• Call Us : 90030 35559 , 98424 50963
திருப்பூரில் அனைத்து கேபிள் ஆபரேட்டர்கள் கூட்டம்

சங்கங்கள் அமைப்புகள் நிறுவனங்கள் என அனைத்தையும் தாண்டி தமிழகத்தில் உள்ள அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்குமான கூட்டம் திருப்பூரில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை திருப்பூர் திரு. தங்கராஜ், கும்பகோணம் திரு. மனோகரன், கோவை திரு. ரவீந்திரன் உட்பட பல்வேறு ஆபரேட்டர்கள் முன்னின்று ஏற்பாடு செய்தனர். இந்த கூட்டம் பற்றிய தகவல்கள் இதோ. நிகழ்ச்சி நிரல் 1) தமிழ்தாய்வணக்கம். 2) வரவேற்புரை. 3) நீத்தார்அஞ்சலி. 4) கருத்துரைகள் 5) கலந்துரையாடல் 6) தீர்மானங்கள். 7) நன்றியுரை. கூட்டத்தலைமை: திரு.தங்கராஜ் (திருப்பூர்) முன்வரைவுத்தீர்மானங்கள். 1. மாண்புமிகுமுன்னாள்முதல்வர்டாக்டர்.ஜெ.ஜெயலலிதா,கேபிள்குடும்பசகோதரர்திரு.கதிர்வேல் (பொள்ளாச்சிதாலுகா),ஆகியோரின்மறைவிற்குஇரங்கலைத்தெரிவித்தல். 2. தமிழ்நாடுஅரசுகேபிள்நிறுவனத்திற்குடிஜிட்டல்உரிமம்வழங்கியமத்தியஅரசுக்குவாழ்த்துக்களைதெரிவித்துக்கொள்கிறோம். 3. அரசுகேபிள்டிவிகார்ப்பரேஷன்முழுமையாககேபிள்டிவிஉரிமையாளர்களின்முதலீட்டில்புனரமைக்கப்பட்டது. தற்போதுபலகோடிரூபாய்லாபத்தில்இயங்கிவருகிறது. பாதுகாப்புஅரணாகவிளங்கியதமிழககேபிள்டிவிஆப்பரேட்டர்களின்உன்னததலைவிமறைந்தமுன்னாள்முதல்வரின்சீரியநோக்கத்திற்குமாறாகசெயல்பட்டுலாபநோக்குஒன்றையேகுறிகோளாகக்கொண்டுஅரசுகேபிள்செயல்படுவதுதமிழகத்தில்கேபிள்தொழிலையேநம்பிவாழும்கேபிள்டிவிஆப்பரேட்டர்களுக்குசெய்யும்அநீதியாகும். ஆப்பரேட்டர்கள்சங்கங்களைஅழைத்துமுறையாகபேசிமுடிவெடுக்காமல்தன்னிச்சையாகஆப்பரேட்டர்களின்நலனுக்குஎதிராகசெயல்படும்நிலையைதவிர்க்கஅரசைகோரிதீர்மானிக்கப்பட்டது. 4. 25 ஆண்டுசொந்தஉழைப்பில்உருவாக்கியஆப்பரேட்டர்களின்சந்தாதாரர்களை. ஒரேவார்த்தையில்அரசுகேபிள்சந்தாதாரர்கள்எனவிளம்பிஆப்பரேட்டர்களுக்குமனவருத்தத்தைஏற்படுத்தும்அறிவிப்பைஅரசுஉடனடியாகவாபஸ்பெறவேண்டும். 5. ஆப்பரேட்டர்களின்வாடிக்கையாளர்களைமாதாந்திரசந்தாதொகையாக 70 ரூபாயைஆப் (APP) மூலமாகஅரசுகேபிளுக்குநேரடியாகசெலுத்தஅறிவித்தஅறிவிப்பைரத்துசெய்யவேண்டும். 6. புதியஆப்பரேட்டர்களைஏற்கெனவேகேபிள்தொழில்செய்துவரும்ஆப்பரேட்டர்கள்பகுதியில் (AREA) உருவாக்குவதைநிறுத்தவேண்டும். 