• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் டிவியுடன் இணைகிறது OTT

சமீப நாட்களாக ஒளிபரப்பு துறையில் செய்யப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் சில விஷயங்களை மேற்கோள்காட்ட முடியும். மக்கள் பொழுபோக்கில் டிவிக்கள் தான் பிரதான இடத்தில இருக்கும். எனினும், தற்போது வளர்ந்து OTT துறையினால் கேபிள் டிவி தொழிலுக்கு தாக்கம் ஏற்படும் என தெரிகிறது. இதனை கருத்தில் கொண்டு இன்று பெரும்பாலான சேனல்கள் மற்றும் ஒளிபரப்பாளர்கள் டிவி ஒளிபரப்பை தாண்டி தங்களுக்கென பிரத்யேக OTT தளம் மற்றும் வீடியோ ஆன் டிமாண்ட் தளத்தை உருவாக்கி வருகிறார்கள்.

இவ்வாறு டிவி பார்க்கும் பார்வையாளர்கள் OTT தளத்திற்கு மாறும் பட்சத்தில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் நேரடியாக பாதிப்பிற்கு உள்ளாவார்கள். அதே போல, DTH நிறுவனங்களுக்கும் மிக பெரிய சவால் ஏற்படும். அதை சமாளிக்க DTH நிறுவனங்களும் பல்வேறு யுக்திகளை வகுத்து வருகிறது.

இதை கருத்தில் கொண்டு இந்தியாவின் முன்னணி கேபிள் நெட்ஒர்க் நிறுவனமான ஹேத்வே சமீபத்தில் சில திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. OTT மற்றும் கேபிள் டிவியை இணைக்கும் பலமாக ஒரு திட்டத்தை அறிமுகம் செய்து இந்நிறுவனம் - தளத்தை கேபிள் டிவி செட் டாப் பாக்ஸ்-ல் இணைத்தது. இது நகர்புற வணிகத்தை மனதில் கொண்டு எடுக்க முடிவாக தெரிகிறது. அதே சமயம் மற்றொரு பிரதான கேபிள் டிவி நிறுவனமான டென் நெட்ஒர்க் சமீபத்தில் HYBRID SMART செட் டாப் பாக்ஸ்- களை அறிமுகம் செய்துள்ளது. அதில் YOUTUBE மற்றும் YOTUBE KIDS போன்ற OTT தளங்கள் BUILT IN ஆகா இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டது.

தமிழகத்திலும் JAK மற்றும் DIGICON போன்ற நிறுவனங்கள் HD செட் டாப் பாக்ஸ்பில் இன்டர்நெட் இணைப்பு கொடுக்கும் வசதியை வைத்து அதில் YOUTUBE OTT பார்த்துக்கொள்ளும் திட்டத்தை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மட்டுமின்று OTT நிறுவனங்களும் அதிக வருவாய் பெற வாய்ப்புகள் உள்ளது.

பிரதான கேபிள் டிவி நிறுவனங்கள் இது வரை பெரும்பான்மை வீடுகளை கையக படுத்தியுள்ளது. கேபிள் டிவி பிரதான இனிப்பாகவும் சம்மென ஆண்டுகளில் பிராட்பேண்ட் இணைப்பும் கொடுத்துள்ளது.

இன்று தேசிய அளவில் செயல்படும் பல்வேறு டிஜிட்டல் கேபிள் டிவி நிறுவனங்கள் பல்வேறு OTT தளங்களுடன் இனைந்து வருகிறது. மேலும், இன்டர்நெட் சேவையை கொடுப்பதில் அவர்களது கட்டமைப்பை பலப்படுத்தி வருகிறது. இன்றைய கேபிள் டிவி நிறுவனங்களும் ஆப்ரேட்டர்களும் இதை கவனத்தில் கொண்டு வருங்கால திட்டங்களை தொழில்நுண்டபத்துடன் தகவமைத்து செயல்படுத்த வேண்டும் என துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்..