• Call Us : 90030 35559 , 98424 50963
லோக்கல் சேனல் உரிமையாளர்கள் கூட்டம்

தமிழ் திரைப்பட ட்ரைலர்கள், காட்சிகள், பாடல்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகள் அனைத்தும் இனி தயாரிப்பாளர் சங்கம் மூலமாக விநியோகம் செய்யப்படும். சம்மந்தபட்ட படத்தின் தயாரிப்பாளர் நேரடியாக விற்பனை செய்வார். திரைப்பட தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பகிரங்க அறிவிப்பு.

தொகை நிர்ணயம் செய்வது குறித்தும் மறு பரிசீலனை செய்வது குறித்தும் இரு தரப்பிலும் தனி கமிட்டி அமைக்கப்பட்டு பேச்சு வார்த்தை நடத்தி முடிவு செய்யப்படும்.

உள்ளூர் தொலைக்காட்சிகளுக்கு ட்ரைலர்கள் கமர்சியலாக கொடுக்கபடும் என திரு. விஷால் அறிவிப்பு.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் திரு. விஷால், தயாரிப்பாளர் திரு. பிரபு மற்றும் திரு. சந்திரசேகர், திரு. மன்சூர் அலி கான் ஆகியோர் பங்கேற்றனர். லோக்கல் சேனல் உரிமையாளர்களுடன் நேரடியாக கலந்துரையாடல் செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற திரு. DGVP சேகர் கேபிள் டிவியின் அவல நிலை பற்றியும், கேபிள் டிவி உரிமையாளர்களின் பிரச்சனைகளையும் திரைப்பட தயாரிப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என கூறினார். மேலும், டிஜிட்டல் முறையில் பயணிக்க தயாராகி வரும் ஆப்ரேட்டர்களை இணக்கமாக உடன்படிக்கை செய்து தொழில் செய்திடும் படி கேட்டுக்கொண்டார். மேலும், உள்ளூர் சேனல் உரிமையாளர்கள் சில கேள்விகளை முன்வைத்தனர். பொதுவாக கேட்கப்பட்ட கேள்விகளும் தயாரிப்பாளர்கள் கொடுத்த பதில்களும் பின் வருவன

பாடல்கள், காட்சிகள் லோக்கல் சேனலில் ஒளிபரப்பு செய்யலாமா?

கண்டிப்பாக செய்யலாம். ஆனால் சம்மந்தப்பட்ட தயாரிப்பாளர் தரப்பில் ஒப்புதல் பெற்று உரிமம் பெற்றிருக்க வேண்டும். தவறும் பட்சத்தில் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

ஏற்கனவே உரிமத்திற்காக பணம் கொடுத்த நிறுவனங்களான வெல் மீடியா, பாபா விஷன் போன்ற நிறுவங்களின் நிலை என்ன?
பாபா விஷன் கோருவதற்கு எந்த உரிமமும் இல்லை. இனி எல்லா உரிமங்களை நேரடியாக தயாரிப்பாளர் வழங்குவார். தயாரிப்பாளர் சங்கம் இதனை ஒருங்கிணைப்பு செய்யும். போலியாக உரிமம் வழங்குவதையும் போலியாக உரிமம் பெறுவதையும் தவிர்க்கவும் இடை தரகர்களை தவிர்க்கவே இந்த முடிவு என விஷால் கூறினார்.

ஏற்கனவே நஷ்டத்தில் செயல்பட்டு வரும் இந்த லோக்கல் சேனல்களிடம் லட்ச கணக்கில் மீண்டும் தொகை கேட்பது சரியா?
எம்.எஸ்.ஓ, அரசு கேபிள், பராமரிப்பு செலவு, வாடகை என அனைத்தும் செலவு செய்யும் நீங்கள், பிரதானமாக ஒளிபரப்பு செய்யப்படும் திரைப்பட பாடல்கள் மற்றும் காட்சிகளுக்கு தொகை செலுத்துவதில் என்ன தவறு. அதை ஒரு உரிமையாளராக கோருவதில் என்ன தவறு? என்ற பதில் தயாரிப்பாளர்கள் தரப்பில் தரப்பட்டது.

உரிமம் பெற என்ன தொகை.?
தற்போது ஒரு தொகை நிர்ணயம் செய்துள்ளோம். இது பற்றிய விரிவான கலந்தாய்வு மற்றும் முடிவுகள் பேச்சு வார்த்தைக்கு பிறகு நடைபெறும். இரு தரப்பில் இருந்து ஒரு கமிட்டி அமைக்கப்படும். அவர்கள் பேச்சு வார்த்தை அடிப்படையில் தொகையினை முடிவு செய்வார்கள் என தெரிவித்தார் திரு. விஷால்.

இவ்வாறு ஒரு சில கேள்விகளும் அதற்கான பதில்களும் பதிவு செய்யப்பட்டது.

இதனிடையே, தமிழ் விஷன் என்ற நிறுவனம் ஆப்ரேட்டர்களால் அமைக்கப்பட்ட நிறுவனம் செட் டாப் பாக்ஸ் மூலம் திரைப்படங்களை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அது தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்தை சந்திக்க அனுமதி வேண்டும் எனவும் கேட்கப்பட்டது. அப்போது, இது உள்ளூர் தொலைக்காட்சி உரிமம் தொடர்பான கூட்டம் எனவும், VOD எனப்படும் தமிழ் விஷன் பற்றிய கலந்தாய்வும் செய்யப்படும் எனவும் தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. காலை -- மணியளவில் தொடங்கப்பட்ட இந்த கூட்டம் மதியம் - மணியளவில் மதிய உணவுடன் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கான ஒருங்கிணைப்பு வேலைகளை மதுரை திரு. அசோக், திருச்சி திரு. பாலு, கோவை திரு. சஞ்சீவி மற்றும் பல உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

உள்ளூர் தொலைக்காட்சி உரிமையாளர்கள் கூட்டமைப்பு என்பது ஒரு சங்கமாக உருவாக்கப்பட்டு ஒற்றுமையுடன் செயல்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்று மதுரை திரு. அசோக் கூறினார்.

#DigitalMediaReporter