• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் டிவி சங்கக் கூட்டமைப்பு மாபெரும் உண்ணாவிரதம்

கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக மத்திய மாநில அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும் உண்ணாவிரதம் இன்று மதுரையில் நடந்தது.

''25 வருடங்களாக கஷ்டபட்டு பல இன்னல்களைச் சந்தித்து உருவாக்கிய கேபிள் தொழிலையும், எங்களுடைய வாடிக்கையாளர்களையும், உபகரணங்களையும் தங்களது என்று கூறுவதை அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுத்திக்கொள்ள வேண்டும், டிராய் நிர்ணயித்த மாதந்திர கட்டணத்தை ஆபரேட்டர்களே மக்களிடம் நேரடியாக வசூலிக்க கேபிள் கார்ப்பரேஷன் அனுமதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் வசூலிக்கும் முறையை ரத்துசெய்து, வசூலிக்கும் உரிமையை ஆபரேட்டர்களிடம் வழங்க வேண்டும்,

தரை வழியில் ஆப்டிகல் பைபர் கேபிளைக் கொண்டு செல்ல மத்திய அரசின் அறிவிப்பின்படி குறைந்த கட்டணத்தை விதிக்க வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களிடம் மரியாதைக் குறைவாகவும், சட்ட விரோதமாக செயல்படும் மாவட்ட அளவிலான கேபிள் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கேபிள் ஆபரேட்டர்களுக்காக நல வாரியம் அமைக்க வேண்டும். ஏற்கெனவே இத்தொழிலில் ஈடுபட்டு வரும் எங்களுக்குப் போட்டியாக புதிய ஆபரேட்டர்களை அதிகாரிகளே உருவாக்கி வருகிறார்கள். அவர்களை தடுக்க வேண்டும்' என்பது போன்ற பல கோரிக்கைகளை முன் வைத்து இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை இன்று நடத்தினார்கள்.

இந்த கூட்டத்தில் தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்கம், தமிழக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பொது நல சங்கம், தமிழக கேபிள் டிவி சர்விஸ் புரவைடர்கள் சங்கம், கேபிள் ஆபரேட்டர்கள் கில்டு சங்கம் என பல்வேறு சங்கங்கள் ஒன்றாக கலந்து கொண்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுமார் 2000 கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்ட இந்த போராட்டத்தில் அணைத்து சங்கத்தின் மாவட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழ் தலைமை ஆசிரியர் திரு. அன்பு அவர்கள் கலந்து கொண்டு கேபிள் டிவி டிஜிட்டல் அமலாக்கத்தில் இருக்கும் இடர்பாடுகள் குறித்தும். இந்த வேளையில் -- மூலம் கேபிள் தொழில் நலிந்து வருவது பற்றியும் பேசினார்.