• Call Us : 90030 35559 , 98424 50963
வெளியேறிய தேசிய செய்தி சேனல்கள் மீண்டும் இணைந்தன...

BARC என சொல்லப்படும் பிராட்காஸ்ட் ஆடியன்ஸ் ரிவர்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா என்ற அமைப்பிற்கும் ஆங்கில செய்தி சேனலுக்கு நிலவி வந்த முரண்பாடு ஒரு வழியாக முடிவுக்கு வந்தது. சமீபத்தில் தொடங்கப்பட்ட அன்ப கோஸ்வாமியின் ரிபப்லிக் டிவி BARC RATING தரப்பட்டியலில் முதல் இடம் பிடித்தது. இந்த தரப்பட்டியலில் சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி “டைம்ஸ் நவ்”, “இந்திய டுடே” உட்பட பல செய்தி சேனல்கள் இந்த BARC (TRP) முறையில் இருந்து விலகின. BARC அமைப்பானது, மக்கள் அதிகம் பார்க்கும் சேனல்களை ஆய்வு செய்து அதற்கேற்ப பார்வையாளர்கள் எண்ணிக்கை அடிப்படையில் வாரந்தோறும் சேனல்களுக்கு தரவரிசை பட்டியல் வெளியிடும். அதனை தான் TRP(TELEVISION RATING POINT) என்று கூறுவோம். இத்தகைய போட்டியில் தன்னிலை படுத்தி கொள்ளவே செய்தி சேனல்கள் போட்டி போட்டு கொண்டு செய்திகளை வெளியிடுகிறார்கள். இந்த போட்டியில் பங்குபெறுவதற்கு அவர்களின் ஒளிபரப்பை உறுதி செய்யும் வண்ணம், சேனலின் லோகோ, வாட்டர் மார்க் போன்றவற்றை சேனலின் ஒளிபரப்புகிறார்கள். மேலே, குறிப்பிடப்பட்ட இந்த முரண்பாடு வந்த பிறகு பல சேனல்கள் இந்த முறையில் இருந்து வெளியேறுவதாக கூறி வாட்டர் மார்க் ஒளிபரப்பை நிறுத்தினர். தற்போது இது சமரச நிலைக்கு வந்த பின்னர் -- மீண்டும் பல சேனல்களில் சேர்க்கப்பட்டுள்ளது. இது பற்றி ஒரு சேனல் தரப்பில் கூறும் போது, எங்களுக்கும் BARC அமைப்பிற்கும் எந்த முரண்பாடும் இல்லை. நாங்கள் அதனை மதித்து ஏற்கிறோம். ஆனால், முறைகேடாக செயல்பட்டு ஒரு குறிப்பிட்ட சேனலுக்கு மட்டும் அபரிவிதமான RATING கொடுப்பது நியாயமற்றது எங்களது வாதம் என்கிறார்கள். இதனை தொடர்ந்து, NBA என்று அழைக்காடும் தேசிய ஒளிபரப்பாளர்கள் சங்கம், BARC அமைப்பிற்கு இது தொடர்பாக பல நோடீஸ்களை அனுப்பியது. அதாவது புதிதாக தொடங்கப்பட்ட ரிபப்லிக் டிவி எப்படி முதல் இடம் பிடிக்க முடிந்தது என்பதற்கான அறிக்கையினை BARC அமைப்பு வெளியிட வேண்டும் என NBA நோட்டிஸ் அனுப்பியதை தொடர்ந்து. BARC கொடுத்த விளக்கத்தில் கூறியதாவது. ரிபப்லிக் டிவி என்பது சமீபத்தில் தொடங்கப்பட்டாலும், பல்வேறு வழிமுறைகளில் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்தி வருகிறது. அதன் அடிப்படையில், ரிபப்லிக் டிவி முதலிடம் பிடித்தது என்ற விளக்கத்தை முன் வைத்து. இதனை தொடர்ந்து Barc அமைப்பின் CEO திரு. பார்த்தோ தாஸ்குப்தா அவர்களுக்கு NBA எழுதிய கடிதத்தில், “நீங்கள் கூறும் விளக்கம் ஒரு புறம் பரிசீலிக்கப்பட்டாலும், முன்னணி செய்தி சேனல்களான எங்களது உறுப்பினர்களுக்கு BARC முறையில் இருந்து விலகுவதை விட WATER MARK ஒளிபரப்பை மட்டும் நிறுத்துமாறு பரிந்துரை செய்துள்ளோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய முரண்பாடுகள் ஒரு வழியாக சரி செய்யப்பட்ட BARC முறையில் இருந்து விலகிய சேனல்கள் மீண்டும் இணைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.