• Call Us : 90030 35559 , 98424 50963
புதிய LCO போட கூடாது... நீதி மன்றம் உத்தரவு

தமிழ் நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஏற்கனவே தொழில் செய்யும் அரசு கேபிள் நிறுவனத்தில் பதிந்துள்ள lco பகுதிகளில் வேறு lco போட கூடாது என மதுரை நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பை பெற்ற Tcoa சங்க மாநில தலைவர் திரு ஆறுமுகம் அவர்களின் அறிக்கை. தமிழக கேபிள் டிவி தொழில் செய்யும் நண்பர்களுக்கு வணக்கம் . தமிழக அரசு டிஜிடல் உரிமம் பெறாமல் ஆப்ரேடர்களின் கட்டண உயர்வு மற்றும் இதர கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் செவி சாய்க்கவில்லை . மேலும் மாறிவரும் தொழில் நுட்பத்தில் Lcd Led Smart டிவிகளின் வரவு பெரும் அச்சத்தை தந்து வருகிறது. நமது தொழில் Dth வசம் செல்லும் சூழ்நிலை உருவாகி வருகிறது. மேலும் மத்திய அரசின் டிஜிட்டல் கட்டாயத்தை நாமும் அமல் படுத்தும் சூழ்நிலை. தமிழகத்தை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் கட்டுபாட்டாறை அமைத்து விட்டு காத்து இருக்கிறது.அரசு கேபிள் நிறுவனமோ அதன் mso கூட்டங்களில் புதிதாக யாரவது சிக்னல் அளித்தால் அவர்கள் பகுதியில் புது lco போட அரசு கேபிள் நிறுவனம் அறிவுறுத்தி வருகிறது.இந்த அச்சநிலை போக்கி சுதந்திரமாக தொழில் புரிய மதுரை நீதி மன்றத்தை அணுகி நீதி கேட்டோம். தற்காலிக தடை ஆணை ஓன்று கிடைத்து உள்ளது . அரசு கேபிள் நிறுவனம் மதிய அரசை எதிர்த்து ஸ்டேட் ஆஸ் கோ என்கிற ஆணையை பெற்று தொழில் செய்து வருகிறது.இந்த ஆணைபடி இருதரப்பும் அன்றய நிலை படி நடந்து கொள்ளவேண்டும் என்பதே ஆணை.ஆனால் அரசு கேபிள் டிவி நிறுவனமோ புதிதாக Lco போடுகிறது Msoவை போடுகிறது செட்டாப் பாக்ஸ் வைக்கிறது Plc போடுகிறது. ஆணைக்கு மாறாக தனது தொழிலில் டெவலப்பிங் செய்கிறது.இது தவறு என்பதையும் 15 பக்க அபிடவிட்டில் குறிப்பிட்டு மிக குறிப்பாக புதிதாக Lco போடுவதை தடுக்க தடையாணை கேட்டோம். வழக்கு விசாரணைக்கு கடந்த 6 ம் தேதி வந்தது.பரபரப்பான விவாதத்தில் அரசு தரப்பு சீனியர் வழக்கறிஞர் சங்கம் இந்த வழக்கை தாக்கல் செய்தது தவறு என்றார். இதனால் பாதிக்கபட்ட யாரவது வழக்கு தொடர்ந்து இருந்தால் அது முறை அரசு கேபிள் நிறுவனத்தை முடக்க இந்த சங்கம் பல்வேறு இடையூறுகளை செய்து வருகிறது. நாங்கள் உண்மையில் தமிழகத்தில் இதுவரை எந்த Lco வும் புதிதாக போடபட வில்லை என ஓங்கி அடித்து வாதாடிநார்கள். நமது தரப்பு வழக்கறிஞர் சென்னையில் இருந்து சிறப்பு மற்றும் சீனியர் வழக்கறிஞர் திரு சுந்தரேசன் மற்றும் பிரச்சன்னா குழு பாதிக்க பட்டவர்கள் வழக்கு தொடர்ந்தால் அவர்களுக்கு அரசு கேபிள் சிக்னலை தடை செய்கிறது என்கிற விஷயத்தை எடுத்து சொல்ல அரசு தரப்பு வழக்கறிஞர் சங்கம் இது போன்ற வழக்குகளை தொடர்வது தவறு என்கிற பல உச்ச நீதி மன்ற தீர்ப்புகளை எடுத்து காட்டினார். ஆனால் நீதிபதி குறுக்கிட்டு நீங்கள் தான் புதிதாக Lco போட வில்லை என்கிறீர்களே அதை எழுத்து பூர்வமாக declaration தரமுடியுமா? என கேட்க அரசு கேபிள் நிறுவனத்திடம் பேசி தருகிறேன் என்று கால அவகாசம் கேட்க வழக்கை மதியம் 2.15க்கு ஒத்திவைத்தார். மதியம் 2.15 மணிக்கு வழக்கு விசாரனைக்கு வந்தபோது அரசு தரப்பு கடிதம் கொடுக்க புதிய Lco போடக்கூடாது என்கிற இடைகால தடையை நமக்கு சாதமாக நீதி பதி அளித்தார். ஒரு முக்கிய விஷயம் இந்த தடையாணை என்பது குறுகிய காலம் மட்டுமே.!! அரசு கேபிள் நிறுவனமே புதிய LCO போட மாட்டோம் என எழுத்தில் கொடுத்துள்ளதால் அரசு தரப்பு இதை எதிர்த்து அப்பில் செய்யாது. ஆனால் நீதிபதிக்கு வழக்கை விரைவில் முடிக்க பிரஷர் கொடுக்கபடலாம். நமது தரப்பிலும் சங்கம் வழக்கு தொடர்ந்தது செல்லாது என்கிற ஒரு நிலை உணரபடுகிறது. நமது அபிடவிட்டில் பல விஷயங்கள் உள்ளது. Mib யை வேற எதிர்கட்சியாக சேர்த்து உள்ளோம். நமது வழக்கறிஞர் நமக்கு அறிவுறுத்துவது புதிய Lco போடபடலாம் என்கிற அச்சம் உள்ள ஆப்ரடேர்கள் பேஜ் பெட்டிஷன் ஆக அவர்கள் பெயரில் தனிதனியாக ஆணை பெற அறிவுறுத்தி உள்ளார். எனவே இந்த ஆணை பொதுவாக அனைவருக்கும் பயன்படாது. என்னுடய வழக்கில் நான் tcoa சங்க உறுப்பினர்கள் 15178 பேரை இணைத்து இருந்தேன். ஆனால் இந்த ஆணை தமிழக கேபிள் டிவி ஆப்ரடர்கள் அனைவர்க்கும் பொருந்தும். மீண்டும் சொல்கிறேன் இந்த ஆணையை உறுதிபடுத்த ஒவ்வொருவரும் இந்த வழக்கில் இணைந்து கொண்டால் மட்டுமே பலன் உறுதி.டிசம்பர் 31 க்கு பிறகு அனலாக் முறை முழு தடை ஆகுவதால், இந்தியாவில் அனலாக் முறையில் தொழில் செய்யும் எந்த கட்டுபாட்டறைக்கும் கட்டணசேனல்கள் தனது சேனல் பாக்ஸ்களை வழங்க கூடாது என்கிற வழக்கை Mib மற்றும் முக்கிய கட்டண சானல்களை கட்சி சேர்த்து டெல்லி உச்ச நீதி மன்றத்தில் அடுத்த வழக்கை தொடர்ந்து உள்ளோம். அது அனேகமாக 21ஆம் தேதிக்கு பிறகு விசாரணக்கு வரலாம்.