• Call Us : 90030 35559 , 98424 50963
அரசு கேபிள் டிவி டிஜிடல் உரிம விண்ணப்பம் மீதான முடிவை அமைச்சரவைக் குழு எடுக்குமா?

அரசு கேபிள் டிவி டிஜிடல் உரிமம் வேண்டி விண்ணப்பித்துள்ள விண்ணப்பம் தொடர்பாக கடந்த நான்கு ஆண்டுகளாக முடிவு எதுவும் எட்டப்படாமல் உள்ளது. அது தொடர்பாக முடிவு செய்ய மத்திய தகவல் ஔிபரப்புத் துறையின் அமைச்சரவைக் குழு கூட உள்ளது. அக்குழு டிராயின் வழிகாட்டுதல்படி செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டிராயின் வழிகாட்டுதலின்படி எந்த மாநில அரசும் கேபிள் டிவி நடத்த அனுமதி வழங்கக் கூடாது என்பதாகும்.) இந்த தகவலை லோக்சபையில் தகவல் ஔிபரப்புத்துறை ராஜாங்க அமைச்சர் ரத்தோர் தெரிவித்துள்ளார். மேலும் பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் ஔிபரப்புச் சேவையில் இறங்க விண்ணப்பித்திருந்தை அமைச்சகம் நிராகரித்துள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார். இந்த விண்ணப்பம் தொடர்பாக வழக்கொன்று சென்னை ஹைகோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதனால் அதிக எண்ணிக்கையில் கேபிள் டிவி இணைப்புகள் உள்ள தமிழ்நாட்டில் டிஜிடல் அமலாக்கம் தள்ளிப் போகிறது. முன்னதாக அரசு கேபிள் டிவி கார்பரேசன் சென்னை மாநகரத்திற்கு ஜனவரி 2, 2008ல் தற்காலிக CAS உரிமம் பெற்றுள்ளது. மேலும் DAS உரிமம் வேண்டி ஜீலை 5,2012 சென்னைக்கும், நவம்பர் 23,2012 மற்ற தமிழகப் பகுதிகளுக்கும் விண்ணப்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.