• Call Us : 90030 35559 , 98424 50963
அரசு கேபிள் டிவி க்கு எதிராக பொது நல வழக்கு.

அரசு கேபிள் டிவி க்கு எதிராக பொது நல வழக்கு.

அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் கொள்முதல் செய்வது குறித்தும் நிரந்தர உரிமம் இல்லாமல் இலவச செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்வது குறித்தும் சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞர் திரு. ஸ்ரீனிவாச மோகன் ஒரு பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.

அந்த வழக்கில் குறிப்பிடப்பட்டதாவது:

அ.இ.அ.தி.மு.க மறைந்த முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா அளித்த தேர்தல் வாக்குறுதியை தொடர்ந்து இலவச டிஜிட்டல் கேபிள் செட் டாப் பாக்ஸ் மாநில அரசு தரப்பு நிறுவனமான TACTV மூலம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே சமயம் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின்(MIB) தமிழக அரசின் TACTV க்கு தற்காலிக உரிமம் மட்டுமே வழங்கியுள்ளது. அதுவும் TRAI பரிந்துரைப்படி பரிசீலித்தால் அரசு தரப்பு நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட டிஜிட்டல் கேபிள் உரிமம் ரத்து செய்ய படலாம். இந்நிலையில், மக்களின் பணத்தில் இலவச செட் டாப் பாக்ஸ் திட்டம் கொண்டுவருவதை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதனால், அரசு கேபிள் டிஜிட்டல் உரிமத்தை TRAI பரிந்துரை படியே மத்திய அமைச்சகம் பரிசீலனை செய்திடவும், அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் கொள்முதல் செய்வதை தடுத்திடவும் உயரிய நீதி மன்றம் உதறிவிட்டு வேண்டும் என்பதே வழக்கறிஞர் திரு. மோகன் அவர்களின் மேலான வாதமாக உள்ளது.

மத்திய அரசும் அமைச்சகமும் TRAI பரிந்துரை படியே செயல்பட வேண்டும் எனவும், அப்ப்போது மட்டுமே அரசு கேபிள் டிவியின் இந்த செயல்பாடுகள் தடுத்த நிறுத்தமுடியும் என்றும் அவர் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இது மாநில அரசை பற்றிய விஷயம் அல்ல எனவும், இது பொது மக்களின் வரி பணம் சம்மந்தப்பட்ட விஷயம் எனவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் குறிப்பிடத்தக்க விஷயங்கள்...

தமிழக அரசின் TACTV 5 ஆண்டு போராட்டத்திற்கு பின்னர் டிஜிட்டல்(DAS) உரிமம் பெற்றுள்ளது. ஜூலை 17 ம் தேதிக்குள் அனலாக் நிறுத்திட வேண்டும் என்ற நிபந்தையும் அரசு கேபிள் டிவி க்கு இருந்தது. பின்னர், கோரிக்கையின் அடிப்படையில் அது 2017, ஆகஸ்ட் 17 ம் தேதியாக மாற்றப்பட்டது. அதனை தொடர்ந்து அரசு கேபிள் டிவி யும் 10 லட்சம் HD செட் டாப் பாக்ஸ் மற்றும் 60 லட்சம் SD செட் டாப் பாக்ஸ் கொள்முதல் செய்ய ஒப்பந்தங்கள் செய்தபோதும் இது வரை செட் டாப் பாக்ஸ் வந்து சேர வில்லை. இதனால், ஆகஸ்ட் 17 ம் தேதி என்ற காலக்கெடுவை டிசம்பர் மாதம் வரை நீடிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சகத்திடம் கோரிக்கை வைத்துள்ளது. இந்நிலையில் இதற்கான முடிவினை மத்திய அமைச்சகம் தான் எடுத்திட வேண்டும்.

சமீபத்தில் சன் நெட்ஒர்க் தனது அனலாக் சேவையை நீடிக்கலாம் என்றும் சென்னை உயர் நீதி மன்றம் ஒரு அனுமதியினை வழங்கியுள்ளது.

இந்தியாவிலேயே டிஜிட்டல் கேபிள் டிவி உரிமம் பெற்ற ஒரே மாநில அரசு தமிழக அரசு மட்டுமே தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

#DigitalMediaReporter