• Call Us : 90030 35559 , 98424 50963
அரசு கேபிள் டிஜிட்டல் அமலாக்கத்தில் கால நீட்டிப்பு

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி க்கு சமீபத்தில் தற்காலிக டிஜிட்டல் உரிமம் வழங்கியது மத்திய அமைச்சகம். சில நிபந்தனைகளுடன் வழங்கப்பட்ட இந்த உரிமை ஆபரேட்டர்கள் மத்தியிலும் டிஜிட்டல் எம்.எஸ்.ஓ க்கள் மத்தியிலும் சங்கங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டமைப்பு தரப்பிலும் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. அரசு கேபிள் டிவி க்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளில் முக்கிய நிபந்தனையாக 17.7.2017 க்குள் முழுவதுமாக டிஜிட்டல் அமலாக்கம் செய்திருக்க வேண்டும் எனவும், தவறும் படத்த்தில் உரிமம் ரத்து செய்யபடும் எனவும் கூறப்பட்டது. இந்நிலையில் செட் டாப் பாக்ஸ் டென்டெட், ஆப்ரேட்டர்களின் ஆன்லைன் பதிவு என படிப்படியாக வேலைகள் நடந்து வந்தாலும். ஜூலை 17 ம் தேதிக்குள் முழுமையான டிஜிட்டல் அமலாக்கம் செய்ய முடியுமா என்பது கேள்விக்குறி தான். பல, சூழல்களை மனதில் கொண்டு மேலும் ஒரு மூன்று மாத காலம் அவகாசம் கோரி மத்திய அமைச்சகத்திடம் TACTV விண்ணப்பித்தது. அதனை பரிசீலனை செய்த அமைச்சகம், ஒரு மாத காலம் மட்டும் அவகாசம் கொடுத்துள்ளது. அதனால், தற்போதைய நிலவரப்படி (JUNE 21) அனலாக் TO DIGITAL SWITCH OVER- க்கான கடைசி தேதி தமிழகத்தில் 17.08.2017 என்று நம்பப்படுகிறது.