• Call Us : 90030 35559 , 98424 50963
கேரளாவின் பிரபல டிஜிட்டல் MSO நிருவனத்தின் இணையதள் சேவை தற்போது தமிழகத்தில்...

ASIANET SATELLITE COMMUNICATIONS நிருவனத்தின் ஒரு அங்கமான ASIANET பிராண்ட்பேண்ட நிருவனம் தற்போது அதிவேக இணையதள சேவையை தமிழகத்தில் விரிவுபடுத்த உள்ளதாக கூறியுள்ளது... கேரளாவில் இணையதள சேவைக்காக மட்டும் கிட்ட தட்ட 56 இடங்களில் தனது கிளையினை நிறுவி வருகிறது இந்நிறுவனம். கேரளாவின் நகர் மற்றும் கிராமப்புறங்களை சேர்த்து கிட்ட தட்ட 2,00,000/- வாடிக்கையாளர்களை கொண்ட இந்த நிறுவனம் தனது புதிய இணையதள திட்டத்தை சமீபத்தில் கோழிக்கோட்டில் (Calicut) வைத்து அறிமுகம் செய்தது. GIGA FIBRE 200 என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த திட்டம் கோழிக்கோட்டில் இருந்து செயல்படும். இந்த தொடங்கப்படும் பொது சுமார் 25,000 இல்லங்கள் FIBER NET மூலம் இணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் இலக்கு அந்த பகுதியில் மட்டும் 1,00,000/- இல்லங்களை இணைப்பதே ஆகும். கேரளாவின் தனியார் ISP களில் ஆசியாநெட் நிறுவனத்திடம் தான் அதிக அளவிலான பேண்ட்வித் ஆகா மொத்தம் 30 GBPS வரை உள்ளது. GIGA FIBRE 200 என்ற பெயரில் தொடங்கப்படும் இந்த திட்டம் 200 mbps வேகத்தில் 200 gb வரை பயன்படுத்தும் பேக்கேஜ் ரூ. 999/- என்றும் கூறப்படுகிறது. மேலும், மூன்று மாத சந்தா தொகையை முன்பணமாக செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ROUTER கள் இலவசமாக வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. வழக்கத்திற்கு மாறாமல் FTTH தொழில்நுட்பத்தில் DOCSIS மற்றும் GPON தொழில்நுட்பம் மூலம் இணையம் விநியோகம் செய்யப்படுகிறது. இது பற்றி ஆசியாநெட் சேட்டிலைட் கம்யுனிகேஷன் நிறுவனத்தின் -- திரு. சங்கரநாராயணன் கூறுகையில், " வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெரும் வண்ணம், மின் வேக டவுன்லோடு, இடர்பாடு இல்லாத ஆன்லைன் ஸ்ட்ரீமிங், ஒரே நேரத்தில் பல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் செய்வது, எனில் அடங்காத டேட்டா வசதி என பல சேவைகளை இதில் உள்ளடக்கி உள்ளோம். இந்த கோழிக்கோட்டில் தொடங்கப்பட்டாலும், கேரளாவின் பல இடங்களுக்கு இந்த சேவை கொண்டு செல்லப்படும் என அவர் கூறியுள்ளார். மேலும், இந்த இணையதள சேவை தமிழகத்தில் விரிவு படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரபல, டிஜிட்டல் கேபிள் நிறுவனங்கள் தமிழகத்தில் தனது இணையதள சேவையினை விரிவு படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.