• Call Us : 90030 35559 , 98424 50963
சீரான இன்டர் கனெக்ட் ஒப்பந்தம் ,கேரேஜ் கட்டண விதிமுறைகளை முன்மொழிந்தது – TRAI…!!

இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் TRAI தொழில்துறை பங்குதாரர்களின் கருத்துகளுடன் தனிப்பட்ட முறை சில கருத்தாய்வுகளுக்கு பிறகு, வரைவு விதிகளை [தொலைத்தொடர்புகள் (ஒளிபரப்புத்துறை மற்றும் கேபிள் சேவைகள்) இடை இணைப்பு (DAS அமைப்புகள்) விதிகள், 2016] குறிப்பாணையும் அதற்கான விளக்கத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. வரைவுவிதிகளில் காணப்பட்ட முக்கிய அம்சங்கள் சில: டிஜிட்டலாக்க அமைப்பில் அதாவது DTH, HITS,DAS மற்றும் IPTV ஆகியவற்றிற்கு ஒரு பொதுவான பரஸ்பரத் தொடர்பு கட்டமைப்பு வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் அனைத்து DAS அமைப்பிலும் must carry செயல்படுத்த வேண்டும்… DPOs எனப்படும் சேனல் விநோயோக நிறுவனங்கள் கிடைக்கும் திறன்தன்மை உட்பட அதன் சேனல்கள் பற்றிய தகவல்களை கேரேஜ் கட்டணம் விகிதத்துடன் பொது அறிவிப்பு செய்ய வேண்டும் எனவும். சேனலின் சந்தாவை விட அல்லது சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 20 சதவீதம் அல்லது அதற்கு மேல் இருந்தால் ஒளிபரப்பாளர் கேரேஜ் கட்டணம் செலுத்த வேண்டாம். கேரேஜ் கட்டணம் விகிதம் மாதத்திற்கு சந்தாதாரர் ஒன்றுக்கு சேனல் ஒன்றுக்கு 20 பைசா என இருத்தல் வேண்டும். மேலும், கேரேஜ் கட்டணம் தொகை சந்தாதாரர்களின் எண்ணிக்கை அதிகரிக்க குறையும் எனவும் தெரிவித்துள்ளது. தொலைக்காட்சி சேனல்கள் விநியோகஸ்தர்கள் அவர்கள் ஏற்கனவே அறிவித்த கேரேஜ் கட்டண விகிதத்திலிருந்து 35% வரை மட்டுமே தள்ளுபடி வழங்கலாம். ரெபரன்ஸ் இண்டர்கனெக்சன் ஆஃபர் (RIO) க்கு ஏற்ப மட்டுமே இண்டர்கனெக்சன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட வேண்டும். விநியோக கட்டணம், கட்டண சேனல்களை விநியோகிப்பதற்காக DPOs எனப்படும் விநியோகர்களுக்கு சேனல் ஒளிபரப்பாளர்கள்… தங்களது கட்டண சேனல்கள் அல்லது கட்டண சேனல்களின் பேகேஜின் அதிகபட்ச சில்லறை விலையில் குறைந்தது 20% செலுத்த வேண்டும் சந்தா தணிக்கை மற்றும் தொழில்நுட்ப தணிக்கை கட்டமைப்பு ஏற்படுத்துதல் உள்ளிட்ட வற்றை வெளியிட்டுள்ளது மாதிரி இண்டர்கனெக்சன் ஒப்பந்தம் (MIA) மற்றும் ஸ்டாண்டர் இண்டர்கனெக்சன் ஒப்பந்தம் (SIA) HITS , IPTV மற்றும் MSOsகளுக்கும் பொருந்தும் எனவும் குறிப்பிட்டுள்ளது.