• Call Us : 90030 35559 , 98424 50963
பிஹாரில் 0% சதவீதம் டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ்.

இந்திய நேபாள் எல்லையில் இருக்கும் மாநிலமான பிஹாரில் இது வரை பெரும்பாலான இடங்களில் டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் சீட்டிங் நடைபெறவில்லை என மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கேபிள் டிவி டிஜிட்டலாக்கம் செய்யும் கமிட்டியின் பாட்னா இணை இயக்குனர் திரு. மனோஜ் குமார் அறிவித்துள்ளார்.

இது குறித்து டிஜிட்டல் MSOக்கள், DTH மற்றும் HITS சேவை வழங்கும் நிறுவங்களுக்கு அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது. பிஹார் மற்றும் ஜார்கண்ட் பகுதிகளில் மிக குறைத்த அளவில் மட்டுமே டிஜிட்டல் கேபிள் டிவி அமலாக்கம் நடைபெற்றுள்ளது. பிஹார் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள சுமார் 164 பகுதிகளிலும், ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் சுமார் 116 பகுதிகளிலும் இது வரை ஒரு டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் கூட நிறுவப்படவில்லை என்பது வேதனை தருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அந்த அறிவிப்பில், DTH, HITS மற்றும் டிஜிட்டல் MSO க்கள் தங்களது செட் டாப் பாக்ஸ் எண்ணிக்கையை MIS எனப்படும் MANAGEMENT INFORMATION SYSTEM தளத்தில் பதிவு செய்தல் வேண்டும். அதை மத்திய அமைச்சகம் அவ்வப்போது ஆய்வு செய்யும். அவ்வாறு MIS தளத்தில் குறைவான செட் டாப் பாக்ஸ் பதிவுகளே உள்ளதே எனில் அந்த பகுதி மக்களுக்கு டிவி சிக்னல் சென்று சேரவில்லை அல்லது அவர்கள் அனலாக் சிக்னல் பார்க்கிறார்கள் என்று அர்த்தம். அதே சமயம் சில நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்வதற்காக செட் டாப் பாக்ஸ் எணிக்கையை குறைவாக பதிவு செய்வதாகவும் அவர் அந்த அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தவறான எண்ணிக்கை தரும் நிறுவனங்கள் மீதும், அனலாக் சிக்னல் ஒளிபரப்பு செய்து வரும் அமைப்புகள் மீதும் நடவடிக்கை எடுக்க அந்தந்த பகுதி நோடல் ஆபிசருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவ்வாறான கடும் நடவடிக்கைகளை தவிர்ப்பதற்கு அனைத்து ஒளிபரப்பு நிறுவனங்களும்(DPOs) முறைப்படி டிஜிட்டல் அமலாக்கம் செய்து அந்த எண்ணிக்கையை MIS தளத்தில் பதிவு செய்திட வேண்டும் எனவும் திரு. மனோஜ் குறிப்பிட்டுள்ளார்.