• Call Us : 90030 35559 , 98424 50963
Inno Instruments Sunil Kumar Sharma - Interview in Tamil

அவரது சிறப்பு பேட்டியின் தொகுப்பினை காணலாம்...

INNO INSTRUMENTS என்ற நிறுவனம் 2007 ஆம் ஆண்டு தென் கொரியாவை சேர்ந்த சியோல் என்ற இடத்தில தொடங்கப்பட்ட வேகமா வளர்ந்து வரும் ஒரு பன்னாட்டு நிறுவனமாகும். உலகம் முழுவதும் சுமார் 60 இடங்களுக்கும்  மேலாக விநியோகஸ்தர்கள் பங்குதாரர்களை கொண்டு செயல்பட்டு வருகிறது. ஆப்டிகல் பைபர் கையாளும் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அதி நவீன தொழில்நுட்பத்தை தருவதன் மூலம் சிறப்பான ஒரு சேவையை செய்து வருகிறது இந்த இன்னா இன்ஸ்ட்ருமென்ட்ஸ். இந்த நிறுவனத்தின் அலுவலகங்கள் கொரியா, ஹாங் காங், ஜெர்மனி, அமெரிக்க, இந்தியா, மற்றும் சீனா போன்ற பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

சமீபத்தில் புது டில்லியில் தனது கிளையை நிறுவனதியது ஓர் பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. இந்தியாவில் மட்டும் டில்லி, பெங்களூரு, மும்பை, கொல்கத்தா, இண்டோர் மற்றும் கொச்சின் ஆகிய இடங்களில் தனது கிளையை நிறுவி உள்ள இந்த ஸ்பிலீசிங் மிஷின் நிறுவனம், மிக விரைவில் தமிழகத்தில் தனக்கான கிளை அலுவலகத்தை நிறுவ வேண்டும் என்பது பலரின் கருத்து. தற்போது தமிழகத்தில் மிக அதிகமாக பயன்படுத்த படும் ஸ்பிலீசிங் மிஷின் இந்த INNO INSTRUMENTS நிறுவனத்துடையது என்றும் கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களாகிய தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் SPLICER-கள் தேவைகளை உணர்ந்து INNO INSTRUMENTS நிறுவனத்தின் பொருட்கள் தயாரிக்கப்படுகிறது. உதாரணமாக INNO INSTRUMENTS நிறுவனத்தின் IFS ARC Fusion Splicer, High Precision Cleaver போன்ற சாதனங்கள் டெலிகம்யூனிகேஷன், கேபிள் டிவி, இணையத்தளம் ஆகிய துறைகளில் இணைப்புகள் நிறுவுவதற்கு, அதை பராமரிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் பயன்படுகிறது.

சுனில் குமார் ஷர்மா பற்றி...

திரு. சுனில் குமார் ஷர்மா தனது மெக்கானிக்கல் பொறியாளர் படிப்பை(BE MECH) முடித்து NAVAL AVIATION எனப்படும் கடற்படை விமான துறையில் தனித்துவம் பெற்றவர். 1986 ஆம் இந்தியன் கடற்படையில் இணைந்தார். கொச்சின், கோவா, அந்தமான் நிகோபார் தீவுகள் போன்ற பல இடங்களை தனது 15 ஆண்டு கால சேவையை முடித்த அவர். கடற் படையில் இருந்து 2001 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

பின்னர், 2004 ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு துறையில் மார்க்கெட்டிங் பிரிவில் பனி செய்ய தொடங்கினார். ஆரம்ப காலத்தில் TELECOMMUNICATION சாதனங்களை மார்க்கெட்டிங் செய்து கொண்டிருந்த அவர் பின்னர் தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தின் சோதனை மற்றும் அளக்கும்(TESTING AND MEASUREMENTS) எந்திரங்களை கையாள தொடங்கினார்.

அவரிடம் இந்த துறை சார்ந்தும், அவரது நிறுவனம் சார்ந்தும் கேட்கப்பட்ட சில கேள்விகளும் அதன் பதில்களும் தமிழில் இதோ...

தங்களது நிறுவனத்தை பற்றி விவரிக்க முடியுமா?

INNO INSTRUMENT INDIA PRIVATE LIMITED என்ற நிறுவனம் INNO INSTRUMENTS INC., என்ற தென் கொரிய நிறுவனத்தின் 100% சதவீத துணை நிறுவனம் ஆகும். INNO INSTRUMENTS INC தற்போது 90 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. 4 நேரடி கிளை அலுவலகங்களும் சுமார் 382 விநியோகஸ்தர்களும் உலக அளவில் உள்ளனர். கேபிள் டிவி, தொலைத்தொடர்பு(TELECOM), FTTH போன்ற பல்வேறு துறைகளுக்கு ஆப்டிகல் பைபர் ஸ்பிலீசிங் மிஷின்களை INNO INSTRUMENTS உற்பத்தி செய்கிறது. INNO INSTRUMENTS நிறுவனமானது TELECOM மற்றும் கேபிள் டிவி துறைக்கென OTDR மிஷனையும் அறிமுகம் செய்துள்ளது.