7. மாதாந்திரசந்தாதொகைசெலுத்தாதகேபிள்டிவிஆப்பரேட்டர்களுக்குடிராய்விதிப்படிமுறையானநோட்டீஸ்அனுப்பாதுசிக்னல்துண்டிப்பதைகைவிடவேண்டும். 8. சட்டத்தைகையிலெடுத்துகேபிளைவெட்டுதல், ஆம்பிளிபேர், நோடுகளைஎடுத்துச்செல்லுதல்போன்றஆப்பரேட்டர்விரோதபோக்கைதொடர்ந்துகடைபிடிப்பதைநிறுத்தகோரிதீர்மானிக்கப்படுகிறது 9. மத்தியஅரசுதமிழகத்தில்அரசுஉட்படநூற்றுக்கும்அதிகமானநிறுவனங்களுக்குடிஜிட்டல்உரிமம்வழங்கியுள்ளது. அதைநம்பிபலகேபிள்டிவிஉரிமையாளர்கள்பலகோடிரூபாயினைமுதலீடுசெய்துள்ளனர்.அனைவருக்கும்தொழில்செய்யும்உரிமைஉண்டு,தமிழ்நாடுஅரசுசட்டப்படிஅனைவரையும்தொழில்செய்யஅனுமதிக்கவேண்டும். 10. அரசுகேபிள்சங்கபிரதிநிதிகளைஅழைத்துப்பேசிஆப்பரேட்டர்களின்வாழ்வாதாரம்பாதுகாக்கப்படவும்,கேபிள்தொழில்மூலமாகஆப்பரேட்டர்கள்வழங்கியுள்ளஇல்லஇணைப்புகள்டிஜிட்டல்வடிவில்உருமாறினாலும்ஆப்பரேடடர்களுக்கேசொந்தம்என்கிறஉத்திரவாதத்தைஅரசுவழங்கவேண்டும். 11. TRAI விதிமுறைப்படியான 130 ரூபாய்கட்டணத்தைஉடனடியாகஅமல்படுத்தவேண்டும் 12. அரசுகேபிள்முறையில்தற்போதுசெயல்படும் DCO / TCO (குத்தகைதாரர்கள்) உடனடியாகநீக்கம்செய்துமின்விநியோகம்செய்வதுபோலபணியாளர்களைநியமித்துஆபரேட்டர்கள்அலுவலகம்வரைதரமானஒளிபரப்பைகொண்டுவரஉத்திரவாதம்தரவேண்டும். 13. வெளிப்படையானநிர்வாகத்திற்குஉத்திரவாதம்அளிக்கும்வகையில்ஆபரேட்டர்கள்சங்கநிர்வாகிகளைஅழைத்துபேசிஒப்பந்தம்செய்யவேண்டும். 14. அரசின்முதலீட்டில்கட்டுப்பாட்டுஅறைகள்மாவட்டஆட்சித்தலைவர்அலுவலகவளாகத்திலேயேஅமைக்கப்படவேண்டும். 15. கேபிள்டிவிஆப்பரேட்டர்கள்அரசின்ஏஜென்டுகளாகமாறிவரும்காலங்களில்தொழிலைவிட்டுப்போகாதுகேபிள்ஆப்பரேட்டர்களும்அரசும்செட்டாப்பாக்ஸ்பங்குதாரர்களாகதொடர்ந்துஇருந்திடஅரசுகேபிள்ஆப்பரேட்டர்களைபங்குதாரராகஇணைத்துசெயல்படவேண்டும். 16. அரசுகேபிள்ஆப்பரேட்டர்சங்கபிரதிநிதிகளைஅழைத்துபேசிசுமுகதீர்வுகாணும்வரைஅரசுகேபிளுக்குஆப்பரேட்டர்கள்எவ்விதஒத்துளைப்பும்எந்தசங்கமும்வழங்காதுஎனவும்கேபிள்டிவிஆப்பரேட்டர்களைபாதுகாக்கசட்டப்படியானமற்றும்போராட்டவழியிலானஅனைத்துநடவடிக்கைகளையும்எடுக்கவும்தீர்மானிக்கப்பட்டது. 17. அரசோடுபேச்சுவார்த்தைகளைநடத்தவும்,அனைவரையும்ஒருங்கிணைந்துசெயல்படவும் 25 பேர்கொண்டகுழுவைஅமைப்பதெனஏகமனதாகதீர்மானிக்கப்பட்டது. 18. ஆப்பரேட்டர்கள்அரசுகேபிளுக்குசெலுத்தவேண்டியபாக்கிதொகையைசெலுத்தித்தீர்த்தால்மட்டுமேஅரசுசெட்டாப்பாக்ஸைபெறமுடியுமென்பதுஏற்புடையதல்லஅரசோடுஆப்பரேட்டர்கள்இணைந்துசிக்னல்பெறமூன்றுமாதகட்டணத்தைவைப்புத்தொகையாகவசூல்செய்துள்ளது.