• Call Us : 90030 35559 , 98424 50963
பேட்டியும் பின்னணியும்

கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளோம்: என தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் திரு. மணிகண்டன் பேட்டி

செய்தியாளர்களிடம் திரு. மணிகண்டன் கூறியதாவது...

பெரு நாட்டில் உள்ள கூகுள் பலூனை சென்னைக்கு கொண்டுவர கோரிக்கை வைத்துள்ளோம் என்று அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார். இயற்கை பேரிடர்களின்போது தகவல் தொடர்புகள் பாதிக்காமல் இருக்க கூகுள் பலூன் பயன்படும். மேலும் தமிழகத்தில் கூகுள் சென்டரை அமைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார். 

கூகிள் பலூன் என்றால் என்ன என்பதை பற்றி ஒரு சில மாதங்களுக்கு முன்னர் நாம் வெளியிட்டுள்ளோம். இந்த பலூன்கள் வானில் மேகங்களுக்கு மேல் மிதக்க கூடியவை... இதன் மூலம் WIRELESS இணைய சேவை பெற முடியும். தரை மட்டத்தில் இருந்து விமான போக்கு வரத்திற்கு இடையூறு இல்லாமல் இந்த பலூன்கள் பறக்க விடப்படும். இதன் மூலம் BANDWIDHT RECEIVE செய்யப்பட்டு இணைய சேவை வழங்கப்படும். பேரிடர் காலங்களில் டவர் மற்றும் UG பேண்ட்வித்தில் இடர்பாடு ஏற்படும் போது, இந்த பலூன்கள் இணைய மற்றும் டெலிகாம் சேவைகளை கொடுக்கும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் இலங்கை உட்பட பல நாடுகளில் அமல்படுத்தப்பட்டு வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. இந்த தொழில்நுட்பத்தின் தந்தை கூகிள் நிறுவனம். கூகிள் நிறுவனம் ஒரு SEARCH ENGINE மட்டும் என்று நினைக்கும் பலருக்கு பல வியப்பூட்டும் விஷயங்கள் உள்ளதே. பலருக்கு இது அறிந்திருக்க கூடும்.

கூகிள் நிறுவனம் SEARCH ENGINE மட்டுமின்றி பல செயலிகளை (APPLICATIONS & GADGETS) அறிமுகம் செய்துள்ளது. MEMOS, REMINDERS, DOCS, PHOTO & VIDEO EDITING SOFTWARES, MUSIC & VIDEO PLAYERS  போன்ற பல மென்பொருள்கள், செயலிகள், GADGETSகள் மற்றும் 360 DEGREE கேமராக்கள் என பல்வேறு அம்சங்களை கொண்டது தான் கூகிள். மென்பொருள் மட்டுமின்றி சில வன்பொருட்களையும் சந்தை படுத்தும் முயற்சியில் கூகிள் பல ஆண்டுகளாக உள்ளது. சில பொருட்களை அறிமுகமும் செய்துள்ளது. அதில் ஒன்று தான் இந்த கூகிள் லென்ஸ்.

கூகிள் நிறுவனம் இதற்காக ஒரு பிரத்யேக லெப் அமைத்து அதில் பல்வேறு தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்களை செய்து வருகிறது. அது குறித்து திரு. ஞா. சுதாகர் விகடனில் எழுதிய கட்டுரை தொகைப்பை பார்க்கலாம்.

இன்டர்நெட் பலூன்... விண்வெளி பாலம்... கூகுளின் சீக்ரெட் லேபில் என்னதான் நடக்கிறது!?

"ஒரு கனவு நம்மை என்ன செய்யும்? "

"என்ன வேண்டுமானாலும் செய்யும்."

தோ ஒரு தத்துவார்த்த விளக்கம் போலத் தோன்றும் இந்த வரிகள்தான் கூகுளின் சக்சஸ் சீக்ரட். வெறும் சர்ச் இன்ஜினாக மட்டுமே பயணத்தைத் தொடங்கிய கூகுளை, கூகுள் கிளாஸ், தானியங்கி கார், புராஜெக்ட் லூன் என எதிர்கால புராஜெக்ட்களை நோக்கி ஓடவைத்திருப்பதும் இந்த சீக்ரட் வரிகள்தான். இந்த வரிகளுக்கு அப்படியே உருவம் கொடுத்தது போல அமைந்திருக்கிறது கூகுளின் ஒரு சீக்ரட் லேப். சுருக்கமாக X.

எல்லா நிறுவனங்களுக்கும் இருப்பதுபோலவே, கூகுளுக்கென பிரத்யேகமாக இருக்கும் ஓர் ஆராய்ச்சி நிலையம்தான் இந்த X லேப். ஆனால், இங்கே உருவாகும் ஐடியாக்களும், அது வடிவம்பெறும் விதமும் மிகமிக சுவாரஸ்யமானவை. செடி வளர்ப்பு தொழில்நுட்பம் தொடங்கி மின்சாரம் உற்பத்தி செய்யும் பட்டம் வரை பல்வேறு வித்தியாசமான தொழில்நுட்பங்கள், கூகுளுக்காக இங்கேதான் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்த லேப்பின் தாரகமந்திரம்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்பவரிகள்.