INNO என்ற ஆங்கில வார்த்தைக்கு INNOVATION AT HIGHEST LEVEL IN INSTRUMENTS என்று அர்த்தம் அதாவது, சாதனங்களில் மிக பெரிய அளவிலான புதுமை என்ற அர்த்தம் கொண்டதே இந்த நிறுவனத்தின் பெயர்.

வாடிக்கையாளர் சேவையே INNO INSTRUMENT நிறுவனத்தின் மூல கொள்கை.

INO INSTRUMENT ன் மொத்த மதிப்பு என்ன?

INNO INSTRUMENT நிறுவனத்தின் மொத்த மதிப்பு என்பது புதுமை படிப்பதன் மூலம் கிடைக்கும் தொடர் வளர்ச்சி, ஆப்டிகல் பைபர் பயன்படும் அணைத்து இடங்களிலும் நம்பகமான பொருட்கள் மற்றும் சேவைகள். 2013 ஆம் ஆண்டு முதல் நிறுவனத்தின் சர்வதேச சந்தை வளர்ச்சி அடைந்துள்ளது, அதனால் உலக அளவிலான போட்டிகளை எதிர்கொள்ள முடிகிறது. இத்தகைய வணிகம் மூலம் INNO INSTRUMENT நிறுவனம் வாழ்க்கையை வேகமாகவும், துரிதமான ஒன்றாகவும் மாற்றுகிறது. புதுமையான விஷயங்களை உற்சாகமாக முன்னெடுக்கும் போது INNO INSTRUMENT நிறுவனம் ஆப்டிகல் தொலைத்தொடர்பு துறையில் முதன்மையாக விளங்குகிறது.

INNO INSTRUMENT நிறுவனத்தின் புதிய அறிமுகங்கள் என்ன? மற்ற நிறுவனத்தை விட்டு INNO INSTRUMENT நிறுவனத்தை வாடிக்கையாளர்கள் ஏன் தேர்வு செய்திட வேண்டும்?

ஆப்டிகல் FUSION SPLICERS தயாரிக்கும் ஒரு நிறுவனமாக INNO INSTRUMENTSஅறியப்பட்டாலும் சமீபத்தில் புதிய ரக OTDR களை INNO INSTRUMENT அறிமுகம் செய்துள்ளது. View 500 மற்றும் Mini 2 போன்ற சாதனங்கள் உலக அளவில் சோதிக்கப்பட்டு நல்ல வரவேற்பை பெற்று பொருட்கள். இந்த பொருட்கள் கடந்த 2017 மும்பை SCAT INDIA கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்தியாவின் FIBER தொழில் வளர்ச்சியை ஒட்டு மொத்தமாக எப்படி பார்க்கிறீர்கள்?

உலக அளவில் மிக பெரிய வளர்ச்சியை பார்க்க முடிகிறது. குறிப்பாக இந்தியாவில் பிராட்பேண்ட் நிறுவனங்களின் வருகையாலும், இணையதள தேவையின் அதிகரிப்பதாலும் இந்திய வாடிக்கையாளர்கள் இணையதளத்தை நோக்கி பயணிக்கிறார்கள். அதனால், இணையதள சேவை மக்கள் மத்தியில் பெரும் தேவையை ஏற்படுத்திவிட்டது. இதனை மைய்ய படுத்தி அணைத்து நிறுவனங்கள் தங்களது ஆப்டிகல் பைபர் கட்டமைப்பை இந்தியா முழுவதும் செய்ய வேண்டிய கட்டாய நிலை உள்ளது. இந்தியாவின் OFC சந்தை மதிப்பு வருகிற 2020 ஆம் ஆண்டில் சுமார் 424 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் இருக்கும். அதாவது இரண்டாயிரத்தி அறுநூற்றி எழுபத்தி ஏழு கொடியே அறுபத்தி ஒரு லட்சத்தி இருபத்தி மூன்றாயிரம் என்ற இந்திய மதிப்பில் இருக்கும்.

இந்தியாவில் அனலாக் கேபிள் டிவி டிஜிட்டலுக்கு மாறும் பணியில் INNO INSTRUMENT நிறுவனத்தின் பங்கு என்ன?

கேபிள் டிவி டிஜிட்டல் அமலாக்கத்தில் ஆப்டிகல் பைபர் கேபிள்களுக்கான தேவை அதிகரிக்கிறது. அதே போல அதன் பராமரிப்பு மற்றும் சோதனைகளுக்கான தேவையும் அதிகரிக்கிறது. அந்த சூழலில் தரமான சேவையும் குறைந்த விலையிலும் ஆப்ரேட்டர்களுக்கு தேவை படும். அத்தகைய சேவையை வழங்கும் வாய்ப்பு INNO INSTRUMENT நிறுவனத்திற்கு கிடைக்கிறது என எண்ணுகிறோம். அதே போல தற்போது நிலுவையில் இருக்கும் தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கான களப்பணிகளை INNO INSTRUMENT நிறுவனம் செய்து வருகிறது.

