• Call Us : 90030 35559 , 98424 50963
ஆப்பரேட்டர் கல்லூரி, ஆப்பரேட்டர் மருத்துவமனைகளை உருவாக்கும் திட்டம்

செந்தமிழ் நாடென்னும் போதினிலே இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே என்றார்கள் புலவர்கள்... அதைப் போலவே தினவணிகம் என்னும் நாளிதழைப் பார்க்கையிலே சந்தோச சாரல் நம் மீது பாய்வதாக உணர்கிறேன்... காரணம் வணிகம் இல்லாமல் வாழ்க்கைத் தேவைகள் எதுவும் பூர்த்தியாவதில்லை... உற்பத்தி என்னும் பூஞ்சோலை மாலைகளாக மாறக்கூடிய இடம் தொழிற்சாலைகள்... அது மணம் வீசக்கூடிய இடம் வணிக வளாகம்... அதைப்போலவே நிகழ்வுகள் உருவாகும் இடம் தான் விவசாயம்.. அதை செய்திகளாக தயாரிக்கும் இடம் தான் அறுவடை… இதை மக்களுக்கு வினியோகித்தலே (கேபிள் டிவி) வணிக வளாகம்.... உற்பத்தி , சேகரித்தல், வணிகம் செய்தல் இந்த மூன்றும் ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது... அது போலவே செய்தி களம், சேகரிப்பு,வினியோகமும் நமது தொழிலில் முக்கியமானது... அதே நேரத்தில் வினியோகம் இல்லாவிட்டால் அனைத்தும் வீண்... அந்த மகத்தான பணியை நாம் செய்து வருகிறோம் என்று பெருமைப் பட நூறுசதவீத உரிமை நமக்கு இருக்கிறது.... மக்கள் அறியாமையால் தங்கள் நேரத்தை வீணடிக்கின்றனர் என்ற நிலை கேபிள் டிவி என்ற ஊடகம் வந்தபின் மாறிவிட்டது... அனைத்து விலைகளும் ஊடகவர்த்தகத்தில் தெரிந்து விடுகின்றன.. எல்லாரும் ஆண்ட்ராய்டு போனுக்கு இன்னும் மாறவில்லை.. .எனவே டிவி யை நம்பியே கிராமங்கள் செய்திகளுக்கு காத்திருக்கின்றன... கேபிள் டிவி வாழ்ந்து கொண்டே தானிருக்கும்... விஞ்ஞான வளர்ச்சியின் எல்லை முடிவில்லாதது என்றாலும் கேட்பதற்கு வானொலி என்ற நிலை இன்னும் மாறவில்லையே....? அது போல் காண்பதற்கு டிவி என்ற நிலையும் மாறாது.. கேபிள் டிவி என்ற மாபெரும் ஆலமரத்தின் விழுதுகளாக உலகம் முழுவதும் கேபிள் டிவி வினியோகஸ்தர்கள் உள்ளனர்... இதில் தமிழ்நாடு வித்யாசமானது... யாருக்கும் அடங்காதது... நம்மைப்பார்த்து மற்றவர்கள் படிக்க வேண்டிய பாடமாக நாம் இருக்கிறோம்... வானளாவிய அதிகாரம் படைத்தவர்களாக இருந்த ஒளிபரப்பாளர்களும் , கட்டுப்பாட்டறையாளர்களும் இன்று நாமாக உருவாகி ஆப்பரேட்டர் சமூகத்தின் மதிப்புயர செய்துள்ளோம்... வருங்காலத்தில் ஆப்பரேட்டர் கல்லூரி, ஆப்பரேட்டர் மருத்துவமனைகளை உருவாக்கும் திட்டம் உள்ளது... எத்தனை தொழில்களில் ஆப்பரேட்டர் இருந்தாலும் ஆப்பரேட்டர் என்று சொன்னால் அது கேபிள் ஆப்பரேட்டரையே குறிக்கிறது.... எனவே நமது ஆப்பரேட்டர் சமூகம் சுமூகமாக வாழ கமுக்கமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.... அதில் ஒன்று தான் அமிகோஸ்... ஆள் அரவம் இல்லாத இடத்தில் அமைதியாக தொடங்கப்பட்ட ஆப்பரேட்டர் வணிக நிறுவனம் தான் இந்த அமிகோஸ்... இன்றும் என்றும் வெற்றி நடைபோடும், நம் குழந்தையாயிருந்து பெரியவனாகிவிட்ட கேபிள் டிவியைப் போலவே.... கேபிள் டிவி ஆரம்பித்த காலத்தில் பல சங்கடங்களை அனுபவித்தோம்...சவாகா ஆயிரம் என்ற ஆம்பளிபயர், டையமண்ட் நூறு என்ற ஆம்ப்ளிபயர்...இரவு பகல் சிக்னல் அளவில் மாற்றத்தை தடுக்க வழிஇல்லை....முதலில் டெக் வைத்து சினிஇண்டியா , ராஜ்வீடியோ விசன் கேசட்டுகளை வாங்கிப்போட்டு அவர்கள் வழக்குத் தொடுத்து கலெக்டர் ஆபீஸ் லைசென்ஸ் இல்லாமல் அலைந்து பிறகு ஒரு சேனல் ஸ்டார் டிவி ஔிபரப்பி , பின் சேனங்களை அதிப்படுத்தி ஐந்து எட்டு பண்ணிரண்டு பதினாறு பிறகு முப்பத்தி இரண்டு பிறகு பாலிமர் வந்த போது அறுபது சேனல் ஆப்டிக் பைபர் அறிமுகம்....பின் ட்ரான்ஸ்மிட்டர்...அதன் பின் இடிஎப்ஏ...தொழில் நுட்பம் மாறி வருகிறது.. ஆனால் நாம் மாறவில்லை....நாலு வீடு வசூல் செய்தால் சிலருக்கு உற்சாக பானத்தின் மீது நினைவு திரும்பிவிடுகிறது....எதிர்காலம் என்ன ஆகும் என்ற சந்தனை நமக்குள் வேண்டும்...ஒற்றுமை முக்கியம்....தேவைகளை ஒன்று சேர்ந்து பூர்த்தி செய்வோம்...ஒன்றே குலம்...ஒருவனே தேவன் என்பதைப் போல ஒரு கொடையின் கீழ் நாம் வர ஒத்துழைக்க வேண்டும்....இன்று அதற்கான நாள் முடிவெடுங்கள்... நாம் ஒன்றாக இருந்தால் நம்மிடம் வருவார்கள்.... இல்லாவிட்டால் நாம் போய் அவர்களை பார்க்கவேண்டும்.... அநேக நமஸ்காரங்களுடன் திருப்பூர் தங்கராசு....