2010-ம் ஆண்டு கூகுள் நிறுவனத்தால் தொடங்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்தான் இந்த லேப். முதலில் இதன் பெயர் கூகுள் X. பின்னர் இரு வருடங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம், அதன் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கீழ் செல்லவே, பின்னர் இந்த லேப் கூகுளிடமிருந்து கழட்டிவிடப்பட்டது. தற்போது ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் கிளை நிறுவனமாக மட்டுமே இது இயங்கிவருகிறது. கூகுளிடமிருந்து பிரிந்ததும் இதன் பெயரை, கூகுள் X என்பதிலிருந்து வெறும் X ஆக மாற்றிவிட்டது கூகுள். மன்னிக்க... ஆல்ஃபாபெட். இதுதான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் வரலாறு. இதன் பணி என்ன? "உலக மக்களின் பிரச்னைகளுக்கு, தொழில்நுட்பம் மற்றும் அறிவியலின் உதவியுடன் தீர்வு காண்பதுதான் எங்கள் தலையாய பணி" என்கிறது

டிரைவர் இல்லாமலே இயங்கும் தானியங்கி கார், இன்டர்நெட் வசதியை ஏற்படுத்தித்தரும் பலூன்கள், குறைந்த செலவில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் மக்கானி பட்டம், கப்பல் வசதி இல்லாத நாடுகளுக்குப் பொருள்களை அனுப்ப உதவும் கப்பல், பொருள்களை டெலிவரி செய்யும் புராஜெக்ட் விங், புகைப்படங்களைக் கண்டறிய உதவும் Deep Learning தொழில்நுட்பம் என இந்த லேப்பின் ஒன்லைன் எல்லாமே அட்டகாசமானவை. இப்படி பிரம்மாண்ட ஐடியாக்கள் பிடிப்பதால், இந்த ஆராய்ச்சி நிலையத்தை 'மூன்ஷாட் ஃபேக்டரி' என அழைக்கிறார் இதன் தலைவர் ஆஸ்ட்ரோ டெல்லர். இவர்தான் இந்த ஆராய்ச்சி நிலையத்தின் தலைமை விஞ்ஞானி. கூகுளின் மில்லியன் டாலர் புராஜெக்ட்கள் பலவற்றிற்கு இவர்தான் தலைவர்.

இந்த மூன்ஷாட் தொழிற்சாலையின் ப்ளூபிரின்ட் ரொம்ப சிம்பிள். முதலாவது, இந்த உலகில் பல மில்லியன் மக்கள் சந்திக்கும் ஏதேனும் ஒரு பிரச்னையைக் கண்டறிவது. இரண்டாவது அதற்கான தீர்வுகளைக் கண்டறிவது அல்லது உருவாக்குவது; மூன்றாவது, அந்தத் தீர்வுகளை செயல்படுத்தும் வழிகளைக் கண்டறிவது. இந்த மூன்றும் சங்கமிக்கும் இடம்தான் இந்த சீக்ரெட் லேப். உதாரணமாக புராஜெக்ட் லூன் திட்டத்தை எடுத்துக்கொள்வோம்.

இணைய வசதி இல்லாத பல லட்சக்கணக்கான மக்களுக்கு இணைய வசதி செய்துதர வேண்டும். ஆனால், செலவு மிகக்குறைவாக இருக்க வேண்டும் - இதுதான் ஆராய்ச்சியாளர்களுக்கான சவால். முதலில் இந்தச் சவாலைப் பல்வேறு கோணங்களில் அலசி ஆராய்வார்கள். மக்களுக்கு எந்தெந்த வழிகளில் இணைய வசதிகளை ஏற்படுத்தித்தர முடியும், ஏற்கெனவே இருக்கும் தொழில்நுட்பங்கள் மூலம் இது சாத்தியமா, இதிலிருக்கும் தடைகள் என எல்லாக் கோணத்திலும் ஆராய்ந்துவிட்டு, இதுதான் சரியான வழி என ஒரு வழியைத் தேர்ந்தெடுப்பார்கள். அப்படித் தேர்ந்தெடுத்ததுதான் பலூன்கள் மூலமாக இணைய சேவையை வழங்கும் திட்டம். பின்னர் சோதனைகள், ஆராய்ச்சிகள், திட்டமிடல் என அனைத்தும் மின்னல் வேகத்தில் தொடங்கும். திட்டம் தொடங்கிய சில நாள்களிலேயே, இது செயல்முறையில் சாத்தியமா என்பது தெரிந்துவிடும். இன்னும் 5 ஆண்டுகளுக்குள் இதை நடைமுறைக்குக் கொண்டுவந்துவிடலாம் என்றால் மட்டுமே அந்த ஆராய்ச்சி தொடரும். இல்லையெனில் 'ஃபெயிலு ஃபெயிலு' என புராஜெக்ட்டை நிறுத்திவிடுவார்கள். பின்னர், அடுத்த ஐடியா, அடுத்த புராஜெக்ட் என ஆராய்ச்சிகள் தொடரும்.

தற்போது இந்த தொழில்நுட்பம் அமலாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதை தமிழகத்தில் முதல் கட்டமாக சென்னையில் அமல்படுத்தவே தமிழக அமைச்சர் திரு. மணிகண்டன் கோரிக்கை வைத்துள்ளதாக கூறியுள்ளார்.