• Call Us : 90030 35559 , 98424 50963
ஆறுமுகத்தை விவாதத்திற்கு அழைக்கும் சு.சந்தானம்... விளக்கம் பிறக்குமா??

சமீபத்தில் TCCL நிறுவனத்தின் BALANCE SHEET வாட்ஸ் ஆப் தளங்களில் உலா வருகிறது. நிறுவனம் நஷ்டத்தில் இருப்பதாக பல விமர்சனங்களை பலர் முன்வைத்தனர். இந்நிலையில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் (www.digitalmediareporter.in) இணையத்தில் வெளியிடப்பட்ட செய்தியினை தொடர்ந்து தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நலசங்கத்தின் மாநில தலைவர் ஆறுமுகம் விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் அவர் கூறியதாவது... ASSET எனப்படும் சொத்து மதிப்பு குறைவாக இருந்தால் நஷ்டம் என கருத வேண்டாம். லாப நட்ட கணக்கில் இந்த வருடம் உயரிய லாபம் குறிப்பிடப்பட்டுள்ளது. 3. வது இனம் நீண்ட நாள் கடனாக காட்டப்படும் தொகை ஆப்ரேட்டர்கள் பங்கு தொகைக்காக Tccl க்கு கட்டி பங்குதாரர் கணக்கில் வரவு வைக்கும் தொகை கடன் இல்லை பங்கு தொகை கட்டியவர்கள் சிக்னல் கிடைக்கப்பெறாவிட்டால் எந்த நேரத்திலும் கட்டிய பணம் திருப்பி வழங்க வேண்டியதால் கடனில் வரவு வைக்க பட்டது. 2017 நிதி அறிக்கையில் இது கனிசமாக குறைக்கபடும். என அவர் கூறியுள்ளார். இதற்க்கு திருநெல்வேலியை சேர்ந்த சு. சந்தானம் கூறிய பதில் பின் வருவன… அய்யா விவாதமே இனிமேல் தான் உள்ளது, தங்கள் கூற்றுப்படி 1) பங்குதாரர்கள் செலுத்திய முதலீடு நீண்ட நாள் கடனாக வரவு வைக்க பட்டுள்ளது 2) கடந்த நிதியாண்டில் வரவும் செலவும் சமாமாயிற்று இதை நான் ஒத்து கொள்கிறேன் ஆயினும் விவாதிக்க விடயங்கள் அதிகம் உள்ளது தங்கள் பணிச்சுமை காரணமாக தொந்தரவு செய்ய நான் விரும்பவில்லை. என சந்தானம் கூறியுள்ளார். இத்தகைய செயல்களால் கடை கோடி ஆப்ரேட்டர்களுக்கு விளக்கம் பிறக்கும் என நம்புகிறோம். #DigitalMediaReporter