• Call Us : 90030 35559 , 98424 50963
நெல்லையில் நடைபெற்ற டிஜிடெக் தொழில்நுட்ப கருத்தரங்கம்.

டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழ் டிஜிடெக் என்ற பெயரில் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் தொழில்நுட்ப சுற்றுலா ஏற்பாடு செய்து நடத்தி வருவது வழக்கம். சென்னை, மதுரை, சிவகங்கை மற்றும் கோவை போன்ற பல்வேறு இடங்களில் தொழில்நுட்ப கருத்தரங்கம் ஏற்பாடு செய்து நடத்தப்பட்டுள்ளது. அதே போல டிஜிடெக் ஆன்சைட் என்ற பெயரில் டில்லி, மும்பை, ஹைதிராபாத் போன்ற இடங்களுக்கு தொழில் சுற்றுலா ஏற்பாடு செய்து கடை கோடி கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை அழைத்து செல்கிறது.

இதன் அடிப்படையில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள், உள்ளூர் தொலைக்காட்சி நண்பர்கள் மற்றும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர்களை ஒன்றிணைக்கும் வகையில் திருநெல்வேலியில் டிஜிடெக் செமினார் ஏற்பாடு செய்யப்பட்டது. திருநெல்வேலு வண்ணாரப்பேட்டை பகுதியில் இருக்கும் சகுந்தலா இன்டர்நெஷனல் ஹோட்டலின் சுமங்கலி அரங்கில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த கூட்டத்தில் தென்மாவட்டங்களை சேர்ந்த பல்வேறு கேபிள் டிவி ஆபரேட்டர்கள், லோக்கல் சேனல் நடத்துவோர் மற்றும் இன்டர்நெட் தொழில் செய்பவர்கள் கலந்து கொண்டனர்.

தென் கொரியாவை சேர்ந்த INNO INSTRUMENT என்ற Splicing Machine & OTDR நிறுவனம் இந்த கூட்டத்திற்க்கு முழு ஆதரவு அளித்து Sponsor செய்தது. இந்தியாவில் டில்லியை தலைமை இடமாக கொண்டு செயல்படும் இந்நிறுவனத்திற்கு சென்னை உட்பட நாட்டின் பல்வேறு இடங்களில் கிளை அலுவலங்கள் உள்ளது. பொதுவாக டில்லி மற்றும் மும்பை சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் தமிழகத்திற்கு வருகை தருகிறார்கள் எனில் சென்னை அல்லது கோவை பகுதியில் தான் இது போன்ற கூட்டங்களை நடத்துவார்கள். ஆனால், INNO Instrument நிறுவனத்தினர் நெல்லை என்றதும் உடனடியாக சம்மதம் தெரிவித்து நமக்கு தேவையான விஷயங்களை பேச தொடங்கினர்.

அந்நிறுவனத்தின், திரு. சுனில் குமார் ஷர்மா அவர்கள் திருநெல்வேலி பற்றி இணையத்தில் படித்து தெரிந்து கொண்டு இங்குள்ள கேபிள் டிவி வணிகம் பற்றி புரிந்து கொண்டார். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு பயனுள்ள வகையிலான ஒரு கருத்தரங்கை நடத்துவதில் அவரும் அவரது நிறுவனமும் முழு ஆதரவை கொடுத்தது.

