• Call Us : 90030 35559 , 98424 50963
கேபிள் கட்டணத்தை போஸ்ட் ஆபீஸ் கட்டுவதா? அரசு கேபிள் நிறுவனத்திற்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்.

மதுரை முத்துக்குமாரின் பொது நல வழக்கிற்கு மதுரை கில்டு பாண்டி விளக்கம்... கேபிள் டிவி கட்டணத்தை மின் கட்டணம் போலவே மின் வாரியம் அல்லது தபால் நிலையங்களில் செலுத்திட வேண்டும் என்று மதுரை உயர் நீதி மன்ற கிளையில் மதுரை பெத்தானியாபுரத்தை சேர்ந்த முத்து குமார் என்ற வழக்கறிஞர் பொது நல வழக்கினை தொடர்ந்தார். இது கடந்த ஜனவரி 5ம் தேதி நீதிபதிகள் திரு. செல்வம் மற்றும் திரு, கலையரசன் ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது முத்துக்குமார் தனது மனுவில் கேபிள் இணைப்புகளின் கட்டணம் முறையாக மாநில அரசிற்கு கேபிள் ஆப்ரேட்டர்களால் செலுத்த படுவதில்லை எனவும். இணைப்புகளின் எண்ணிக்கையில் முரண்பாடு இருப்பதால் அரசிற்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அதே சமயம் இதனை ஒழுங்க படுத்த பொது மக்கள் மின் இணைப்பை போன்றே இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் வாரிய அலுவலகத்திலோ, தபால் நிலயத்திலோ செலுத்தலாம் என்றும் கோரிக்கை வைத்திருந்தார். அதனை பரிசீலனை செய்து ஐகோர்ட் கிளை அரசு கேபிள் நிறுவனத்திற்கும் அதன் இயக்குனருக்கும் ஒரு மாத காலத்திற்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்நிலையில் முத்துக்குமார் தொடர்ந்த இந்த பொது நல வழக்கிற்கு மதுரை கேபிள் ஆபரேட்டர்கள் கில்டு அமைப்பின் திரு. கில்டு பாண்டி அவர்கள் விளக்கம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டு உள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது: கேபிள் கட்டணம் போஸ்ட் ஆப்பிஸ் அல்லது EB முலம் மாதாந்திர கட்டணத்தை கட்ட மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முத்துகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இது சம்பந்தமாக 2012ம்ஆண்டு அரசு கேபிள் டிவி நிர்வாகம் வசூல் செய்வதற்க்கு தனியார் ஏஜன்ட்டை நியமித்தது. அதை எதிர்த்து எங்கள் சங்கத்தின் சார்பாக வழக்கு தொடர்ந்தோம் இறுதியாக தீர்ப்பு வழங்கபட்டது. அரசு தரப்பில் தனியார் ஏஜன்ட்டை நியமிக்கவில்லை பொதுமக்கள் ஆன்லைன் மற்றும் பேங்க் முலமாகவும் ஆப்ரேட்டர்கள் முலமாகவும் செலுத்தலாம் என்று நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்தார்கள், அதனையும் நீதியரசர் ஏற்று கொண்டு வழக்கை முடித்து வைத்தார். இதன் முலமாக வசூல் செய்ய தனியார் ஏஜன்ட்டுகள் தடுத்து நிறுத்தபட்டனர். இது எங்கள் சங்கத்துககு கிடைத்த வெற்றி மீண்டும் 2012 ஆம் ஆண்டு கேபிள் ஆப்ரேட்டர்ஸ் கில்டு சங்கத்தின் சார்பாக அரசு கேபிள் டிவி நிர்வாகம் அறிவித்த ருபாய் 70 கட்டணத்தை எதிர்த்து மதுரை உயர்நீதி மன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தோம் அந்த வழக்கு நிலுவையில் உள்ளது. கேபிள் கட்டனத்தை நிர்ணயம் செய்ய அரசு கேபிள் டிவி நிர்வாகத்திற்கு உரிமை இல்லை. கேபிள் கட்டணத்தை நிர்ணயம் செய்ய TRAI & MIB (மத்திய அரசு) க்கு தான் உரிமை உண்டு, குறைந்தபட்ச கட்டணம் ருபாய் 130 யை கேபிள் ஆப்ரேட்டர்கள் வசூல் செய்யலாம் என்று 2008ம் ஆண்டே TRAI அறிவுரித்தியுள்ளது. நாங்கள் தொடர்ந்த வழக்கில் TRAI & MIB அரசு கேபிள் டிவி நிர்வாகம் ஆகியோரை எதிர் மனுதாரராக சேர்த்துள்ளோம். இவர்கள் அனைவருக்கும் 2012ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இருந்து இவர்கள் அனைவருக்கும் நோட்டிஸ் அனுப்பபட்டது. இன்று வரை பதில் மனு தாக்கல் செய்யபடவில்லை தொடர்ந்து வாய்தா வாங்கி கொண்டே இருக்கிறார்கள். இது சம்பந்தமாக கேபிள் ஆப்ரேட்டர்ஸ் கில்டு உடன்டியாக வழக்கை விசாரனைக்கு கொண்டு வர சங்கக்கூட்டத்தை நடத்தி அனைத்து மாவட்டத்தில் உள்ள ஆப்ரேட்டர்களை அழைத்து கூட்டம் நடத்தி முடிவு செய்யபடும். தேதி வெகுவிரைவில் அறிவிக்கபடும். இவண், ஆப்ரேட்டர்ஸ் கில்டு.