• Call Us : 90030 35559 , 98424 50963
திருச்சியில்டி VK ஜிட்டல் ஆபரேட்டர்கள் கூட்டம்...

14-6-2017 மாலை 5.30 மணியளவில் திருச்சியில் VK DIGITAL திரு. கல்யாணசுந்தரம் முன்னிலையில் ஆப்பரேட்டர்கள் கூட்டம் நடைபெறுகிறது. திருச்சி பெமினா ஹோட்டல் எதிரிலுள்ள ஸ்ரீனிவாசா ஹாலில் இந்த கூட்டம் நடைபெற்றது… திரு பீ வீ கே அவர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டங்கள் மூலம் முற்றிலும் வித்தியாசமான அனுபவத்தை ஆப்பரேட்டர்கள் பெற இயலும், முழுக்க முழுக்க ஆப்பரேட்டர்கள் நலனை கருத்தில் கொண்டு மிக அதிக பட்சமாக தொழில் நுட்பங்களை பற்றி, வணிகத்தில் உள்ள சிக்கல்கள், வணிகத்தில் மறைந்து இருக்கும் சில வருமானம் பற்றிய உண்மைகளை இந்த மாதிரி கூட்டங்களில் மட்டுமே அறிய இயலும்… சு. சந்தானம் அவர்களின் வாட்ஸ் ஆப் செய்தி பாலிமர் நிறுவனம் பற்றிய ஒரு புரிதல் பாலிமர் நிறுவனம் தனது ஒளிபரப்பை உள்ளுர் சேனல் மூலமாக தொடங்கியது பாலிமர் நிறுவனம் ஒரு ஆப்பரேட்டரால் உருவாக்கப்பட்ட நிறுவனம் பின்னாளில் பாலிமர் நிறுவனம் தனது ஒளிபரப்பை உலகெங்கும் அறியும் வகையில் சேட்டிலைட் மூலம் தனது ஒளிபரப்பை துவங்கியது அதன் தொடர்ச்சியாக பாலிமர் செய்தி சேனல் பாலிமரின் ஒரு அங்கமாக இடம்வகித்தது அதன் பின்னர் சகானா எனும் மற்றொரு சேனல் உதயமானது இன்றளவும் பாலிமர் செய்தி சேனல் தமிழகத்தில் முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது இந்நிலையில் பாலிமர் நிறுவனம் காலத்தின் கட்டாயத்தில் தனது டிஜிட்டல் ஒளிபரப்பை வீ கே டிஜிட்டல் எனும் பெயரில் தொடங்கியது சென்னையை பொருத்தவரை எட்டாவது வணிக நிறுவனமாக உருவெடுத்து இன்று இணைப்புகள் அடிப்படையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேற்றம் அடைந்துள்ளது சென்னையில் தொடங்கிய பாலிமரின் வீ கே டிஜிட்டல் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் புதுச்சேரி மற்றும் தமிழகமெங்கும் தனது விரிவாக்க பணிகளை எங்கள் திட்டங்களை அடிப்படையாக கொண்டு விரிவாக்கம் செய்து வருகிறது வரும் நாட்களில் ஆப்பரேட்டர்கள் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளபட்டு அவைகளை நடைமுறைக்கு வரும் வகையில் மாநிலம் தழுவிய ஒரு குழு அமைக்கப்பட்டு அந்த குழு பாலிமர் நிறுவனத்திற்கும் ஆப்பரேட்டர்களுக்கும் இடையே நல்லுறவை மேம்படுத்த பாடுபடும் வகையில் செயல்படும் அதில் சென்னை முதல் கன்னியாகுமரி வரை உள்ள அணைத்து ஆப்பரேட்டர்களும் ஒருங்கிணைத்து பாகுபாடின்றி செயல்படுவார்கள் இதே பாலிமர் நிறுவனம் தனது அங்கமாக C32 எனும் இணைய சேவைக்கான மூன்றாவது ஒரு நிறுவனத்தை கடந்த ஆண்டு இறுதியில் துவங்கியது இதனோடு பாலிமர் நிறுவனம் வி கே டிஜிட்டல் நிறுவனத்தின் மற்றொரு அங்கமாக வீ கே ஐபி டிவி வணிகத்தை தயார் நிலையில் வைத்துள்ளது இவ்வாறான வளர்ச்சிக்கு காரணம் ஆப்பரேட்டர்கள் கொடுத்த அளவிடத்கறிய ஆதரவும் தனது பண்முக சேவையுமே இன்று பாலிமர் நிறுவனம் ஆலமரத்தை போல வளர்ந்து நிற்கிறது ஒரு ஆப்பரேட்டரால் பல ஆப்பரேட்டர்கள் நலனில் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்ட திட்டங்களுடன் ஆப்பரேட்டர்களின் பேராதரவை பெற்று ஆப்பரேட்டர்களின் வளர்ச்சியை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது பாலிமர் நிறுவனம் என்பது பெருமைக்குரிய விஷயமாக நாம் பார்க்க வேண்டும் இதில் தென்னிந்தியாவில் உள்ள நிறுவனங்களில் தொழில் நுட்பம், துல்லியமான ஒளிபரப்பு, ஆப்ரேட்டர்களுக்கு அதிக லாபம், ஆப்ரேட்டர்களோடு சகஜமான உறவு இவைகள் பாலிமர் நிறுவனத்தின் தனி சிறப்பு இதை பாலிமர் நிறுவனத்தில் இணைந்து வணிகம் செய்வோர் நிச்சயம் அறிவர் நண்பர்களே இங்கு நாங்கள் பல நிறுவனங்கள் பற்றிய விவரங்களை அறிந்து, அதில் மிக சிறந்த நிறுவனம் பாலிமர் மட்டுமே என்ற முடிவுக்கு வந்த பின்னர் எங்கள் திட்டங்களை நிறைவேற்ற பாலிமர் நிறுவனத்துடன் பல முறை கலந்தாய்வு செய்து இறுதியில் எங்கள் திட்டங்களை பாலிமர் நிறுவனம் ஏற்று கொண்ட பின்னரே இதோ உங்களிடம் அந்த திட்டங்களை செயல்படுத்த முனைகிறோம் மேற் கூறிய அணைத்து விளக்கங்களும் நேற்று திருச்சியில் நடந்த கூட்டத்தில் நிருபணமாகியிருக்கும் என்று நம்புகிறேன் தமிழ கேபிள் டிவி உரிமையாளர்களே பாலிமர் நிறுவனம் தனது ஒளிபரப்பை ஆப்பரேட்டர்களும் பாலிமர் நிறுவனமும் பயனுறும் வகையில் செயல் பட உங்களை அன்புடன் அழைக்கிறது இனி ஒளிபரப்பாளர்கள்கள், எம் எஸ் ஓ க்கள், எல் சி ஓ க்கள் என்ற பேதமின்றி ஒன்றிணைந்து செயல்பட ஒரு அறிய வாய்ப்பை பாலிமர் நிறுவனம் வழங்கவுள்ளது இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி அணைவரும் பயனுற வேண்டும் என்று தாழ்மையுடன் வேண்டுகிறேன்.