மேலும், நெல்லை மண்ணின் மைந்தரான கணேஷ் எலெக்ட்ரோனிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் திரு. சுதாகர் அவர்களை அணுகி இந்த கூட்டம் பற்றி விவரித்தோம். கேபிள் டிவி, இன்டர்நெட் மற்றும் இதர கன்டராக்ட் வேலைகள் என மிகவும் பரபரப்பான அவரது பணிகளுக்கு மத்தியில் சுமார் 10 நாட்கள் இந்த நிகழ்விற்காக ஒதுக்கி மிக பெரும் ஒத்துழைப்பை கொடுத்தார். திருநெல்வேலி, கன்னியாகுமாரி, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் திரு. சுதாகர் அவர்கள் நன்கு பரிட்சயம் ஆனவர் என்றால் அது மிகையாகாது. இந்த நிகழ்விற்காக ஒவ்வொரு கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை அவர்களது தொலைபேசி எண்ணில் அழைத்து கூட்டம் பற்றி விவரித்து சிறப்பு அழைப்பு விடுத்தார். திரு. சுதாகர் அவர்கள் மீதுள்ள அபிமானத்தில் பெரும்பாலான கேபிள் டிவி ஆபரேட்டர்கள் கலந்து கொண்டனர்.

கணேஷ் எலெக்ட்ரானிக்ஸ் திரு. சுதாகர் அவர்களும் தனது பங்களிப்பை கொடுத்தது மட்டுமின்று, ஆப்ரேட்டர்களுக்காக பல்வேறு விஷயங்களை இந்த கருத்தரங்கில் ஏற்பாடு செய்தார்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்டர்நெட் தொழில் செய்து வரும் தமிழகத்தின் முன்னோடி நிறுவனமான நிஸ் பிராட்பேண்ட் நிறுவனம் இந்த நிகழ்விற்காக தங்களது பங்களிப்பை கொடுத்தது மட்டுமின்றி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்டர்நெட் பற்றி தெரிந்து கொள்ளும் வகையில் எளிமையான முறையில் இன்டர்நெட் பற்றிய தலைப்பில் பேசுவதற்கு ஒப்புக்கொண்டனர். அந்நிறுவனத்தின் இயக்குனர் திரு. ஜேசு ராஜ் அவர்களும், நிறுவன மேலாளர் திரு. ஆதி அவர்களும், நிறுவனத்தின் ஆலோசகர் திரு. யூசுப் ராஜா அவர்களும் நிகழ்வில் பங்கேற்று ஆப்ரேட்டர்களுக்கு பயனுள்ள சில கருத்துக்களை கூறினார்கள்.

பெங்களூரை சேர்ந்த டெல்வாஸ் நிறுவனம் ஆப்ரேட்டர்களுக்காக தங்களது பங்களிப்பை கொடுத்தது.

மாலை 4.30 மணியளவில் தொடங்கப்பட்ட இந்த கூட்டத்தில் கணேஷ் எலெக்ட்ரானிக்ஸ் திரு. சுதாகர் வரவேற்புரை ஆற்றி வந்திருந்த சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களை வரவேற்றார். அவரை தொடர்ந்து INNO INSTRUMENT நிறுவனத்தின் SPLICING MACHINE & OTDR பற்றிய குறிப்புகள் பற்றி திரு. சுனில் குமார் சர்மா ஆங்கிலத்தில் விவரித்தார். அதனை ஆப்ரேட்டர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் கேபிள் கேர் சென்டர் திரு. வடிவேலு அவர்கள் தமிழாக்கம் செய்தார்.

INNO INSTRUMENT நிறுவனத்தில் உள்ள மாடல்கள்பற்றியும். அதன் சிறப்பு அம்சங்கள் பற்றியும் விவரித்தார். நெல்லை பகுதி கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் இன்டர்நெட் புரவைடர்களுக்கு சிறப்பு விலையினை அறிவித்தார்.

அவரை தொடர்ந்து இந்நிறுவனத்தின் திரு. ரஜத் சூரி OTDR செயல்படும் முறை பற்றி அதன் அவசியம் பற்றியும் விரிவாக ஆங்கிலத்தில் கூறினார். அதனை எளிமையாக தமிழாக்கம் செய்தார் திரு. வடிவேலு அவர்கள். மேலும், ஆப்டிகல் கேபிள் கட்டமைப்பை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் முறை பற்றி திரு. வடிவேலு அவர்கள் பேசினார்.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மத்தியில் OTDR பற்றிய விளக்கம் தமிழில் கொடுக்கப்பட்டது இதுவே முதல் முறை என்பதால் பலருக்கும் அது பயனுள்ளதாக இருந்தது.

