• Call Us : 90030 35559 , 98424 50963
நிதி தேடும் ACT FIBER NET நிறுவனம். நிதி அறிக்கைகள் வெளியிடப்பட்டது.

SEBI எனப்படும் Securities and Exchange Board of India அமைப்பின் அறிக்கையின் அடிப்படையில் ACT FIBER NET நிறுவனம் தனது நிதி அறிக்கைகளை சமர்ப்பித்து தனது நிதி ஆதாரங்களை அதிகரிக்க விருப்புகிறது. அதன் மூலம் இந்தியா முழுவதும் தனது வியாபாரத்தை விரிவு படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. ACT FIBER NET நிறுவனம் சமர்ப்பித்த அறிக்கையின் படி அந்நிறுவனத்தின் நிகர வருவாய் கடந்த 2017 நிதியாண்டில் மட்டும் சுமார் 1217 கோடி எனவும், வட்டி, வரி(EBITDA) போன்ற பரிவர்த்தனைகளை முன்னர் பெறப்பட்ட கணக்கின் படி ரூ. 211.67 எனவும் கூறப்படுகிறது.

 

அதனை தொடர்ந்த இந்த ஆறு மாத காலத்தில் நிகர வருவாய் ரூ. 684/- எனவும் EBITDA கணக்கீட்டின் படி ரூ. 286 கோடி எனவும் கூறப்படுகிறது. 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி ACT நிறுவனமானது நாடு முழுவதும் சுமார் 11 லட்சம் இன்டர்நெட் இணைப்புகளும், 71000 கேபிள் டிவி இணைப்புகளும் வைத்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.மேலும் சராசரியாக ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து சுமார் ரூ. 813/- வசூலிப்பதாகவும் தெரிகிறது. AVERAGE REVENUE PER USER எனப்படும் ARPU 2015 ஆம் ஆண்டில் ரூ. 684/-, 2016 ஆம் ஆண்டில் ரூ. 756/- என்ற விகிதத்தில் இருந்திருக்கிறது.

GPON மற்றும் METRO நெட்ஒர்க் மூலம் இன்டர்நெட் இணைப்புகளை வழங்கி வரும் இந்த நிறுவனம் இந்தியாவில் மிக முக்கியமான இன்டர்நெட் நிறுவனமாக பார்க்கப்படுகிறது.

தற்சமயம் இந்த நிறுவனம் நாடு முழுவதும் தனது இன்டர்நெட் சேவையை விரிவு படுத்த நிதி தேடு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழகத்தில் சென்னையில் முழுவீச்சில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம், மதுரை மற்றும் கோவையில் தனது கட்டமைப்பை துரிதமாக நிறுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.