• Call Us : 90030 35559 , 98424 50963
தமிழகத்தில் டிஜிட்டல் கேபிள் முழுமையாக அமலாக்க செய்ய இன்னும் எத்தனை ஆண்டுகள்?

தமிழகத்தில் டிஜிட்டல் கேபிள் முழுமையாக அமலாக்க செய்ய இன்னும் 10 ஆண்டுகள் ஆகும் – T.V. ரமேஷ் திட்டவட்டம் தமிழ்நாடு கேபிள் டிவி உரிமையாளர் மற்றும் நுகர்வோர் சங்கத்தின் மாநில தலைவர் திரு. T.V. ரமேஷ் அவர்களை சந்திக்க சென்றோம். பல ஆப்ரேட்டர்களின் கேள்விகளுக்கு ஒரு விடை பிறக்கும் என்ற எண்ணத்துடன் அவரை நாங்கள் அணுகி சில கேள்விகளை முன் வைத்தோம். அது வரிசையாக பின் வருவன சார் வணக்கம். தமிழகத்தில் டிஜிட்டல் கேபிள் பற்றிய குழப்பம் ஆப்பரேட்டர்கள் மத்தியில் நீடித்து வருகிறதே. அது பற்றி உங்கள் கருத்து? ஆப்பரேட்டர்கள் சிலர் மட்டுமே குழப்பத்தில் உள்ளனர். பலர் தெளிவாக இருக்கிறோம்., டிஜிட்டல் அமலாக்கம் கண்டிப்பாக உடனடியாக நடக்காது. PHASE 1 கால அவகாசம் முடிந்து எத்தனை ஆண்டுகள் ஆகிறது என்று கணக்கிட்டு பாருங்கள். சென்னையில் இது வரை அனலாக் முழுமையாக டிஜிட்டலுக்கு மாற்ற படவில்லை. இதுவே பெரிய உதாரணம் PHASE 3 மற்றும் PHASE 4 க்கும் இதே நிலை தான் என்பதற்கு, என விறு விருப்புடன் பேச தொடங்கினார். பின்னர், அரசு கேபிள் பற்றி நாங்கள் கேட்காமலே அவர் விமர்சனங்களை முன் வைத்தார். எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழக அரசு என்பது மிகவும் வலிமை வாய்ந்தது, அரசு கேபிள் நிறுவனத்தை அவ்வளவு எளிதாக கணக்கிட முடியாது. இன்று அப்பரேட்டர்கள் ஒரு எக்கு கோட்டையில் பத்திரமாக தொழில் செய்கிறார்கள் என்றால் அதற்கு அரசு கேபிள் நிறுவனம் ஒரு பெரிய காரணம். அரசு கேபிள் நிறுவனத்திற்கு முன்னர் கட்டண சேனல்களின் ஆதிக்கம் ஆப்பரேட்டர்கள் மத்தியில் மேலோங்கி இருந்தது எனவும் அவர் சுட்டி காண்பித்தார். அரசு கேபிள் நிறுவனம் குறைந்த தொகையில் பல சேனல்கள் வழங்குவது ஆப்ரேட்டர்களுக்கு பெரும் நன்மை எனவும் அவர் தெரிவித்தார். சார், 10 ஆண்டு காலம் என்பது மீண்டும் ஒரு பெரிய இடைவெளியாக தெரிகிறதே. நிஜமாகவே டிஜிட்டல் அமலாக்கம் அவ்வளவு தொலைவில் உள்ளதா..? கண்டிப்பாக. அமலாக்கம் என்பது இன்று இரவே கூட நடைபெறலாம் அனால் மக்கள் விரும்பினால் மட்டுமே இது 100 சதவீதம் சாத்தியம். இரண்டியிராம் ருபாய் எடுக்க வரிசையில் நிற்கும் நடுத்தர மக்கள் அந்த தொகை கொடுத்து செட் டாப் பாக்ஸ் வாங்க தயாரா? என்ற கேள்வி நீங்களே கேட்டு பாருங்கள் என்று சிந்திக்க வைக்கிறார் T.V.ரமேஷ். மேலும், மத்திய அரசின் DIGITALIZATION முறையை நீங்கள் உற்று நோக்கினால் அது எந்த ஆப்ரேட்டரையும் டிஜிட்டலுக்கு மாற சொல்லவில்லை. மக்களை தான் டிஜிட்டலுக்கு மாற சொல்கிறது. அதனால் மக்கள் மத்தியில் டிஜிட்டல் கேபிள் விழிப்புணர்வு ஏற்பட்டால் டிஜிட்டல் அமலாக்கம் துரிதம் அடையும். சார் அப்படி என்றால் சில டிஜிட்டல் MSO நிறுவனங்கள் நேரடியாக மக்களை சென்று விழுப்புணர்வு ஏற்படுத்துகிறதே.! அது பற்றி உங்கள் கருத்து.? (சிரித்து கொண்டே...) அவர்கள் முதலில் ஆப்ரேட்டர்களையே அணுகி இருப்பார்கள். அந்த அணுகுமுறை முறையாக இருந்திருக்காது. அந்த முரண்பாட்டினால் ஆப்ரேட்டர்களிடம் இருந்து முறையான பதில் கிடைத்திருக்காது. எனவே, வேறு வழியின்றி நேரடியாக பொது மக்களை அணுகுகிறார்கள். அப்படி மக்களுக்கு விழிப்புணர்வு கிடைத்தால் நல்ல விஷயம் தான். டிஜிட்டல் MSO க்களுக்கு உங்கள் தரப்பில் நீங்கள் கூற விரும்புவது என்ன சார்? அணைத்து டிஜிட்டல் MSO களும் எனது நண்பர்களே, நாங்கள் பல ஆண்டுகளாக ஒன்றாக தொழில் இருந்தவர்கள் தான். இன்று டிஜிட்டல் என்ற போட்டியில் அவரவர் ஒவ்வொரு பெயரில் நிறுவனம் தொடங்கி செயல்பட்டு வருகின்றனர். நான், எனது தரப்பில் கூறுவது, எந்த நிறுவனம் என்னை அணுகினாலும் நான் ஒத்துழைக்க தயார். எனது வாடிக்கையாளர்கள் எந்த நிறுவனத்தின் டிஜிட்டல் இணைப்பு கேட்டாலும் கண்டிப்பாக அந்த நிறுவனத்தின் இணைப்பினை நான் பெற்று கொடுப்பேன். என்று உறுதி பட கூறினார். இறுதியில் நாங்கள் புறப்படும் முன்னரும் கூட, "சார் எழுதி வெச்சுக்கோங்க முழுமையா டிஜிட்டல் வருவதற்கு இன்னும் 10 வருஷம் ஆகும்" என உரக்க கூறி எங்களை புன்னகையுடன் வழி அனுப்பினார்.