அவரை தொடர்ந்து டெல்வாஸ் நிருவனத்தின் தொழில்நுட்ப இயக்குனர் திரு. விஜயகுமார் அவர்கள் டிஜிட்டல் கேபிள் டிவி தொழில்நுட்பத்தை மின்சாரத்தை சேமித்து கூடுதல் வருமானம் பெரும் வழிமுறைகள் பற்றி விளக்கினார். மிகவும் நேர்த்தியாக Presentation மூலம் Reverse Power Node பற்றி விளக்கம் அளித்தார். Node-ல் இருந்து ஒவ்வொரு வீடுகளுக்கும் சிக்னல் கொடுக்கப்படுகிறது. பொதுவாக Node-க்கு தனியாக பவர் கொடுக்க வேண்டும். 5v அல்லது 12V கொடுக்க வேண்டும். அது கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு கூடுதல் மின்சார கட்டணத்தை ஏற்படுத்தும். அதற்க்கு ஒரு மாற்று தொழில்நுட்பத்தை உருவாக்கி அதி பற்றி விவரித்தார். வீடுகளில் போடப்படும் செட் டாப் பாக்ஸ்-கு 5V அல்லது 12V பவர் சப்ளை கொடுப்பதுண்டு அந்த பவரை Reverse செய்து Node க்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் அதற்கென தனியாக மின்சாரம் இல்லாமல் Node வேலை செய்கிறது. உதாரணமாக ஒரு 4 OUT NODE-ல் இருந்து 4 செட் டாப் பாக்ஸ் இணைப்பு கொடுத்திருந்தால் அதில் ஏதாவது ஒரு செட் டாப் பாக்ஸ் ஆன் செய்தாலே NODE ஆன் ஆகிவிடும். இதன் மூலம் ஆபரேட்டர்கள் மின்சார செலவை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார். இந்த தொழில்நுட்பம் பற்றி அவர் கொடுத்த குறிப்புகள் பின் வருவன.

செட் டாப் பாக்ஸின் பவர் எடாப்ட்டரை கொண்டு ஃபீள்டில் உள்ள நோடு அல்லது ஏம்பிளீஃபாயரை செயல்படுத்தும் முறை.

செட் டாப் பாக்ஸின் பவர் எடாப்ட்டர் சராசரியாக 1000 மில்லி ஏம்பியர் கரண்ட் திறன் உடையது.  ஒரு செட் டாப் பாக்ஸ் செயல்பட 500 மில்லி ஏம்பியர் கரண்ட் போதுமானது. தமுள்ள 500 மில்லி ஏம்பியர் கரண்ட் P S D எனும் சாதனத்தின் மூலமாக அதன் IN கனெக்ட்டர் வழியாக நோடு அல்லது ஏப்ம்ளீஃபாயர் ஆவுட்டில் RF சிக்னல் வரும் கனெக்ட்டரில் கேபிள் வழியாக ரிவர்ஸில் செலுத்தப்படுகிறது.செட் டாப் பாக்ஸின் பவர் எடாப்ட்டர் ON செய்த உடன் கரண்ட் கேபிள் வழியாக வந்து நோடு அல்லது ஏப்ம்ளீஃபாயரை ON செய்துவிடுகிறது. பிறகு சிக்னல் அதே கேபிள் வழியாக P S D யின் IN க்கு வந்து OUT மூலமாக செட் டாப் பாக்ஸின் TUNER-க்கு சென்று விடுகிறது. இந்த முறையை கடைபிடித்தால் தனியாக பவர் எடுத்துச்செல்ல வேண்டியதில்லை. ஒரு செட் டாப் பாக்ஸின் பவர் எடாப்ட்டர் ON செய்தால்போதும்.

