• Call Us : 90030 35559 , 98424 50963
பொள்ளாச்சி தொழில்நுட்ப கருத்தரங்கம்

பொள்ளாச்சி டிஜிட்டல் கேபிள் விஷன் LLP மற்றும் டிஜிட்டல் மீடியா ரிப்போர்ட்டர் மாத இதழ் இணைந்து நடத்திய டிஜிட்டல் கேபிள் & இண்டநெட் தொழில்நுட்பம் பற்றிய கருத்தரங்கம் 29ம் தேதி(நவம்பர்) செவ்வாய் அன்று பொள்ளாச்சியில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் மதுரை கில்ட் பாண்டி அவர்கள் தலைமை வகித்தார். மேலும் இந்த நிகழ்ச்சியில் கோவை திரு. ரவீந்திரன், திருச்செந்தூர் திரு. பொன்ராஜ், மதுரை திரு. வடிவேல், திண்டுக்கல் திரு. கோகுல் தாஸ், திருப்பூர் திரு. தங்கராஜ் மற்றும் பல கேபிள் துறை வல்லுனர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்குபெற்றனர். மாலை 5 மணியளவில் தொடங்கபட்ட இந்த கருத்தரங்கில் பொள்ளாச்சி, கோவை, திண்டுக்கல், திருப்பூர் போன்ற பல பகுதிகளில் இருந்து சுமார் 250 ஆப்பரேட்டர்கள் கலந்து கொண்டனர்... மதுரை கில்ட் பாண்டி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். திருப்பூர் திரு. தங்கராஜ் வாழ்த்துறை வழங்கினார்... அவர் பேசுகையில் உலகத்தில் ௭௫௦௦௦ சந்த தரைகளை கொண்ட பெரிய MSO தமிழ்நாடு அரசு கேபிள் தான் என்று அவர் புகழாரம் சூட்டினார். மேலும், சன் குழுமத்தின் திரு. தயாநிதி மாறன் அவர்களுக்கும் பாலிமர் தொலைக்காட்சி உரிமையாளர் திரு. கல்யாண சுந்தரம் அவர்களுக்கும் ஒரே நாளில் பிறந்த நாள். அது டிசம்பர் 5 என குறிப்பிட்டார். அனால் பின்னர் அதுவே முன்னாள் முதல்வர் மாண்புமிகு செல்வி. ஜெயலலிதா அவர்களின் நினைவு நாளாக அமைந்தது. நாம் அரசு கேபிள் ஒளிபரப்பை தற்போது செய்து வந்தாலும், அடுத்த கட்டமாக டிஜிட்டலுக்கு தயாராக வேண்டும் என அவர் அறிவுறுத்தினார். தொழில்நுட்பம் எதனை தடைகள் இருந்தாலும் நம்முள் வந்தே தீரும் என்று கூறிய அவர் நாம் இன்று பயன் படுத்தும் smart phone களை உவமையாக கூறினார். பின்னர் கேபிள் துறையில் நவீன தொழில்நுட்பம் பற்றி திரு. பொன்ராஜ் அவர்கள் பேசினார்கள். அவர் பேசுகையில் புதிதாக வெளியிடப்பட்ட மொபைல் ஆப் கள் பற்றி கூறினார். அதில் கேபிள் ஆப்ரேட்டர்களுக்கு தேவையானவை பற்றி விவரமாக தெரிவித்தார். அவர் தனது பகுதியில் அவரின் நெட்ஒர்க்கில் அனலாக் சேவையினால் ஏற்படும் சிக்கல்கள் பற்றியும், வாடிக்கையாளர்களின் கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார். டிஜிட்டல் கேபிள் பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும் திரு. வடிவேல் அவரது பாணியில் விளக்கமளித்தார். ஆப்பரேட்டர்களின் சந்தேகங்களுக்கும் அவர் பதில் அளித்தார்... அப்போது, Digital