• Call Us : 90030 35559 , 98424 50963
அரசு கேபிள் டெண்டர்... உண்மையா?? வதந்தியா... ??

70 லட்சம் எஸ்.டி.பீ.க்கள் வழங்குவதற்காக TACTV ஆல் திருத்தம் செய்யப்பட்ட சர்வதேச டெண்டர் அளிப்பிற்கு பதிலளித்ததன் மூலம், ஏழு சர்வதேச விற்பனையாளர்கள், செட் டாப் பாக்ஸ்களை விநியோகிக்க ஆர்வம் காட்டியுள்ளனர் என்று கேபிள் டிவி விநியோக நிறுவனம் அரசு கேபிள் டிவி அறிவித்துள்ளது. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தற்காலிக MSO உரிமத்தை அரசு கேபிள் TVக்கு 2017 ம் ஆண்டு மே மாதம் வழங்கியுள்ளதுடன், 2017 ஆம் ஆண்டு ஜூலை 17-ம் தேதிக்கு முன்னர் டிஜிட்டல் மாற்றத்தின் செயல்முறையை பூர்த்தி செய்வதற்கு நிறுவனம் கட்டாயப்படுத்தியுள்ளது. அரசு கேபிள் டிவி டிஜிட்டல் உரிமம் பெற்றதை தொடர்ந்து டிஜிட்டல் அமலாக்கத்திற்கான பணிகளை செய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக செட் டாப் பாக்ஸ் விநியோகத்திற்கு சர்வதேச ஒப்பந்த புள்ளி கோரியது. நிபந்தைகளின் கெடுபிடி, கமிஷன் நெருக்கடி என்று காலம் தள்ளப்பட்ட இந்த டெண்டர் மாநகராட்சி டெண்டர் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும் மாற்றியமைத்து சமீபத்தில் நடைபெற்றது. இது பற்றிய கருத்துக்கள் பரவலாக வாட்ஸ் ஆப் தளங்களில் பேசப்பட்டு வருகிறது. அனால், அரசு தரப்பில் இது பற்றிய அறிவிப்புகள் இல்லை. அரசு கேபிள் டிவி மேலாண்மை இயக்குனர் அவர்களின் குறுஞ்செய்தி மட்டுமே அவ்வப்போது ஆப்ரேட்டர்களுக்கு தகவல் தருகிறது. மேற்படி, அரசு கேபிள் டிவி டிஜிட்டல் அமலாக்கத்திற்கு என்ன செய்துள்ளது என்ற பல கேள்விகள் நிலைத்து நிற்கிறது. இந்நிலையில் நடைபெற்ற டெண்டரில் 7 நிறுவனங்கள் பங்குபெற்றதாக கூறப்படுகிறது. ஆனால், நிபந்தனைகளை அரசு கேபிள் டிவி பரிசீலிக்க வேண்டும் என்பதால் எந்த நிறுவனமும் இது வரை முடிவு செய்யப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. பேசில், வியனைட், சமுத்ரா, லட்சுமி ரிமொட்ஸ், மந்த்ரா, ஆதிகேவ் போன்ற நிறுவனங்கள் பங்குபெற்றதாக தகவல். இதற்கிடையில், இந்த டெண்டரில் 5 நிறுவனங்கள் பங்குபெற்றது எனவும், விரைவில் இலவச செட் டாப் பாக்ஸ் சேவையினை அரசு கேபிள் டிவி தரும் என்றும் மேலாண்மை இயக்குனர் செய்தி அனுப்பியுள்ளார்.