இதே முறையை அனைத்து செட் டாப் பாக்ஸ்களுக்கும் கையாளலாம். ஒரே நேரத்தில் அனைத்து செட் டாப் பாக்ஸின் பவர் எடாப்ட்டர் மூலமாக பாயும் கரண்டால் நோடு அல்லது ஏப்ம்ளீஃபாயர்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது.

கனெக்ஷன் செய்யும் முறைகீள் தரப்பட்ட வயரிங் டயாக்ரா மில்கான்பிக்கப்பட்டுளது.

இது பற்றி கூடுதல் விவரம் பெறுவதற்கு திரு.விஜயகுமார் அவர்களை அணுகலாம்.

மேலும் டிஜிட்டல் கேபிள் டிவி சிக்னலை நேர்த்தியாக கொண்டு சென்றால் மட்டுமே மக்களின் வரவேற்பை பெற முடியும். டிஜிட்டல் சிக்னலை அழைப்பதில் இருக்கும் மிக முக்கிய விஷயங்களான BER மற்றும் MER பற்றியும் அவர் எடுத்துரைத்தார்.

ஆப்ரேட்டர்களின் ஒற்றுமை - கூட்டமைப்பு தலைவர்கள்:

தமிழ்நாடு கேபிள் டிவி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் இந்த தொழில்நுட்ப கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கூட்டமைப்பு தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு.D.G.V.P. சேகர், மதுரை திரு. T.V. ரமேஷ், திருப்பூர் திரு. தங்கராசு ஆகியோர் பங்கேற்றனர். ஆப்ரேட்டர்களின் ஒற்றுமை பற்றி பேசிய திரு.D.G.V.P. சேகர், ஆபரேட்டர்கள் ஒன்று இனைந்து ஒரு டிஜிட்டல் கட்டுப்பாட்டறை அமைத்திருந்தால் இன்று எந்த நிறுவனத்திற்கும் அடிமைப்பட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். மேலும், தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தில் BANDWIDTH மிக முக்கிய விஷயம் அதற்காக இன்று டிஜிட்டல் MSO நிறுவனங்கள் ஆண்டிற்கு கோடி கணக்கில் செலவிடுகிறது. அந்த செலவு மறைமுகமாக ஆப்ரேட்டர்களை சேர்கிறது. இன்று இந்தியாவில் சொந்தமாக ஆப்டிகல் FIBER கட்டமைப்பு வைத்திருப்பது கடை கோடி ஆபரேட்டர்கள் தான். ஆபரேட்டர்கள் ஒற்றுமையாக செயல்பட்டால் தொழில் பாதுகாப்பு செய்து அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்ல முடியும் எனவும், கூடுதல் வருவாய் ஈட்டி தொழிலை மேன்படுத்த முடியும் என்றும் அவர் கூறினார்.

திருப்பூர் திரு. தங்கராசு அவர்கள் பேசுகையில், இன்று மத்திய அமைச்சக அதிகாரிகள் தமிழகத்திற்கு வந்து அனலாக் ஒளிபரப்பு பற்றி ஆய்வு செய்து வருகிறார்கள். மேலும், அரசு கேபிள் டிவி உட்பட டிஜிட்டல் உரிமம் வைத்துள்ள நிறுவனங்கள் அனலாக் ஒளிபரப்பை நிறுத்திட வேண்டும் எனவும், சேனல்கள் அனைத்தும் அனலாக் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் எனவும் கூறிவருகிறது. நானும், திரு. ரமேஷ் அவர்களும் தொடர்ந்து ஒரு கருத்தை பதிவு செய்து வருகிறோம். முழுமையாக டிஜிட்டல் செட் டாப் பாக்ஸ் நிறுவும் வரை அனலாக் கேபிள் சிக்னல் இருக்க வேண்டும். அப்படி நீடித்தால் மட்டுமே டிஜிட்டல் கேபிள் டிவியை விரிவு படுத்த முடியும். ஆப்ரேட்டர்களின் இணைப்புகளும் பாதுக்காக்க படும். என்ற கருத்தை வலியுறுத்தி பேசினார்.

