• Call Us : 90030 35559 , 98424 50963
முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவை தொடர்ந்து திருமதி. சசிகலா அ.இ.அ.தி.மு கட்சியின் பொது செயலாளராக பதவி ஏற்பாரா?

முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதா மறைவை தொடர்ந்து திருமதி. சசிகலா அ.இ.அ.தி.மு கட்சியின் பொது செயலாளராக பதவி ஏற்றுள்ளார். அதற்க்கு முன்னரே பல அமைப்புகளும், கட்சியினரும் சின்னம்மா என்று அழைக்கப்படும் சசிகலாவை நேரில் சந்தித்து பேசினார். அதே போல், கேபிள் மற்றும் தொலைக்காட்சி துறையை சார்ந்த பலர் சசிகலாவை போயஸ் தோட்டத்தில் நேரில் சந்தித்தனர். அந்த சந்திப்பின் பொது என பேசப்பட்டது என்ற முறையான தகவல் இது வரை இல்லை. செல்வி. ஜெயலலிதா வின் மறைவிற்கான அனுதாப சந்திப்பா அல்லது மரியாதை நிமித்தமான சந்திப்பா என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் சசிகலா தரப்பினர் முன்னரே கேபிள் துறையில் (சூப்பர் டூப்பர்) இருந்துள்ளனர் என்பதும் சசிகலா தமிழகத்தின் முதல்வராக பதிவு ஏற்க வாய்ப்புகள் உள்ளது என்ற செய்தியும் குறிப்பிடத்தக்கது.