• Call Us : 90030 35559 , 98424 50963
TACTV GM திருமதி. ரமண சரஸ்வதி INTERACTION

அரசு கேபிள் டிவி பற்றியும், இன்று தொடங்கப்பட்ட டிஜிட்டல் ஒளிபரப்பு பற்றியும் ஆபரேட்டர்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் நிலவி வருகிறது. இந்நிலையில் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் சார்பில் அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பொது மேலாளர் திருமதி. ரமண சரஸ்வதி அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர்களது பதிலும்... சிறப்பு தொகுப்பு..

*அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் விநியோகம் பற்றி கூறவும்.?*

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி அறிவித்தபடி மூன்று விதமான செட் டாப் பாக்ஸ் கொடுப்பதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக SD பாக்ஸ் விநியோகம் செய்கிறோம். ஒரு மாத காலத்தில் HD பாக்ஸ் விநியோகம் தொடங்கும். முன்னரே வெளியிட்ட செய்தி அறிக்கையின் படி தமிழகத்தில் பிரதான நகரங்களில் STOCK POINTகளில் இருந்து மாவட்ட தலை நகரங்களுக்கு செட் டாப் பாக்ஸ் விநியோகம் செய்யப்படும். தற்போது ஒரு மாவட்டத்திற்கு ஆயிரம் என்ற விதம் 32 மாவட்டங்களுக்கு 32,000 செட் டாப் பாக்ஸ் பெறப்பட்டு அந்தந்த மாவட்ட தலைநகரங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

*அரசு கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ் முற்றிலும் இலவசமா?*

STANDARD DEFINITION எனப்படும் SD செட் டாப் பாக்ஸ் இலவசம்.

HIGH DEFINITION எனப்படும் HD செட் டாப் பாக்ஸ் மற்றும் TRIPLE PLAY செட் டாப் பாக்ஸ் விலை நிர்ணயம் செய்யப்படும். அது இலவசம் அல்ல.

*செட் டாப் பாக்ஸ் ஆப்ரேட்டர்களுக்கு கொடுப்பதில் ஏதேனும் நிபந்தனை உள்ளதா?*

முன்னரே வெளியிடப்பட்ட INTER CONNECT ஒப்பந்த படியும், MANUAL OF PRACTISE படியும் விநியோகம் நடைபெறும். SD பொறுத்த அளவில் ஆபரேட்டர்கள் எந்த பணமும் அரசு கேபிள் நிறுவனத்திடம் செலுத்த வேண்டியது இல்லை. ஆபரேட்டர்கள் ஒரு முறை ONE TIME ACTIVATION கட்டணம் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்து கொள்ளலாம். ரூ. 200/- ACTIVATION CHARGES என வாடிக்கையாளர்களிடம் இருந்து லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் பெற்று கொள்ளலாம்.

*சேனல் பேக்கேஜ் பற்றி விவரிக்க முடியுமா?*

தற்போது நான்கு விதமான பேக்கேஜ் வெளியிடப்பட்டுள்ளது, என்று கூறிய அவர் அரசின் செய்தி அறிக்கை நகலை காண்பித்தார். அந்த பட்டியல் இதோ.

பட்டியல்

கட்டண சேனல்கள்

FREE TO AIR சேனல்கள்

மொத்த சேனல்கள்

மாத சந்தா

பேக்கேஜ் 1

22

158

180

ரூ. 125/-

பேக்கேஜ் 2

72

158

230

ரூ. 175/-

பேக்கேஜ் 3

102

158

260

ரூ. 225/-

பேக்கேஜ் 4

142

158

300

ரூ. 275/-

 

*சென்னை, வேலூர், கோவை, தஞ்சாவூர், திருநெல்வேலி ஆகிய இடங்களில் அரசு கேபிள் டிவி கட்டுப்பாட்டு அறை இருப்பதாக கூறப்படுகிறதே. டிஜிட்டல் ஒளிபரப்பில் இது அனைத்துமே செயல்படுமா?*

தற்போது தமிழகத்தின் அனைத்து இடங்களுக்கும் தாலுகா வாரியாக சென்னை கட்டுப்பாட்டறையில் இருந்து தான் சிக்னல் கொடுக்கப்படும்.

*தற்போது தமிழகத்தில் இருக்கும் அரசு கேபிள் டிவி MSO க்கள் அந்த கட்டுப்பாட்டறைகள் நிலை என்ன?*

டிஜிட்டல் முழுவதுமாக அமலாக்கம் செய்யும் வரை அந்த அறைகள் நீடிக்கலாம். முழுமையாக டிஜிட்டல் அமலாக்கம் செய்த பின்னர் நேரடியாக அரசு கேபிள் டிவி நிறுவனம் செயல்படும்.

 

சிக்னல் எவ்வாறு மூலம் கொண்டு செல்லப்படுகிறது?

BSNL OPTICAL FIBER மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிக்கும்  சிக்னல் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.

*சென்னையில் மட்டுமே கட்டுப்பாட்டறை என்றால் லோக்கல் சேனல்கள் எவ்வாறு செயல்படும்?*

செயற்கைகோள் சேனல்கள் சென்னை CONTROL ROOM-ல் இருந்து ஒளிபரப்பு செய்யப்படும். அந்த சிக்னல் BSNL EXCHANGE மூலம் தாலுக்கா ரீதியாக கொண்டு செல்லப்படும். அந்தந்த ஊரில் இருக்கும் PRIVATE LOCAL CHANNEL(PLC) இனி அந்த பகுதியின் கேபிள் கட்டுப்பாட்டறையாக செயல்படும். லோக்கல் சேனல்கள் டிஜிட்டல் முறையில் நவீன தொழில்நுட்பத்தில் ஆங்காங்கே இணைத்து கொள்ளப்படும்.

*BSNL அலுவலகத்தில் இருந்து ஆப்ரேட்டர்களுக்கு சிக்னல் செல்வது எப்படி.?*

தாலுக்கா தலைமையிடத்தின் BSNL EXCHANGE வரை TACTV தனது சிக்னலை கொண்டு சேர்த்து விடும். அங்கு இருந்து ஆப்ரேட்டர்கள் சிக்னல் எடுத்து கொள்ள வேண்டும். கடை கோடி பொது மக்களுக்கு லோக்கல் கேபிள் ஆபரேட்டர்கள் கேபிள் டிவி சேவைகளை வழங்குவார்கள்.

TACTV டிஜிட்டல் ஒளிபரப்பில் சேனல்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.