மேலும்அப்போதுஇயங்கிவந்தகட்டுப்பாட்டுஅறைகளைகையகப்படுத்திஉள்ளூர்சானல்ஒளிபரப்புகளையும்தனதாக்கிவருமானத்தைபெருக்கிக்கொண்டது.அதில்ஆப்பரேட்டர்களுக்குபங்கும்வழங்கவில்லை.டிஜிட்டல்ஒளிபரப்பிற்குபுதியவிண்ணப்பபடிவங்களையும்விநியோகித்துவருகிறது.எனவேஆப்பரேட்டர்கள்பாக்கிவைத்துள்ளதாககூறும்தொகையைதள்ளுபடிசெய்யவேண்டும். 19. அரசேகேபிள்டிவிதொழிலைசெய்துவிட்டுஅரசுசிக்னலைகொண்டுசெல்லும்கம்பிவடங்களுக்குமாநகராட்சி,நகராட்சி,நகரகிராமபஞ்சாயத்துவரிஎனகூறுவதுமுறையாகதெரியவில்லை.எனவேஇந்தவரிவிதிப்புஆணைகளைஅரசுரத்துசெய்யகோரப்படுகிறது. 20. தமிழகத்தில்டிஜிட்டல்உரிமம்பெற்றவர்கள்ஒருங்கிணைந்துகூட்டுறவுமுறையில்இயங்கமுடிவுசெய்துள்ளதற்குவாழ்த்துக்களைதெரிவித்துதீர்மானிக்கப்பட்டது. 21. அனைத்துமாவட்டங்களிலும்நிறுவனங்கள்ஒருங்கிணைந்துசெட்டாப்பாக்ஸ்பழுதுநீக்கும்சர்வீஸ்சென்டரைஅமைக்ககோரிதீர்மானிக்கப்பட்டது. 22. மாநில,மண்டல,மாவட்டஅளவில்ஆப்பரேட்டர்களைஅங்கத்தினராகக்கொண்டநிர்வாககுழுவைஅரசைஅமைக்கக்கோருவதெனதீர்மானிக்கப்பட்டது. 23. முடங்கிக்கிடக்கும்கேபிள்டிவிஆப்பரேட்டர்கள்நலவாரியத்தைஅரசுபுனரமைக்ககோரிதீர்மானிக்கப்பட்டது. 24. கேபிள்வெட்டுபோன்றசட்டவிரோதசெய்கைகளுக்குஅரசுகடும்நடவடிக்கைஎடுக்கக்கோருவதென 25. தீர்மானிக்கப்பட்டது 26. அரசோ,தனியார்நிறுவனங்களோஏற்கெனவேகேபிள்தொழில்செய்துவரும்ஆப்பரேட்டர்ஏரியாவில்புதியகேபிள்அமைப்பை (ஆப்பரேட்டரை)உருவாக்கமுயன்றால்அதற்குஎதிராககடும்நடவடிக்கைகள்எடுக்கதீர்மானிக்கப்பட்டது. 27. இல்லங்களுக்குநேரடிஇணைப்புசேவைDTHன்ஆதிக்கத்தைஒழிக்கஅனைத்துமுயற்சிகளையும்எடுப்பதெனதீர்மானிக்கப்பட்டது. 28. இலவசம்என்கிறபெயரில்தொழிலைஅபகரிக்கமுயலும்ஜியோரிலையன்ஸ்போன்றஏகாதிபத்திய,தன்னாட்சிநிறுவனங்களின்ஆதிக்கத்தைவளரவிடாமல்இணைந்துநடவடிக்கைஎடுக்கமுடிவுசெய்யப்பட்டது.. 29. இதற்குமேல்தீர்மானங்களைமுன்மொழியஅனைவருக்கும்முழுஉரிமைஉண்டு.அனைத்துதீர்மானங்களும்ஆய்வுசெய்யப்பட்டுஇறுதிமுடிவுஎடுக்கப்படும். முன்மொழி பவர் டி.ஜி.வி.பி.