• Call Us : 90030 35559 , 98424 50963
உதயா நியூஸ் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது.73 ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள்.

உதயா நியூஸ் தொலைக்காட்சி நிறுத்தப்பட்டது.73 ஊழியர்கள் நீக்கப்படுகிறார்கள்.

சன் குழுமத்தின் கன்னட சேனலான உதயா நியூஸ் சேனலை அக்டோபர் 24ம் தேதி நிருத்துவதாக சன் குழுமம் அறிவித்துள்ளது. இது குறித்து சன் குழுமம் கர்னாடக செயலகத்திற்கு அனுப்பிய கடித்தத்தில் குறிப்பிட்டதாவது.

 

கடந்த 19 ஆண்டுகளாக சன் குழுமம் கன்னட செய்தி சேனலை கட்டமைப்பு செய்ய பல முதலீடுகளை செய்து வந்ததது. இந்நிலையில் கன்னட செய்தி சேனல் சந்தையில் போட்டிகள் நிலவுவதாலும், பார்வையாளர்கள் குறைந்துவிட்டதாலும் பெறும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனவும், இதனால் இந்த சேனலை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என முறைப்படி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சன் குழுமம் இத்தகைய முடிவு எடுத்ததில் ஒளிபரப்பு துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

சன் குழுமத்தின் மற்ற கன்னட சேனல்களான உதயா டிவி மற்றும் உதயா காமெடி ஒளிபரப்பு தொடர்ந்து இருக்கும் என தெரிகிறது.

 

#DigitalMediaReporter