• Call Us : 90030 35559 , 98424 50963
இந்தியாவில் தயாரிக்க படும் செட் டாப் பாக்ஸ்கள்...

சீனாவை சேர்ந்த CHANGHONG ELECTRIC INDIA PVT LTD இது தனது இந்திய அலுவல திருப்பு விழாவினை அவர்களது பங்குதார்கள் SAIMAA TECHNOLOGIES LLP நிறுவனத்துடன் இனைந்து கடந்த டிசம்பர் மாதம் 5 ம் தேதி மும்பையில் ஒரு மாபெரும் நிகழ்ச்சியாக நடத்தினார்கள். இதனால் PHASE 3 மற்றும் PHASE 4 டிஜிட்டல் அமலாக்கம் நிலுவையில் உள்ள பகுதிகளின் தேவை என்ன என்பது இந்த நிறுவனத்திற்கு தெரிய கூடம் என்று நம்ப படுகிறது. இந்திய அரசு MAKE IN INDIA என்ற திட்டத்தை கொண்டு வந்த பின்னர் கேபிள் துறையில் பல்வேறு நன்மைகள் அரங்கேறி வருகிறது. CHANGHONG நிறுவனம் தனது செட் டாப் பாக்ஸ்களை இந்தியாவில் தயார் செய்வதால் மிக குறைந்த விலையில் இனி செட் டாப் பாக்ஸ்கள் கிடைக்கும் வாய்ப்புகளும் உள்ளது. இது வரை அமெரிக்கா டாலர்களில் பெற்று வந்த செட் டாப் பாக்ஸ்களை நமது இந்திய ரூபாய்களில் பெற்று கொள்ளும் வசதியும் கிடைக்கிறது. இந்திய டிஜிட்டல் துரையின் ஒரு முக்கிய பிரமுகரும் CHANGHONG நிறுவனத்தின் உயர் நிர்வாகியுமான திரு. டெக்சன் குவோ, SICHUAN CHANGHONG NETWORK TECHNOLOGIES CO., LTD. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரிச்சர்ட் செங் லி, CHANGHONG ELECTRIC INDIA PVT. LTD. நிறுவனத்தின் CEO திரு. மார்ட்டின் ஜியாங் கலந்து கொண்டனர். பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றினார்... திரு. டெக்சன் குவோ பேசும் பொது செட் டாப் பாக்ஸ்கள் தயாரிப்பு எங்களது தலைமையகத்தில் நடைபெற்றாலும் சரி, இந்தியாவில் நடைபெற்றாலும் சரி எங்கள் நிறுவனம் ஒரு தரத்திலும், செயல்பாட்டிலும் குறை வைக்காது என்று கூறினார். மேலும், அவர் பேசுகையில் இந்திய சந்தையை புரிந்து கொள்ள இந்தியர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சைனாவில் பயிற்ச்சி அளித்து பின்னர் இந்தியா தயாரிப்புகளில் ஈடுபடுத்த திட்டமிடபட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இந்திய அரசின் -- திட்டத்தில் இனைந்து வேலை செய்வதும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதும் மிகவும் மகிழ்ச்சி தருவதாகவும் அவர் தெரிவித்தார். SICHUAN CHANGHONG NETWORK TECHNOLOGIES CO., LTD. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. ரிச்சர்ட் செங் லி பேசும் பொது அவர் கூறியதாவது. இந்த துரையின் அடுத்த பெரிய அலை இணையம் தான். அதனால் செட் டாப் பாக்ஸ்கள் மட்டுமின்றி இணையத்திலும் -- நிறுவனம் சரியான கவனம் செலுத்தி வருகிறது என்றும் இணையதள பயணப்பாட்டிற்கு தேவையான உபரி பொருட்களையும் இந்தியாவிலேயே தயாரிக்கும் திட்டங்களும் நிறுவனத்திற்கு இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எங்கள் விருப்பத்தின் படியே துரிதமான சேவை இனி வழங்க முடியும் என்றும் அதற்க்கு மும்பையில் செயல்பட போகும் இந்திய கிளை மிகவும் உதவியாக இருக்கும் என்றும் அவர் கூறினார். அடுத்ததாக CHANGHONG ELECTRIC INDIA PVT. LTD. நிறுவனத்தின் CEO திரு. மார்ட்டின் ஜியாங் CHANGHONG நிறுவனம் இந்தியாவில் கடந்த 2007 ம் ஆண்டு முதல் இது வரை கடந்து வந்த வளர்ச்சி பாதையை குறிப்பிட்டு பேசினார். இந்த பயணம் மிகவும் வியப்பளித்தாகவும், மேலும் இது வரை 20 மில்லியன் செட் டாப் பாக்ஸ்களை CHANGHONG நிறுவனம் விற்பனை செய்துள்ளது என்றும் அவர் பெருமிதம் கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் DEN NETWORKS ன் CTO திரு. சஞ்சய் ஜெயின், GTPL HATHWAY PVT. LTD. நிறுவனத்தின் COO திரு. ஷாஜி மெத்திவ், RELIANCE BIG TV LTD நிறுவனத்தின் HOME BUSINESS தலைமை அதிகாரி திரு. விவேக் கார்க் ஆகியோர் கலந்து கொண்டு டிஜிட்டல் டி.வி. பற்றிய தங்களின் பார்வை, வருங்கால முன்னேற்றம், அனலாக் சிக்னல் டிஜிட்டலுக்கு மாற்றப்படுவது மற்றும் -- நிறுவனத்தின் பங்களிப்பு பற்றி பேசினார்கள். CHANGHONG நிறுவனத்துடன் இனைந்து MAKE IN INDIA திட்டத்தில் வேலை செய்வது பற்றிய அனுபவங்களை SAIMAA TECHNOLOGIES LLP நிறுவனத்தின் பங்குதாரர் திரு, சூரஜ் கட்டாரா பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது மூலோபாய உடன்பாட்டின் மூலம் இந்திய சந்தைக்கு சேவை செய்ய காத்திருப்பதில் மகிழ்ச்சி என்றும் அவர் கூறினார்.