• Call Us : 90030 35559 , 98424 50963
பெயர் மாற்றம் செய்யப்படுகிறது TRAI?

டெலிகாம் மற்றும் இதர தொலைத்தொடர்பு தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் கேபிள் டிவி உட்பட்ட பல்வேறு துறைகளுக்கு பல்வேறு நெறிமுறைகளை பரிந்துரை செய்யும் அமைப்பாக TRAI எனப்படும் TELECOM REGULATORY AUTHORITY OF INDIA செயல்பட்டு வருகிறது. இன்றைய காலகட்டத்தில் கேபிள் டிவி & ஒளிபரப்பில் ஏதேனும் முரண்பாடுகள் இருந்தால் அதனை TRAI அமைப்புடம் நாடி அதை வாதிடும் சூழல் உள்ளது. அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு டிஜிட்டல் கேபிள் டிவிக்கு உரிமம் கொடுக்க கூடாது, சேனல்களுக்கான TARIFF ஆர்டர் போன்ற பல்வேறு நெறிமுறைகளை -- வகுத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், டெலிகாம் அமைச்சர் திரு. மனோஜ் சின்ஹா கடந்த செப்டம்பர் 26 ஆம் தேதி நடைபெற்ற டெலிகாம் கட்டமைப்பு ஆலோசனை கூட்டத்தில் கூறுகையில் TELECOM REGULATORY AUTHORITY OF INDIA என்ற TRAI அமைப்பின் பெயர் மாற்றம் செய்யப்படும் எனவும்.TRAI யின் பெயரை DCRAI என்று மாற்றம் செய்யப்படும் எனவும் கூறினார். DCRAI என்றால் DIGITAL COMMUNICATION REGULATORY AUTHORITY OF INDIA என்பது விரிவாக்கம்.

மிக விரைவில் இந்த பெயர் மாற்றம் அமலுக்கு வரும் என்றும் அவர் கூறினார்.

தமிழகத்தில் திரு. கோகுல்தாஸ் போன்ற பல்வேறு சங்கத்தலைவர் TRAI என்பது டெலிகாம் துறைக்கான ஒழுங்குமுறை ஆணையம் மட்டுமே எனவும், கேபிள் டிவி ஒளிபரப்பிற்கு என பிரத்யேக ஒழுங்குமுறை ஆணையம் வேண்டும் என பல இடங்களில் வலியுறுத்தி பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.