• Call Us : 90030 35559 , 98424 50963
TRAI நிறுவனத்தின் பொது மக்கள் விழிப்புணர்வு கூட்டம்

TRAI நிறுவனத்தின் பொது மக்கள் விழிப்புணர்வு கூட்டம் சென்னையில் கடந்த டிசம்பர் மாதம் 21ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டம் TRAI அமைப்பின் ஹைதிராபாத் மண்டல அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த கூட்டத்தில் முன்னணி டெலிகாம் நிறுவனத்தின் NODAL OFFICERS மற்றும் மேல் முறையீடு அதிகாரிகள், பொது மக்கள் பங்கு பெற்றனர். இந்த கூட்டத்திற்கு TRAI ஹைதிராபாத் மண்டல அலுவலக கூடுதல் ஆலோசகர் திரு. பிரசாந்த் டக்லிகர் மற்றும் TRAI தலைமையக ஆலோசகர் திரு. ஷாஜி ஆப்ரஹாம் கலந்து கொண்டனர். முதல் கட்டமாக டிஜிட்டல் கேபிள் பற்றிய முறைகள் எடுத்துரைக்க பட்டது. டிஜிட்டல் கேபிள் ஆபரேட்டர் பொது மக்களுக்கு எது போன்ற சேவைகளை வழங்க வேண்டும் வேண்டும் பொது மக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. கேபிள் சந்தா தொகையினை ஆன்லைன் மற்றும் E PAYMENT மூலம் செலுத்தும் வசதியை ஒரு MSO செய்ய வேண்டும். 24 மணி நேர வாடிக்கையாளர் சேவை மையம் அமைத்து சேவைகளை கையாள வேண்டும். இது போன்ற சேவைகள் பொது மக்களுக்கு டிஜிட்டல் கேபிளில் தர தவிறினால் பொது மக்கள் நேரடியாக - நிறுவனத்தை முறையிடலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர். பின்னர், அனைத்து டெலிகாம் ஆப்பரேட்டர்கள் பற்றிய விளக்கம் தரப்பட்டது. MNP என்று சொல்லப்படும் MOBILE NUMBER PORTABILITY பற்றியும். VAS எனப்படும் VALUE ADDED SERVICES பற்றியும் TRAI நெறிமுறைகளை தெளிவு படுத்தினர். அதனை தொடர்ந்து முன்னணி மொபைல் நிறுவனத்தின் வடிவகையாளர் சேவை அதிகாரிகள் மற்றும் பிரதிநிதிகள் பங்கு பெற்றனர். நமது மொபைல் நெட்ஒர்க்கில் ஏற்படும் கோளாறுகளை வாடிக்கையாளர் சேவை மைத்திடம் 198 அல்லது 121 என்ற எண்ணில் அழைத்து புகாராக பதிவு செய்வோம். அது குறிப்பிட்ட நேரத்திற்குள் சரி செய்யப்படும். ஆனால், அது சரி செய்யப்படாத நிலையில் அடுத்த கட்டமாக நாதா நெட்வொர்க்கின் NODAL OFFICER அல்லது APPELLATE AUTHORITY என சொல்லப்படும் மேல்முறையீடு அதிகாரியிடம் அணுகலாம். அது கண்டிப்பாக அந்த பிரச்னையிக்கான தீர்வை தரும். அங்கும் சரியான தீர்வு கிடைக்க விட்டால். TRAI அமைப்பை அணுகலாம். அது போன்ற முன்னணி டெலிகாம் நெட்ஒர்க்களின் NODAL அதிகாரிகளின் தொடர்பு எண் அந்த கூட்டத்தில் வழங்கப்பட்டது. BSNL – திரு. ஸ்ரீதர் : 044 26411300 / 944024365 AIRTEL - திரு. மணிகண்டன் : 9840298886 AIRCEL - திரு. செந்தில்: 9551299210 VODAFONE - திரு. ஸ்ரீராம் : 9884098844 RELIANCE - திருமதி. வெங்கடேஸ்வரி ஆறுமுகம்: 1860 200 2611 TATA DOCOMO - திருமதி. அஜித்தா: 9043099555 IDEA - திரு. நாகராஜன்: 9092493805 JIO - திரு. டொய்ஸ்தான் ஆண்டனி: 7010019003 MTS - திரு. வைராம் வாசு: 9150955955