செட் டாப் பாக்ஸ் பற்றிய விளக்கம் அளித்தார். புதிதாக அமைக்க படும் டிஜிட்டல் கட்டுப்பாடு அறைகளின் தொழில்நுடப் சேவையை பெரும்பாலும் திரு. வடிவேலு அவர்கள் மேற்கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் அடிப்படையில் அதன் தொழில்நுட்பங்கள் பற்றியும் பேசினார். ஆபரேட்டர்கள் புதிய தொழில்நுட்பங்களை அவசியம் கற்றுக்கொள்ளுதல் வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். மேலும், அவர் பேசுகையில் 1997 ம் ஆண்டு ESPN தொலைக்காட்சி தான் முதல் கட்டண சேனல் எனவும் கட்டண சேனல்களை அடிப்படையாக கொண்டு டிஜிட்டல் கேபிள் திட்டம் உருவாக்கப்பட்டது பற்றியும் அவர் பேசினார். ௧௯௯௦ களில் சுமார் ௧௫ முதல் ௨௦ சேனல்கள் இருந்த இடத்தில இன்று இந்தியாவில் அங்கீகாரம் பெட்ரா சேனல்கள் ௮௬௦ என்ற புள்ளி விவரத்தையும் தெரிவித்தார். தொழில்நுட்பம் அசுர வேகத்தில் வளர்ந்து வருவதால் நம்மை நாம் மேன்படுத்தி கொண்டால் மட்டுமே தொழில் நிலைக்க முடியும் என்றும், மற்ற புது தொழில்னநுட்பங்களை கண்டு அச்சம் கொள்ள தேவை இல்லை எனவும் தெரிவித்தார். கேபிள் டிவி துறையில் வர்த்தக ரீதியாக பல வழிகள் உள்ளது எனவும் அதற்க்கு தொழில்நுட்பம் சார்ந்து ஆஃப்ரேட்டர்கள் மென்பட வேண்டும் எனவும் அவர் கூறினார். அவரின் உரையாடல் பலரின் சந்தேகங்களுக்கு விடையாய் இருந்தது. சட்ட வல்லுனர் திரு. கோகுல் தாஸ் டிஜிட்டல் முறையில் கட்டண சேனல்களில் நிலைபாடு பற்றியும், தமிழக கேபிளில் உள்ள அரசியல் வர்த்தகம் பற்றியும் சிறப்பாக பேசினார்... மிக நீண்டநெடிய கருத்துக்களை தெரிவித்தார். பன்னாட்டு நிறுவனத்தின் வியாபார திட்டங்கள் பற்றியும் அதனால் ஆப்ரேட்டர்களுக்கு ஏற்படும் இடர்பாடுகள் பற்றியும் எடுத்துரைத்தார். மேலும், TRAI மற்றும் MIB அமைப்புகளுக்கும் தமிழக அரசிற்குமான நிலைப்பாட்டினை தெளிவு படுத்தினார். அதனை தொடர்ந்து கோவை ரவீந்திரன் அவர்கள் WIRED & WIRELESS இணையம் பற்றியும் அதன் வர்த்தகம் பற்றியும் மிகத்தெளிவான விளக்கம் அளித்தார். செயல்முறை விளக்கமாகவும், வீடியோக்கள் மூலமாகவும் தொழில்நுட்பங்களை விளக்கினார். நிகழ்ச்சியின் இருதியில் LCV அண்ணாச்சி அவர்கள் ஆப்பேரட்டகளுடன் கலந்துரையாடி தொழில் சார்ந்த கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். CTN திரு. ஹூசைன் அவர்களும் விருந்தினராக பங்கு பெற்றார். ஆப்பரேட்டர்களுக்கு இரவு சிற்றுண்டி ஏற்பாடு செய்யபட்டிருந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொள்ளாச்சி PDCV திரு. செந்தில், திரு. காசிராஜன், மற்றும் அவர்களது குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.