• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் சங்கங்களின் கூட்டமைப்பின் டெல்லி பயணம்... - Special Report

DMR Special Report

 

தமிழகத்தில் கேபிள் தொழிலில் ஈடுபட்டிருக்கும் கேபிள்

ஆப்பரேட்டர்களில் சுமார் 26000 பேர் TACTV-ல் பதிவு செய்துள்ளனர். அவர்கள் கிட்டதட்ட எழுபது லட்சம் வாடிக்கையாளர்களுக்கு இணைப்பு வழங்கிய நிலையில் அவை அனைத்தும் அரசு கேபிளுக்கு சொந்தமானது என TACTV அறிவித்ததால் ஏற்பட்ட முரண்பாட்டினால் ஆப்பரேட்டர்கள் மத்தியில் சலசலப்பு நிலவியது.

 

முறையாக DAS உரிமம் பெற்ற ஆப்பரேட்டர்களின் கட்டுப்பாட்டு அறைகள் சீல் வைக்கப்பட்டது.

 

கேபிள்டிவி சட்டப்படி நோடல் அதிகாரியான மாவட்ட ஆட்சித்தலைவர் அரசு கேபிளுக்கு சாதகமாக மட்டுமே

செயல்பட்டு மற்ற நிறுவனங்கள் செட்டாப் பாக்ஸ்  வழங்கினால் உரிமம் ரத்து என அறிக்கை விட்டது போன்ற பல்வேறு முரண்பாடுகள் அடிப்படையில் கேபிள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக MIB மற்றும் TRAI யிடன் முறையிடுவதற்காக டெல்லி சென்றனர்.

 

இந்த கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. DGVP சேகர்,

TCOA தலைவர் திரு.ஆறுமுகம்,

TCCOA தலைவர் திரு டி. வி.ரமேஷ்,

TCUS துணைத்தலைவர் கும்பகோணம் திரு. மனோகரன்,

TCOA துணைத்தலைவர் திரு. விஷ்ணு ராம் மற்றும் பலர் கடந்த ஜூலை 21ம் தேதி வெள்ளிக்கிழமை டெல்லி சென்றனர்.

 

TRAI சந்திப்பு:

 

TRAI ஆலோசகர் திரு. S.K.சுனில் சிங்கால் அவர்களை சந்தித்த கூட்டமைப்பு நிர்வாகிகள் தமிழ்நாட்டில் கேபிள் டிவி துறையில் நிலவி வரும் அரசியல் பற்றி பேசியதாக கூறப்படுகிறது. 21-07-2017 அன்று மதியம் 2 மணி முதல் 3 மணி வரை நடை

பெற்ற சந்திப்பில் TACTV உடனான முரண்பாடுகளை ஆலோசகரிடம் விவரித்தாக தெரிகிறது...

திரு. DGVP சேகர் வாட்ஸ் ஆப்-ல் வெளியிட்ட செய்தியின் படி சில தகவல்கள் நமக்கு தெரிகிறது. அதில் அவர் கூறியதாவது... அரசு கேபிள் ஆப்பரேட்டர்களோட ஒப்பந்தம் செய்து 

கொள்ளாதது தவறு என்றும், நூறு இணைப்பு வைத்திருப்பவரும்.. பெறிய MSO என அனைவரும் TRAI-யின் பார்வையிலும், சட்டத்தின் முன்பும் ஒன்றுதான் என்றும் ஆலோசகர் கூறியுள்ளார் என்பது நமக்கு தெரிகிறது... TRAIக்கு வரும் புகார்களை Ministry of Information and Broadcasting(MIB) என சொல்லபடும் மத்திய அமைச்சகத்திற்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல் புகாரில் சம்மந்தபட்ட அரசு கேபிள் டிவி கார்பரேஷனுக்கு விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் திரு. சுனில் கூறியுள்ளார் என தெரிகிறது...

 

மேலும், சில விளக்கத்தை டிராய் கோரியுள்ளது. அரசு கேபிளுக்கு உரிமம் கொடுத்ததில் TRAI க்கு உடன்பாடு இல்லை எனவும், சில பிரச்சனைகளுக்கு நீதிமன்றங்கள் மூலம் சட்டரீதியான தீர்வுகளே முடிவு என்று கூறபட்டது என அந்த வாட்ஸ் ஆப் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்...

 

அனைத்து கோரிக்கைகளும் ஆராயப்பட்டு TRAI முறைப்படி எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்கும்

என்று TRAI தரப்பில் உறுதி செய்யபட்டுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார்.

 

MIB சந்திப்பு:

 

Ministry of Information & Broadcasting தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சத்தின் JOINT SECRETARY உடனான சந்திப்பிலும் அனைத்து விஷயங்களும் விளக்கப்பட்டது எனவும்..

அதற்கு MIB தகுந்த நடவடிக்கை எடுக்கும் என்ற உத்திரவாதமும் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது...

 

பொது போராட்டங்கள்:

 

கேபிள் ஆப்பரேட்டர்கள் பிரதிநிதியாக கேபிள் டிவி நிலைப்பாடு பற்றி பேச டில்லி சென்ற கூட்டமைப்பு நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கேபிள் சார்ந்த சந்திப்புகள் மட்டுமின்றி டெல்லியில் பல நாட்களாக போராடி வரும்

தமிழக / இந்திய விவசாயிகள் போராட்டத்திலும் சென்று ஆதரவு கூறியுள்ளனர்... மது ஒழிப்பிற்காக போராடும் குமரி வீரர் திரு. டி.டேவிட் ராஜ் அவர்களை சந்தித்து வாழ்த்து கூறியுள்ளார்கள்.

 

வழக்கறிஞர் திரு. ரீகன்,

திரு. உதயம், திரு. சந்திரசேகர், திரு. சுரேஷ் ஆகியோர் கூட்டமைப்பின் இந்த முன்னெடுப்பிற்கு துணை நிற்பதாகவும் அவர்களுக்கும் தமிழக கேபிள் ஆப்பரேட்டர்களுக்கும் நன்றி கூறியுள்ளார்கள்.

 

இதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெறும் என்று அறிவித்துள்ளனர்.

 

#DigitalMediaReporter