• Call Us : 90030 35559 , 98424 50963
நஷ்டத்தில் இருக்கிறதா ஆப்ரேட்டர்களின் நிறுவனம்.

ஆப்ரேட்டர்களை பங்குதாரரார்களாக இணைத்து செயல்படும் TCCL நிறுவனம் நஷ்டத்தில் இருக்கிறது என்று சமீபத்தில் வாட்ஸ் ஆப்பிள் செய்திகள் பரவி வருகிறது. இதனை பல தரப்பினர் விமர்சனமும் செய்து வருகின்றனர். இது பற்றி வாட்ஸ் ஆப்பிள் பரவி வரும் செய்தி தொகுப்பு.... கதை கேளு கதை கேளு TCCL கதை கேளு கடன்களில் பங்குதார்ர்கள் ஆன கதை கேளு TCCL நிறுவனம் கடந்த நிதியாண்டில் தாக்கல் செய்த நிறுவனங்கள் சட்டப்படி FORM NO.AOC-4 ஆண்டறிக்கையில் (2015-2016) நிறுவனம் மொத்த பங்குகளில் அய்யம்பெருமாள் மாணிக்கம் பெயரில் 40 % பங்குகளும் , தமிழ்நாடு டிஜிட்டல் நெட்வர்க் எல்,எல்,பி. என்ற பெயரில் 60% பங்குகளும், மேற்கண்ட 60% பங்குகள் 94 பேர் பங்குதார்ர்கள் எனவும் அதில் 3 பேர் நிர்வகிக்கும் பங்குதார்ர்கள் என்றும் , அந்நிறுவனத்தின் கடன் 29 கோடியே 72 லட்சத்தி 26 ஆயிரத்தி 700 ரூபாய் என்றும், நிறுவனத்தின் தற்போதைய மதிப்பு 2கோடியே 76, லட்சத்தி 20 ஆயிரத்தி 968 ரூபாய் என்றும் டைரக்டர்கள சகிலன்,அய்யம்பெருமாள் மாணிக்கம் கையெப்பமிட்டு தாக்கல் செய்து இருக்கிறார்கள் . இந்த ஆண்டறிக்கை செப்டம்பர் 16 ல் பதிவு செய்யப்பட்ட நிறுவனங்கள் அலுவலகத்தில் எடுக்கப்பட்டது . அனைவரும் சமமான பங்குதார்ர்கள் என்று சொல்லி தமிழ்நாடு முழுவதும் ஆப்ரேட்டர்களிடம் பணத்தை பெற்று விட்டு மாணிக்கம் என்பவருக்கு 40%பங்குகள் ஒதுக்கியது ஏன் ? அதுமட்டுமல்லாது 60 % பங்குகளில் 94 பேர் மட்டும் பங்குதார்கள் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்கள் ஏன்? மொத்தம் தமிழ்நாடு முழுவதும் அனைவரையும் பங்குதார்ர்களாக சேர்த்து இருக்கிறோம் என்றால் மற்றவர்கள் நிலை என்ன, TCCL சேர்ந்த ஆப்ரேட்டர்கள் நீங்கள் பங்குதார்ர்களாக இருக்கின்றீர்களா என்று உறுதி படுத்தி கொள்ளவும்.. அடுத்தது 29 3/4 கோடி கடன் இருக்கிறது என்று சொன்னால் எங்களிடம் நிறுவனம் இருக்கிறது என்று TCCL நிறுவனம் கூறலாம் , ஆனால் அவர்கள் எங்கள் நிறுவனத்தை இன்று விற்றால் 2 3/4 கோடிதான் போகும் என்று நான் கூறவில்லை ஆண்டறிக்கையில் அவர்கள் கூறி இருக்கிறார்கள் . அப்படி பார்த்தால் நிறுவனத்தின் மதிப்பை கழித்து பார்த்தால் இன்றைய நிலவரப்படி TCCL நிறுவனத்தின் கடன் 27 கோடியில் ஆப்ரேட்டர்கள் பங்குதார்கள் 94 பேருக்கு (60% பங்குகள்) 16 கோடி கடன் தலையில் விழுகிறது . 94 பங்குதாரர்கள் அனைவரும் சென்னையை சேர்ந்தவர்கள் மட்டுமே. சென்னையை தவிர மற்ற மாவட்டங்களை சேர்ந்த யாரையும் பங்குதாரராக சேர்க்கவில்லை என்பது குறிப்பிடதக்கது. உலகத்திலேயே லாபமான நிறுவனத்தில் பங்குதார்ர்களாக சேர்வார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறோம் ஆனால் நிறுவனத்தின் கடனுக்கு பங்குதார்ர்கான வரலாறை TCCL தான் பார்க்கிறோம் . 94 தியாகசீலர்களுக்கு TCCL சகிலன் ஏழு ஜென்மம் எடுத்தாலும் கடமைபட்டு இருக்கிறார் . நிறுவனத்தில் பணம் கொடுத்தும் பங்குதார்ர்களாக சேர்க்கப்படாமல் இருக்கின்ற பங்குதார்ர்கள் நீங்கள் அதிஷ்டசாலிகள் , போன ஜென்மத்தில் புண்ணியம் செய்து இருக்கிறீர்கள் , அதனால்தான் கடனிலிருந்தது தப்பித்து முதலீடு மட்டும் இழந்து இருக்கீறீர்கள். நல்ல நிறுவனத்தை கடன் நிறுவனமாக செயற்கையாக மாற்றி அதன் பலன் அடைந்த டைரக்டரகளே வாழ்க! வாழ்க! செப்டம்பர் 2017 ல் இந்த ஆண்டுக்கான TCCL ஆண்டறிக்கைகள் உடன் மீண்டும் சந்திப்போம். இணைப்பு : 1. TCCL மொத்த கடனை குறிக்கும் ஆவணம் கிழே டைரக்டர்கள் சகிலன் ,மாணிக்கம் கையொப்பம் 2. TCCL ல் மொத்தம் உள்ள பங்குதார்ர்கள் ஆவணம் 3. TCCL யார் யாருக்கு உள்ள பங்குகள் ஆவணம் 4. TCCL இன்றைய மதிப்பு மற்றும் இன்று விலைக்கு போனால் எவ்வளவு என்ற ஆவணம் 5. பங்குதாரர்கள் பட்டியல் அனைத்து ஆவணங்கள் TCCL ஆல் தாக்கல் செய்யப்பட்டது.