• Call Us : 90030 35559 , 98424 50963
டிஜிட்டல் MSO க்கள் சங்கத்தின் கூட்டம்

தமிழ்நாடு டிஜிட்டல் கேபிள் டிவி ஆபரேட்டர்ஸ் அசோசியேஷன் மாதாந்திர கூட்டம் திருச்சியில் 30-10-18 அன்று நடைபெற்றது. கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1) டிராய் MIB க்கு நன்றி சொல்லி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டிராய் நிர்வாகம்  பொதுமக்களுக்கும். கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் பாதிக்காத வண்ணம்  கட்டணம் சேனல் விலையை நிர்ணயம் செய்தது. இதை எதிர்த்து ஸ்டார் டிவி நிர்வாகம் கட்டண சேனல் விலையை நிர்ணயம் செய்யும் உரிமை டிராய் நிர்வாகத்திற்கு இல்லை என்று ஸ்டார்  டிவி  நிர்வாகம் சென்னை உயர்நீதிமன்றதில் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றதிலும், டில்லியில் உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு நடந்தது. இதில் டிராய் கட்டணம் நிர்ணயம் செய்யும் உரிமை  உண்டு என்று தீர்ப்பு வழங்கியது. மேலும் ஸ்டார் தொடர்ந்த  வழக்கை தள்ளுபடி செய்தார்கள். இந்த வழக்கு பல ஆண்டுகளாக நடைபெற்றது.

 டிராய் MIB  இதில்

வெற்றி கண்டார்கள் . இதன் பயனாக பொது மக்களும் ஆப்ரேட்டர் கூட்டு முயற்சியில் இயங்கும் டிஜிட்டல்  MSOவிற்கும் இந்த தீர்ப்பு  பாதுகாப்பாக உள்ளது. தொடர்ந்து பல்வேறு இடையூறுக்கு மத்தியில் முயற்சி செய்து வெற்றி பெற்ற டிராய் MIB க்கு எங்கள் சங்கத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

2) தமிழ்நாட்டில் சுமார் 25க்கும் மேற்பட்ட கூட்டு முயற்சியில் இயங்கும் எங்கள் சங்க உறுப்பினர்கள் (டிஜிட்டல் எம் எஸ் ஓ விற்கு) பிரி டு ஏர் சேனல் நிறுவனங்கள் சேனலை கொண்டு சொல்வதற்கு கட்டணம் (கேரியர் பிஸ்)  தரவேண்டும் என்று சங்கத்தின் சார்பாக அனைத்து free to air சேனல் நிறுவனங்களுக்கு சென்ற அக்டோபர் மாதம் சங்கத்தின் சார்பாக கடிதம் அனுப்பப்பட்டது சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தை முன்வந்து கேரியர் பீஸ் தருவதற்கு ஒத்துக்கொண்டார்கள் கடிதம் பெறப்பட்ட சில நிறுவனங்கள் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. வராத பட்சத்தில்  சேனல்கள் ஒளிபரப்புவதை பரிசீலனை செய்யப்படும். என்று முடிவு செய்யப்பட்டது.

3) கார்ப்பரேட் எம்எஸ்ஒக்கள் கூட்டுமுயற்சியில் இயங்கும் டிஜிட்டல் எம்எஸ்ஒ ஆபரேட்டர்களை இடையூறு செய்து கொண்டு செட்டாப் பாக்ஸ்களை சூழ்ச்சியால் அடாவடித்தனத்தால் .ஸ்வாப்பிங் செய்கிறாராகள். இது சம்பந்தமாக டிராய் MIB கவனத்திற்கு கொண்டு செல்ல கடிதம் கொடுப்பது என்று சங்கத்தின் சார்பாக முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கார்ப்பரேட் எம் எஸ் ஓ க்கள் தங்கள் போக்கை மாற்றி கொள்ள விட்டால் அனைத்து ஆபரேட்டர்களும் ஒன்று சேர்ந்து சம்பந்தப்பட்ட கார்ப்பரேட் எம் எஸ் ஓ அலுவலகத்திற்கு முன்பு போராட்டம் செய்வது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

4) அரசு கேபிள் டிவி நிர்வாகமும் கார்ப்பரேட் எம் எஸ் ஓ க்களும் பல்வேறு மாவட்டத்தில் புதிய ஆபரேட்டர்களை உருவாக்கி உள்ளார்கள். இது சம்பந்தமாக நவம்பர் 25 ஆம் தேதி தர்மபுரியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

5) ஜிஎஸ்டி சம்பந்தமாக மற்றும் டிடிஎஸ் சம்பந்தமாக ஆபரேட்டர்களுக்கு விதிமுறைகளைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு சிறந்த ஆடிட்டர்களை வைத்து டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் கருத்தரங்கம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது. இடம் பின்னர் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டத்தில் தலைவர் கில்டு A பாண்டி , செயலாளர் முனுசாமி பொருளாளர் சிவக்குமார் செயற்குழு உறுப்பினர் சாய் சிவா மற்றும் அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் கலந்து கொண்டார்கள்.