35559 , 98424 50963
TCSPA கில்டு சங்கம் இணைகிறது... கில்டு திரு. பாண்டி பிரத்யேக பேட்டி

ஒருமித்த கருத்தை உருவாக்க, ஆப்பரேட்டர்கள் நலன் கருதி விடுக்கப்பட்ட அழைப்பை கில்டு சங்கம் ஏற்கிறது... அனைத்து சங்க கூட்டங்களிலும், செயல்பாடுகளிலும் கில்டு சங்கம் ஒருங்கிணைந்து செயல்படும். - மதுரை கில்டு திரு. பாண்டி அறிவிப்பு.. அழைப்பும்... ஏற்பும்... விரிவான கவரேஜ்... Digital Media Reporter கில்டு சங்கத்துக்கு அழைப்பு... ஆப்பரேட்டர் நலனுக்காக இறங்கி போவதில் சங்கத்திற்கோ எனக்கோ இழுக்கில்லை. TCOA ஆறுமுகம் பகிரங்க அறிக்கை அரசு கேபிள் டிவிக்கு டிஜிட்டல் உரிமம் கிடைத்ததை தொடர்ந்து ஆப்பரேட்டர்களின் தொழில் சம்மந்தமாகவும், பல கோடி முதலீடு செய்து கட்டுபாட்டு அறை அமைத்த டிஜிட்டல் MSO தொழில் பாதுக்காப்பு குறித்தும் மதுரையில் சமீபத்தில் அனைத்து சங்க கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக கேபிள் ஆப்பரேட்டர் பொதுநலச்சங்கம், கேபிள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு கேபிள் ஆப்பரேட்டர்கள் மற்றும் வாடிக்கையாளர் நலச்சங்கம், தமிழக கேபிள் டிவி உரிமையாளர் சங்கம் உட்பட பல சங்கங்களும் CTN, பாரத் டிஜிட்டல் விஷன் போன்ற தனியார் MSO நிறுவன பிரதிநிதிகளும் பங்குபெற்றனர். இதில் பல தீர்மானங்கள் நிறைவேற்றபட்டது. அதில் முக்கியமாக, கேபிள் சங்கங்களை அழைத்து அரசு பேச்சுவார்த்தை நடத்தும் வரை அரசு கேபிளுக்கு ஒத்துழைப்பு இல்லை என்ற தீர்மானம் முன்மொழியப்பட்டது. இதற்கிடையில் திரு. DGVP சேகர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் கேட்டு எழுதியுள்ள கடிதமும், மே 25ம் TCOA சங்கம் சார்பில் உண்ணாவிரத போரட்டத்திற்கு விடுக்கப்பட்ட அழைப்பும் குறிப்பிடதக்கது. மதுரையில் நடைபெற்ற அனைத்து கேபிள் சங்கம் மற்றும் அனைத்து டிஜிட்டல் MSO கூட்டத்தில் கில்டு சங்கம், டிஜிகான் DIGITAL MSO போன்ற தரப்பினர் பங்குபெறவில்லை. இது போன்ற பிளவு இல்லாமல் 2012 ம் ஆண்டில் அனைத்து சங்க போராட்டத்தை நடத்தி பல வெற்றி கண்டது போல் தற்போது அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என தமிழக கேபிள் ஆப்பரேட்டர் பொதுநலச்சங்க(TCOA) தலைவர் திரு. ஆறுமுகம் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மதுரை கூட்டத்தில் திரு. TV ரமேஷ் ஆப்பரேட்டர் ஒற்றுமைக்காக தனது ஒருங்கிணைப்பாளர் பதிவியை கூட இழக்க தயார் என்று கூறியதை குறிப்பிட்டுள்ளார். திரு. ஆறுமுகம் அவர்களின் இந்த அறிக்கைக்கு திரு. TV ரமேஷ் மற்றும் திரு. DGVP சேகர் தங்களது ஆதரவை தெரவித்துள்ளார். இதற்கு மதுரை திரு. கில்டு பாண்டி அவர்கள் நமக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் அவர் கூறியதாவது. முதலில் எங்கள் சங்க உறிப்பினர்களும் நிர்வாகிகளும் மற்ற சங்கத்தினர் இருக்கும் இடத்தில் நாம்(கில்டு சங்கம்) செல்ல வேண்டாம் என்ற கருத்தை முன்வைத்தனர். அதனால் கில்டு சங்கம் இந்த கூட்டங்களில் கலந்து கொள்ளாது என அறிவித்தோம். தொடர்ந்து திரு. ஆறுமுகம் அவர்களும் என்னிடம் தொலைபேசியில் பேசி சில விஷயங்களை விளக்கினார். பகிரங்கமான அழைப்பு விடுத்ததும் எங்கள் பார்வைக்கு வந்ததது. கேபிள் தொழிலில் ஒருமித்த கருத்தினை உருவாக்கிடவும், ஆப்பரேட்டர்கள் நலன் கருதியும் கேபிள் ஆப்பரேட்டர்ஸ் கில்டு சங்கமும் இனி அனைத்து கேபிள் சங்க கூட்டங்களிலும், செயல்பாடுகளிலும் ஒருங்கிணைந்து செயல்படும் என கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில் எங்கள் தரப்பில் ஒரு சில ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். அதனை சரியாக பரிசீலனை செய்து ஆப்பரேட்டர்கள் எண்ணத்திற்கு தகுந்த வகையில் செயல்படும் பொருட்டு எங்கள் சங்கமும் முழு ஒத்துழைப்பு தரும் என கூறியுள்ளார். முழுக்க முழக்க ஆப்பரேட்டர்கள் நலன் கருதி தொழிலில் ஒருமித்த கருத்தை உருவாக்கிட மட்டுமே இந்த முடிவு என திரு. பாண்டி கூறியுள்ளார். கேபிள் டிவி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் இலவச Android App Download செய்யுங்கள்... இணைந்திருங்கள் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழுடன்... கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கான நடுநிலை ஊடகம். www.digitalmediareporter.in