• Call Us : 90030 35559 , 98424 50963
தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கங்கள் தாண்டி தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான கூட்டம்

தமிழகத்தின் கேபிள் ஆப்பரேட்டர்கள் சங்கங்கள் தாண்டி தங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல ஒருங்கிணைந்துள்ளனர். அவ்வாறான ஒருங்கிணைந்த கேபிள் ஆப்பரேட்டர்களின் கூட்டம் கடந்த 17-12-2016 அன்று திருச்சியில் நடைபெற்றது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருச்சி.திரு.விஸ்ணுவர்தன் மற்றும் அவரது குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர் இந்த ஒருங்கிணைப்பிற்கு ஆப்பரேட்டர்களின் சுயவிருப்ப அடிப்படையில் TCOA சங்க தலைவர் நெல்லை திரு. ஆறுமுகம், சங்க நிர்வாகி ஈரோடு திரு. சுரேஷ், தமிழக கேபிள் டிவி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கும்பகோணம் திரு. மனோகரன் மற்றும் திருப்பூர் திரு. தங்கராஜ், மற்றும் கோவை திரு. ரவீந்திரன் ஆகியோர் கூட்டத்தை வழிநடத்தினர். கூட்டத்தின் முக்கிய அம்சமாக கேபிள் டிவி உபகரணங்கள் மற்றும் இணையம் சார்ந்த உபகரணங்களை மார்க்கெட்டில் வாங்கப்படுவதை தாங்களே ஆன்-லைன் வியாபாரம் மூலம் கொள்முதல் செய்து விற்கலாம் என ஒரு முக்கிய முடிவு எடுக்கப்பட்டு சுயவிருப்பத்தின் பேரில் 200 பங்குதாரர்களை கொண்ட AMICOS MARKETING PRIVATE LIMITED என்னும் நிறுவனம் துவங்கப்பட்டது. (அமிகோஸ் என்றால் லத்தீன் மொழியில் நண்பர்கள் என்று அர்த்தமாம்) இது குறித்து நமக்கு கோவை திரு. ரவீந்திரன் அவர்கள் நமக்கு அளித்த செய்து குறிப்பில் AMICOS நிறுவனம் முறையாக பதிவு செய்யப்பட்டு அதன் ஆன்-லைன் வர்த்தக நிறுவனமாக www.goodsbuy.in என்னும் நிறுவனம் துவக்கவும் அச்சாரமிடப்பட்டது என்று அவர் தெரிவித்தார். விரைவில் இணையத்தில் வரவுள்ள goodsbuy.in தளத்தில் கேபிள் டிவி உபகரணங்களான OLT, ONU, EDFA, TRANSMITTER, SPLICING MACHINE, OPTICAL NODE, AMPLIFIER, SOLAR NODE & AMPLIFIER, SIGNAL TESTING METER, SPLITTER, TAPOFF, CONNECTORS, COAXIAL CABLE & OPTIC FIBER CABLE ஆகியனவும் இன்டெர்நெட் ஆப்பரேட்டர்களுக்கு தேவையான WIRED & WIRELESS EQUIPMENTS களும் ஆர்டர் செய்தால் டோர் டெலிவரியாக குறைந்த விலையில் விற்பனைக்கு வரவுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். மேலும் 20" முதல் 65" வரையிலான LED மற்றும் Smart TV கள் அதிரடி விலையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளன எனவும் இந்த TV களை கேபிள் ஆப்பரேட்டர்கள் தங்கள் தேவைக்குமன்றி தங்களது வாடிக்கையாளர்களுக்கும் சிறிய லாபம் வைத்து விற்பதால் அனைவருக்கும் உபரி வருமானம் கணிசமாக கிடைக்கும் எனவும் கூறுகிறார் திரு. ரவீந்திரன்.. ஆப்பரேட்டர்கள் நமது தளத்தில் ஆர்டர் செய்து தங்களின் வாடிக்கையாளர்களின் முகவரிக்கு நேரடியாக கிடைக்கும்படி செய்திடலாம். Goodsbuy.in இதோடு நின்றுவிடுவதில்லை, தமிழகத்தில் கேபிள் தொழில் புரியும் 25000 ற்க்கும் மேற்பட்ட ஆப்பரேட்டர்களின் குடும்பத்திற்கும், அவர்களின் உறவினர் மற்றும் நண்பர்களுக்கும் தேவையான அனைத்து எலக்ட்ரானிக், வீட்டு உபயோகப் பொருட்கள், புத்தகங்கள், ஆடை அணிகலன்கள், காலணிகள், மோட்டார் வாகன உபரி பொருட்கள், கணினிகள் மற்றும் கணினி சார்ந்த பொருட்கள், இன்னும் ஏராளமான தேவைப் பொருட்கள் அனைத்தையும் நேரடி விற்பனையாளர்களை தளத்தில் இணைத்து நமது தளத்தின் உத்திரவாதத்தின் பேரில் விற்பனை செய்யவும் உள்ளோம் என்ற திட்டங்களையும் அவர் நிறுவனத்தின் சார்பில் கூறியுள்ளார். இந்த ஆன்-லைன் வர்த்தகத்தில் கேபிள் ஆப்பரேட்டர்கள் தொழில் புரியும் பகுதிகளில் பிரபலமான பொருட்களை நமது தளத்தில் பட்டியலிட்டு இதன் மூலம் இந்தியா முழுமைக்கும் வியாபாரம் செய்து உபரி வருமானம் பெறவும் வழிவகை செய்யப்படுகிறது. இப்போது 200 ஆப்பரேட்டர்களின் பங்களிப்பில் பிரைவேட் நிறுவனமாகவுள்ள Amicos Marketing Private Limited (goodsbuy.in) விரைவில் அனைத்து தமிழக ஆப்பரேட்டர்களின் பங்களிப்பில் பப்ளிக் நிறுவனமாக உருமாறவும் திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். மேலும், இந்நிறுவனம் குறித்த உங்களது மேலான விசாரணைகள் வரவேற்கப்படுகின்றன என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த திட்டம் பற்றிய ஆப்ரேட்டர்களின் கேள்விகளுக்கு நிறுவனத்தின் சார்பில் திரு.ஈரோடு சுரேஷ் - 9842780014, திரு.குடந்தை மனோகரன் – 9786672345, திரு.கோவை ரவீந்திரன் – 9362755665 ஆகியரை தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.