• Call Us : 90030 35559 , 98424 50963
டிஜிட்டல் அமலாக்கம் காலக்கெடு நீட்டிப்பு

டிஜிட்டல் அமலாக்கத்தின் தொடர்பாக டில்லி உயர் நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சகம் சார்பில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்பட்டது. எனினும், டிஜிட்டல் அமலாக்கத்திற்கு அமைச்சகம் முழுமையாக தயாராகாத நிலையில் முழுமையான டிஜிட்டல் அமலாக்கத்திற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக டிஜிட்டல் அமலாக்கம் 4 கட்டமாக பிரிக்கப்பட்டது. அதில் PHASE III மற்றும் PHASE IV அமலாக்கம் நிலுவையில் உள்ளது. இந்த PHASE III ல் நாட்டின் நகர் புறங்களில் டிஜிட்டல் கேபிள் அமலாக்கம் செய்யப்படும். PHASE IV ல் எஞ்சி இருக்கும் மீதமுள்ள பகுதிகளிலும் டிஜிட்டல் கேபிள் அமலாக்கம் செய்யப்படும். காலக்கெடு: முன்னதாக PHASE IV அமலாக்கத்திற்கான 2016 டிசம்பர் 31 வரை விதிக்கப்பட்டிருந்தது. டிசம்பர் 31 க்கு மேல் டிஜிட்டல் உரிமம் இல்லாத MSO க்களுக்கு கட்டண சேனல்களின் சிக்னல் துண்டிக்கப்படும் என்றும் அதில் அறிவிக்க பட்டிருந்தது. தமிழகத்தை பொறுத்த வரையில் அரசு கேபிள் நிறுவனம் அனலாக் சிக்னலை வழங்கி வருகிறது. டிஜிட்டல் உரிமம் பெறுவதற்கும் மத்திய அரசிடம் விண்ணப்பித்து இருந்தது. அனால், மத்திய அமைச்சகத்தின் கோட்பாடு படி டிஜிட்டல் கேபிள் அமலாக்கத்தில் எந்த மாநில அரசிற்கும் உரிமம் வழங்க கூடாது என்ற நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதனால் தமிழக அரசு கேபிள் நிறுவனத்திற்கு டிஜிட்டல் உரிமம் கிடைப்பதில் இழுபறி இருந்து வருகிறது. அதனால் கட்டண சேனல்களின் இணைப்பு துண்டிக்கப்படாமல் இருக்க சென்னை உயர் நீதி மன்றத்தில் அரசு கேபிள் ஒரு நீட்டிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்திய முழுவதும் கணக்கிட்டால் மொத்தம் 6000 MSO நிறுவனம் உள்ளது. அதில் சரியாக 1300 பேர் மட்டுமே டிஜிட்டல் உரிமம் விண்ணப்பித்து உள்ளனர். எனவே, பெரும்பான்மையான அளவு டிஜிட்டல் MSO க்கள் இடம் பெற வேண்டும் என்ற நோக்கத்தினால் இந்த கால கேடு நீட்டிப்பு அறிவிக்க பட்டுள்ளது. இதற்கிடையில் தமிழகத்தில் டிஜிட்டல் அமலாக்கம் பற்றிய தெளிவான நிலைப்பாடு எடுக்கப்படும் என்று அமைச்சகம் நம்பிக்கை அளித்துள்ளது.