அவரை தொடர்ந்து பேசிய நிஸ் பிராட்பேண்ட் நிறுவனத்தின் ஆலோசகர் திரு. யூசூப் ராஜா இன்டர்நெட் பற்றி பேசினார். கேபிள் டிவி ஆபரேட்டர்கள் இன்டர்நெட் செய்ய வேண்டியதன் முக்கியத்துவம் மற்றும் அதற்காக செய்ய வேண்டிய அடிப்படை கட்டமைப்பு பற்றி பேசினார். இன்டர்நெட் தொழில் செய்வதற்கு BANDWIDTH இன்று பல்வேறு நிறுவனங்கள் தருகிறார்கள். அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றி  ஆப்ரேட்டர்களுக்கு விவரித்தார்.

கூட்டமைப்பு தலைவர்களில் ஒருவரான திரு. -- ரமேஷ் அவர்களை நிகழ்ச்சியின் இறுதியில் பேசினார். பொதுவாகவே உணர்ச்சி போங்க பேச கூடிய இவரின் பேச்சை கேட்பதற்கு பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆப்ரேட்டர்களின் ஒற்றுமை என்ற தலைப்பில் பேச எங்களை அழைத்த போதே ஒரு விஷயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். ஆபரேட்டர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்பதே கசப்பான உண்மை என்று அவர் கூறினார். இன்று நிறுவனங்களுக்கு மத்தியில் இருக்கும் போட்டியில் புது ஆப்ரேட்டர்களை உருவாக்குகிறார்கள். அதை முறியடிக்க ஆபரேட்டர்கள் ஒற்றுமையாக இருந்தால் தான் வெல்ல முடியும். தொழில் பாதுகாப்பு செய்ய ஒற்றுமை மிக முக்கியம். கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கு இன்று தொழில்நுட்பத்தை விட வணிகத்தில் தான் நாட்டம் அதிகம் உள்ளது என்று கூறிய அவர், ஆபரேட்டர்கள் தொழில்நுட்ப ரீதியாக தங்களை மேன்படுத்தி கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார். மேலும், திரு. வடிவேலு அவர்கள் பற்றி பேசுகையில் ஆப்டிகல் நாயகன் என்றும், திரு. வடிவேலு இல்லாவிட்டால் தென் தமிழகத்தில் பல கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழில் நடக்காது என்று அவருக்கு புகழாரம் சூட்டினார். மேலும், டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழ் போன்ற நடுநிலை ஊடகம் கேபிள் டிவி துறைக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்றும் அவர் கூறினார்.

டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழ் சார்பில் அனைவருக்கும் சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி கவுரிக்கப்பட்டது.

இந்த டிஜிடெக் தொழில்நுட்ப கருத்தரங்கை வெற்றி கரமாக நடத்திட துணை நின்ற INNNO INSTRUMENT, நெல்லை கணேஷ் எலெக்ட்ரானிக்ஸ், NISS BROADBAND மற்றும் TELVASS SYSTEMS நிறுவனத்திற்கு டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் சார்பில் நன்றிகளை பதிவுசெய்கிறோம்.

அதே சமயம், இந்த பொதுவான நிகழ்விற்கு நேரில் வந்து பயன்பெற்று சிறப்பித்த அனைத்து கேபிள் டிவி ஆப்ரேட்டர்களுக்கும் நன்றிகளை சமர்ப்பிக்கிறது.

இது போன்ற டிஜிட்டல் கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் தொழில் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், செயல்முறை விளக்க கூட்டம் தமிழகத்தின் அனைத்து மாவட்ட, தாலுக்கா வாரியாக நடைபெறும். டிஜிடெக் தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் டிஜிடெக் தொழில் சுற்றுலா பற்றி கூடுதல் விவரம் தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ளலாம். 9843050963, digitechcatv@gmail.com