• Call Us : 90030 35559 , 98424 50963
திருப்புவனம் கேபிள் டிவி கட்டுப்பாட்டறை சீல் வைப்பு... ஆதி சூரப்பிரகாஷ் பேட்டி

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் பல ஆண்டுகளாக கேபிள் தொழில் செய்து வருபவர் திரு. ஆதிசூரப்பிரகாஷ்... கடந்த 27ம் தேதி தமிழ்நாடு அரசு கேபிள் டிவிக்கு வருவாய் இழப்பீடு செய்யும் வண்ணம் கட்டுபாட்டறை நடத்துவதாக கூறி இவரது கேபிள் அறையை அரசு கேபிள் தாசில்தார் மற்றும் இதர அதிகாரிகளுடன் சேர்ந்து சீல் வைத்தனர். இன்று(30-05-2017) ஆதிசூரப்பிரகாஷ் திருப்புவனத்தில் பாலு என்பவரை தாக்கிவிட்டார் எனவும் இவர் TCO ஊழியர் என்று செய்தி வந்ததது. இது பற்றி திரு. ஆதிசூரப்பிரகாஷ் கூறியதாவது. மதுரை உச்சநீதி மன்ற தீர்ப்பின் படி கடந்த 2016 டிசம்பர் 31ம் தேதிக்கு மேல் DCO, TCOக்கள் டெண்டர் முறையிலேயே செயல்பட முடியும் எனவும். நிலுவையில் உள்ள ஒப்பந்த காலம் உள்ளவரை மட்டுமே செயல்பட முடியும் என்பது தீர்ப்பு. இந்நிலையில் சிவகங்கை மாவட்ட திரு. கருமுருகன் அவர்களுக்கு DCO உரிமம் 2012/2013 ஆண்டிகளில் TACTV முன்னால் MD திரு. விவேகானந்தன் அவர்களால் ரத்து செய்யப்பட்டது, அந்த வழக்கு இதுவரை நிலுவையில் உள்ளது. அன்று முதல் DCO என சொல்லபட்ட சிவகங்கை திரு. கருமுருகன் திருப்புவணத்திற்கு சிக்னல் கொடுப்பதில்லை. சிக்னல் பெற்றவரை பணம் செலுத்தியுள்ளேன். வராத சிக்னலுக்கு ஏன் பணம் கட்ட வேண்டும். என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அரசு கேபிள் டிவிக்கு கட்டுபட்டு மட்டுமே தொழில் செய்ய வேண்டும் என்று எந்த சட்டத்திலும் இல்லாத போது, முறையாக உரிமம் பெற்ற எனது கட்டுபாட்டறை மூடப்பட்டது சட்டவிரோத செயலே. இதை சட்டப்படி எதிர்கொண்டு நியாயத்தை வெளிக்கொண்டு வருவேன் என அவர் கூறியுள்ளார். மேலும், திருப்புவனம் பகுதியில் TCO என்று யாரும் செயல்படவில்லை. அப்படி இருக்கும் போது இந்த பாலு என்பவர் எப்படி TCO ஊழியர் ஆவார்.? எனவும் இல்லாத ஒன்றை எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும் அவர் தொடர் கேள்விகளை எழுப்புகிறார்... திரு. பாலு என்பவர் ஒரு ஆப்பரேட்டரிடம் வேலை செய்யும் தொழிலாளி. அவர் எனது வயர்களை வெட்டுவது வாடிக்கை. இதனை மூன்று மாதங்களுக்கு முன்னரே காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளோம் எனவும், இனி இப்படி செய்ய மாட்டோம் என பாலு, கிஷோர், பழனி ஆகியோர் காவல் நிலையத்தில் உத்தரவாதம் செய்ததாகவும் கூறுகிறார். ஆனாலும் மறுபடியும் இன்று எனது வயர்களை பாலு மற்றும் அவரது தரப்பினர் வெட்டிகிறார்கள். தமிழ்நாடு அரசு கேபிள் டிவியில் அனுமதி பெற்று தான் கேபிள் டிவி நடத்த முடியுமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் திரு. ஆதிசூரப்பிரகாஷ்... சின்னமன்னூர் திரு. சிவா உதவியுடன் இதை சட்டப்படி சந்திப்போம் எனவும் அவர்கூறியுள்ளார்... சட்டவிரோதமாக கட்டுபாட்டறைக்கு சீல் வைத்ததை கண்டித்து தமிழ்நாடு கேபிள் சங்க கூட்டமைப்பின் சார்பில் வருகிற ஜூன் 7ம் தேதி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாபெறும் உண்ணாவிரத போராட்டம் நடத்தபடும் என்றும் அவர் கூறுயுள்ளார்... இதற்கு அரசு தரப்பு விளக்கம் என்ன..?? தொடர்வோம் கேள்விகளுடன் வழியும் விடையும் பிறக்கும் வரை...