• Call Us : 90030 35559 , 98424 50963
டிஜிட்டல் கேபிள் பற்றிய நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு

டிஜிட்டல் கேபிள் பற்றிய நடுத்தர மக்களுக்கு விழிப்புணர்வு . திருச்சியில் TCCL நடத்திய முகாம் திருச்சி வரகனேரி பகுதியில் TCCL நிறுவனம் ஒரு விழிப்புணர்வு முகாம் நடத்தியது. ஆப்ரேட்டர்களிடம் டிஜிட்டல் கேபிளை கொண்டு செல்லும் முயற்சியில் பல அமைப்புகளும் வேலை செய்து வரும் நிலையில் பொது மக்களுக்கு நேரடியாக டிஜிட்டல் கேபிள் மற்றும் இணையம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த ஒரு முயற்சி செய்துள்ளது இந்நிறுவனம். ஒரு மஹாலில் இரண்டு தொலைக்காட்சியில் TCCL டிஜிட்டல் சிக்னலுடன் தொலைக்காட்சி பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படுகிறது. தொலைக்காட்சியில் சிக்னலின் தரம் மற்றும் அதன் சந்தா விவரங்கள் துண்டறிக்கையாக கொடுக்க படுகிறது. TCCL நிறுவனத்தின் திருச்சி மாவட்ட நிர்வாகிகள் பொது மக்களுக்கு சந்தா பற்றியும், இன்டர்நெட் பயன்பாடு பற்றியும் விளக்கம் தந்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திருச்சி திரு. விஷ்ணு வரதன் சிறப்பாக செய்திருந்தார். மேலும், TCCL நிறுவனம் கோவை மாவட்டத்திலும் தனது சிக்னலை கொண்டு சென்றுள்ளது என்றும் தெரிகிறது. நகர் பகுதியை தாண்டி திருச்சி மாவட்டம் லால்குடி தாலுக்காவில் TCCL நிறுவனம் வேலைகளை தொடங்கி சிக்னலை கொண்டு சென்றுள்ளது என்றும் தெரிகிறது. லால்குடி TCCL பணிகளை திரு. இளங்கோவன் ஏற்று செய்கிறார்.