• Call Us : 90030 35559 , 98424 50963
ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (அரசு) கொண்டாட்டம் … மதுரை டி.வி. ரமேஷ் அறிக்கை

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்த திருபுவனம் கேபிள் ஆபரேட்டர்கள் விவகாரம் ஒரு திருப்பத்தை அடைந்துள்ளது. மதுரை திரு. டி.வி. ரமேஷ் அவர்கள் தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திருபுவனம் பகுதிக்கு நேரில் சென்று கள ஆய்வுகள் மேற்கொண்டார். முரண்பாடுள்ள இரண்டு தரப்பு ஆப்ரேட்டர்களையும் அழைத்து பேசி ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை பின் வருமாறு. திருப்புவனம் கள ஆய்வு முடிந்து நேற்று இரவு (1/6/17) 10.00 மணிவரை பேச்சுவார்த்தைகள் முடிந்தது. மேற்கண்ட பகுதியில் இரண்டு பிரிவாக ஒரு பகுதி ஆப்ரேட்டர் அரசு கேபிள்டிவி சிக்னல் பெற்றும் , மற்றொரு பிரிவு தனியார் கண்ட்ரோல் ரூம் சிக்னல் பெற்று நடத்தி வருகின்றனர். தனியார் கட்டுபாட்டு அறையின் உரிமையாளர்கள் சூரபிரகாஷ் மற்றும் முத்துராஜ். இவர்கள் அரசு கேபிள்டிவியிலும் LCO பதிவு செய்து இருக்கிறார்கள் மற்றும் மேற்கண்ட அப்பகுதிகளிலுள்ள ஒரு பகுதி ஆப்ரேட்டர்களுக்கு லிங்க் கொடுத்து நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மேற்கண்ட நபர்களும் அவரிடம் லிங்க் பெற்ற ஆப்ரேட்டர்களும் மாத சந்தா செலுத்தவில்லை காரணத்திற்காக தாசில்தார் தனியார் அறையை சீல் வைத்ததும் அதன் எதிரொலியாக பாலு என்பவர் தாக்கப்பட்டது தாங்கள் அறிந்ததே. அரசு சிக்னலை நாங்கள் பயன்படுத்தாத போது நாங்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும் என்பது அவர்கள் வாதம். சூரபிரகாஷ் மற்றும் முத்துராஜ் மீது பாலு என்ற ஆப்ரேட்டரை தாக்கியதாக காவல்துறை வழக்கு பதிவு செய்து இருக்கிறது . இரண்டு தரப்பினரை சந்தித்த பொழுது பல்வேறு குற்றச்சாட்டுக்கள், விளக்கங்கள் அளித்தார்கள். அதை எல்லாம் இங்கே கூறினால் மீண்டும் இரண்டு தரப்பினரும் மோதிக்கொண்டு தொழிலை அப்பகுதியில் நாசபடுத்தும் சூழ்நிலையை உருவாக்கிவிடலாம் என்ற காரணத்திற்காக அதை தவிர்த்து இருக்கிறேன். இரண்டு தரப்பினரிடமும் அரசு கேபிள் சிக்னல் மற்றும் தனியார் சிக்னல் எதை ஆப்ரேட்டர்கள் விரும்புகிறார்களோ அதை எடுத்துக்கொண்டு நிம்மதியாக தொழில் செய்யவும், இந்த சிக்னல்தான் எடுக்க வேண்டும் யாரையும் யாரும் கட்டாயபடுத்த கூடாது என்றும், சிக்னலை தடை செய்வதற்காக வயரை யாரும் துண்டிக்க கூடாது என்றும், புதிய ஆப்ரேட்டர்களை யாரும் உருவாக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு அதன்படி நடப்போம் என்று அவர்கள் கூறியதை தொடர்ந்து யாராவது இதை மீறினால் மீறியவர்களுக்கு கூட்டமைப்பு துணை நிற்காது என்றும் அறிவித்து பிரச்சனைகள் தீவிரம் குறைந்தவுடன் மீண்டும் ஒரே நேரத்தில் இரண்டு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்து அனைவரையும் ஒரே இனமாக நடைபோட ஆவணசெய்யபடும் என்று கூறியதை அவர்கள் ஏற்று கொண்டனர். மொத்தத்தில் ஒன்று தெரிந்தது…. ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு (அரசு) கொண்டாட்டம் அதுதான் அங்கு நடந்து இருக்கிறது என்பது உறுதியாக தெரிகிறது . DCO , TCO அரசு நியமித்து இருந்தால் அது செல்லாது என்று நீதிமன்ற உத்தரவை அவர்களுக்கு சுட்டி காட்டி இருக்கிறேன். அரசு சீல் வைத்தது சட்டத்திற்கு புறம்பானது, அதற்கு அரசுக்கு அதிகாரமில்லை, இது உங்கள் பிரச்சனை இல்லை தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஆப்ரேட்டர்கள் பிரச்சனையாக கருதுகிறோம், இனிமேல் இது கூட்டமைப்பின் பிரச்சனை தமிழ்நாட்டில் இனி இதுபோல் நடக்கக்கூடாது என்பதற்காக நடவடிக்கை எடுக்க ஆவண செய்யபடும் . வன்முறை என்றும் தீர்வாகது, தாக்கப்பட்ட பாலுவை சந்தித்து ஆறுதல் கூறினோம்.தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டித்தோம். இவ்வளவு பிரச்சனைகளுக்கு இடையே ஒரு காமெடி இரண்டு தரப்பை சேர்ந்த அனைவரும் அரசு கேபிள்டிவி நிறுவனத்தில் டிஜிட்டல் பாக்ஸ் கேட்டு பதிவு செய்து இருக்கிறார்கள் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.