சேகர். இந்த கூட்டம் அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கான தொழில் பாதுகாப்பானதாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது. இந்த கூட்டத்தை பற்றி நமது கோவை திரு. ரவீந்திரன் அவர்கள் வாட்ஸ் ஆப்பில் பதிவு செய்த தொகுப்பு இதோ... அரசு கேபிளில் பதிவு பெற்ற அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர் நண்பர்களே! வருகின்ற 26/05/2017 வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு திருப்பூர் திருமுருகன் பூண்டி எக்ஸ்போர்ட் அசோஷியேசன் ஹாலில் அனைத்து ஆப்பரேட்டர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஒரு மாபெரும் கூட்டம் நடைபெற இருக்கிறது. இக் கூட்டத்தின் நோக்கம் "ஒருமித்த குரலில் அரசு கேபிளுக்கு நமது உரிமைகளை" தெரிவிக்க வேண்டும் என்பதே. இந்த கூட்டம் நமக்கான உரிமைகளை பெற்றெடுக்க, செவிடாயிருக்கும் அரசு கேபிளின் காதில் உரக்க கூறவிருக்கிறோம். இக் கூட்டத்தில் ஒவ்வொரு ஆப்பரேட்டரும் கலந்து கொண்டு நம் மீது கை வைத்தால் சங்கத்தால் பிரிந்திருக்கமாட்டோம், ஒன்று கூடி பலத்தை காட்டி நாமில்லையேல் அரசு கேபிள் இல்லை என்பதை நிரூபணம் செய்தாக வேண்டும். இக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் உங்கள் ஒவ்வொருவரின் கையொப்பமிட்ட பிரம்மாண்ட விண்ணப்பத்தினை நமது கூட்டமைப்பு தலைவர்கள் தமிழக முதல்வருக்கும் அரசு கேபிளின் நிர்வாக இயக்குநருக்கும் மத்திய அரசுக்கும் கொண்டு சேர்க்கவுள்ளார்கள். நமது 25 ஆண்டு கால உழைப்பில் உருவான கேபிள் நிறுவனத்தை அரசு கேபிள் இலவசமாக தரும் செட் டாப் பாக்ஸி னை பெற்றுக் கொண்டு அடகு வைத்திடக்கூடாது. எனவே உங்கள் ஒவ்வொருவரின் பங்களிப்பும் இந்த கூட்டத்தில் இருக்க வேண்டியது அவசியமாகிறது. இக் கூட்டத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்திருப்பது போல நீங்கள் அறிந்துள்ள ஆப்பரேட்டர் நண்பர்களுக்கும் தெரிவியுங்கள். இந்த நோக்கத்திற்காகவே தான் நானும் எனக்கறிந்த உங்களனைவருக்கும் தெரிவிக்கிறேன். வாருங்கள்.... திருப்பூரை திக்குமுக்காடச் செய்து திகைக்க வைப்போம். அரசு கேபிளை திணரடிப்போம். நமக்கான உரிமையினைப் பெற்றெடுப்போம். இந்த செய்தி ஆபரேட்டர்கள் மத்தியில் அதிகம் பரவியது. இந்த கூட்டத்திலும், முன்னெடுப்பிலும் டிஜிட்டல்இ மீடியா ரிப்போர்ட்டர்ந்த ஒரு நடுநிலை ஊடகமாக உடன் இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியே... கூட்டத்திற்கு வருகை தரும், வருகை தந்த அனைத்து ஆபரேட்டர் உறவுகளையும் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் அன்புடன் வரவேற்கிறது.