ஸ்பிலீசிங் மிஷின் (SPLICING MACHINE) விற்பனையில் இந்திய சந்தை எந்த அளவில் உள்ளது.? இந்தியா மற்றும் பிற நாடுகளில் தங்களது வருங்கால திட்டம் பற்றி விவரிக்கவும்...

2007 ஆம் ஆண்டு உலக அளவில் அறிமுகம் செய்யப்பட்ட INNO INSTRUMENT நிறுவனம் 2015 ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாள் முதல் புதுமையான மற்றும் தரமான பல பொருட்களின் விற்பனை மூலம் வளர்ச்சியை சந்தித்து வருகிறது INNO INSTRUMENT.

இந்த துறையில் சந்தையில் நிலவும் தேவைக்கு ஏற்ப புது புது பொருட்கள் அறிமுகம் செய்வதன் மூலம், இந்தியா மற்றும் இதர நாடுகளில் எங்களது கட்டமைப்பை வலு படுத்த முடியும் என நம்புகிறோம்.

தங்களது ஸ்பிலீசிங் மிஷின் பொருட்களுக்கு இந்தியாவில் சர்வீஸ் சப்போர்ட் எனப்படும் சேவை துணைகளை எந்த அளவில் மேற்கொள்கிறீர்கள்.?

நான் முன்னதே கூறியது போல INNO INSTRUMENT நிறுவனத்தின் அதிகாரபூர்வ சர்வீஸ் சென்டர்கள் புது டில்லி, மும்பை, கொல்கத்தா, அஹமதாபாத், பெங்களூரு, கவ்ஹாதி, இண்டூர், மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் உள்ளது. மேலும், குண்டூர், ஹைடிராபாத், லக்னோ, பைல்ஸாபூர், ஸ்ரீநகர் போன்ற இடங்களில் சேவை மையங்கள் சில பங்குதாரர்கள் மூலமாகவும் இணைக்கப்பட்டுள்ளது.

நீங்கள் தனியாக வேலை செய்வதை விரும்புவார்களா? குழுவாக வேலை செய்ய விரும்புவார்களா??

கடற்படை போன்ற ராணுவ அமைப்பில் பனி செய்த நான் பலமான பின்னணி இல்லாமல் எதுவும் சாத்தியாமாகாது என ஆழமாக நம்புபவன் நான். சிறப்பான குழு இல்லாமல் எதுவும் சாத்தியம் இல்லை. எங்கள் குழுவினர் அனைவரும் வாடிக்கையாளர் சேவை என்ற ஒரே இலக்கை நோக்கி செல்வதால் வளர்ச்சி பாதையில் செல்வதாக உணர்கிறோம். எங்கள் கனவுகள் மெய்ப்பட பயணிக்கிறோம் குழுவுடன்...

கேபிள் மற்றும் இணையதள துறையில் பல்வேறு அனுபவங்களை கொண்ட நீங்கள் இந்த துறை சார்ந்தவர்களுக்கு கூறும் கருத்து என்ன?

இந்த துறையில் தொடர்ந்து நிலைத்திருக்கு ஒருவர் தன்னை தானே புதிய தொழில்நுட்பத்திற்கு தகவமைத்து கொள்ள வேண்டும். அந்த தொழில்நுட்பங்களை வாங்கி பயன்படுத்த வேண்டும். அதனை தரமான ஒரு நிறுவனத்திடம் இருந்து பெற வேண்டும். பணம் கொடுத்து பெரும் ஒவ்வொரு கேபிள் டிவி மற்றும் இணையத்தளம் சார்ந்த பொருளும் தொழில்நுட்பத்தின் சொத்துக்கள். அதை பெரும் நிறுவனங்கள் வியாபாரத்திற்கு பிறகும் தேவைப்படும் சேவைகளை செய்யவல்லதா என்று ஆராய்ந்து தேர்வு செய்ய வேண்டும்.

இந்த பேட்டி பற்றிய தங்களது கருத்துக்களை எங்களுக்கு அனுப்பலாம்...

+91986566594 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், info@digitalmediareporter.in என்ற மின் அஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம்.

INNO INSTRUMENT INDIA PRIVATE LIMITED நிறுவனத்தின் பொருட்கள் பற்றியும் அது தொடர்பான தங்களது கேள்விகளை கேட்டு விளக்கம் பெற +919620753555 எண்ணில் INNO INSTRUMENT நிறுவனத்தின் தென் மண்டல பிரதிநிதியான திரு. ஹரீஷா என்பவரை தொடர்பு கொண்டு பேசலாம். இவருக்கு கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகள் தெரியும்.