• Call Us : 90030 35559 , 98424 50963
தொடர்ந்து வரும் திருப்புவனம் விவகாரம்.

கேபிள் சங்கங்களின் கூட்டமைப்பு திருப்புவனம் ஆபரேட்டர் அரை சீல் வைக்கப்பட்டதை கண்டித்து ஜூன் 7 ம் தேதி உண்ணாவிரத போராட்டம் அறிவித்தது. இதன் அடிப்படையில் திரு. சூரப்பிரகாஷ் தரப்பினர் NON OPERATOR களை உருவாக்கி, சட்ட விரோதமாக தொழில் செய்து வருவதாக திரு. கிஷோர்குமார் தரப்பினர் புகார் கூறினர். அதனால், சங்கங்களின் கூட்டமைப்பு சூரப்பிரகாஷ் தரப்பினருக்கு ஆதரவு தர கூடாது எனவும் செய்தி அனுப்பினார். அதற்கு, மதுரை திரு. டி.வி. ரமேஷ் கள ஆய்வு செய்து தவறு செய்தவர் எவராயினும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். தற்போது. இதற்கு பதில் கூறும் வண்ணம் திரு. சூரப்பிரகாஷ் ஒரு ஆடியோ பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார். அந்த ஆடியோ பதிவில் திரு. பழனிவேல்ராஜ், திரு. கிஷோர் மற்றும் திரு. ஞானபண்டிதன் (எ) கௌஷிக் ஆகியோர் பேசிய கலந்துரையாடல் உள்ளதாக சூரப்பிரகாஷ் கூறுகிறார். அதில் ஆப்ரேட்டர்களின் இணைப்புகளை “ஏறி அடிப்போம்” என அவர்கள் பேசிக்கொண்டதாக தெரிகிறது. இந்த வகை விவாதங்கள் ஒரு புறம் செல்ல... திரு. பாலு என்பவரை தாக்கியதற்காக சூரப்பிரகாஷ் உட்பட 5 பேர் மீது காவல் துறையினர் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்துள்ளனர் எனவும் கூறப்படுகிறது. இந்த முரண்பாடுகளால் கடை கோடி ஆபரேட்டர்கள் பாதிக்கப்பட்டுள்ளனரா?? சங்கங்களின் கூட்டமைப்பு இந்த முரண்பாட்டில் ஈடுபட்டு பிரச்சனை தீர்வு செய்யுமா.?? அரசு தரப்பில் என்ன பதில் உள்ளது?? அனைத்தும் கேள்விகளாக நிற்கிறது. காத்திருப்போம் விடை பெறுவதற்கு...